பி. கக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பி. கக்கன்.jpg
கக்கன் படம் கொண்ட அஞ்சல் தலை

கக்கன் (Kakkan, ஜூன் 18, 1908டிசம்பர் 23, 1981),[1] விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார்.கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆவர்.

இளமைக்காலம்[தொகு]

கக்கன் ஜூன் 18, 1907 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு பறையர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக)ப் பணிபுரிந்தவர்.தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்[2][3] படிப்பை படித்தார்.

இந்திய விடுதலை போராட்டம்[தொகு]

கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார்.[4] அன்றைய காலகட்டத்தில் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாகத் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யப்பட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் பறையர்கள் மற்றும் சாணர்களைத் தலைமை தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார்[4]. ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் [4] அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று [4] 1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார்.

சுதந்திர இந்தியாவில் அரசியல் பணி[தொகு]

கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்[5].காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்[6][7][8]. 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை,ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார்[9][10]. மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்[5]. ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்[11]. அக்டோபர் 3, 1963 [5] அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார்[12]

நற்பணிகள்[தொகு]

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் [4] கட்டப்பட்டன. ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம்[4] உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் [4]மதராசு மகாணத்தில் துவக்கப்பட்டன. இவர் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999[4] ஆண்டு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது.

இறுதி காலம்[தொகு]

மேலூர் (தெற்கு) தொகுதியில் 1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார்[13]. இத்தேர்தல் தோல்விக்குப்பின் 1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர் பொறுப்பு வகித்தார். 1973 இல் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.

தனிக் கருத்து போக்கு[தொகு]

கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். மகாத்மா கந்தியின் வழியை பின்பற்றி நடப்பவர். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பி. கக்கன் 10". தி இந்து. பார்த்த நாள் 18 சூன் 2015.
  2. தமிழ்நாடு சட்டமன்றம். 'மதராசு சட்டமன்றத்தில் யார் எவர்? 1957'. சட்டமன்றக் குழு, 1957, p. 27.
  3. "பி. கக்கன் 10". தி இந்து (தமிழ் நாளிதழ்). பார்த்த நாள் 2015-06-19.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 "24. சுதந்திர பாராட்ட வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு". பத்திரிகையாளர் சம்மேளனத்தின் நடப்பு வெளியீடுகள். பத்திரிகையாளர் சம்மேளனம், இந்திய அரசு. பார்த்த நாள் 2008-10-29.
  5. 5.0 5.1 5.2 இந்தியாவில் யாருடன் யார். கைடு பதிப்பகம். 1967. பக். 64. 
  6. முத்துசாமி, எம். எஸ். (1988). கு. காமராசர்: சமூக அரசியல் ஆய்வு. தமிழ்நாடு அரசியல் அறிவியல் கழகம். பக். 101. 
  7. நரசிம்மன், வி. கே. (1967). காமராசர்: ஆய்வு. மணக்தலாஸ். பக். 71. 
  8. "கக்கன் டி.என்.சி.சி தலைவர்". த இந்து : இந்த நாள் அந்த காலம். டிசம்பர் 30, 2004. http://www.hindu.com/2004/12/30/stories/2004123000240902.htm. பார்த்த நாள்: 2008-10-29. 
  9. "அமைச்சரவை". மதராஸ் சட்டமன்றம் 1957–1962. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. பார்த்த நாள் 2008-10-29.
  10. "அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்". மதராஸ் சட்டமன்றப் பேரவை 1957–1962. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. பார்த்த நாள் 2008-10-29.
  11. "மதராஸ் சட்டமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம் -மார்ச் 29 முதல் மே 7, 1962 வரை". மதராஸ் சட்டமன்றம் 1962–1967. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. பார்த்த நாள் 2008-10-29.
  12. நீதிக்கட்சியின் பொன்விழாக் கொண்டாட்டம், 1968. நீதிக்கட்சி. 1968. பக். 68. 
  13. "1967 இல் நடைபெற்ற மதராஸ் சட்டமன்றத் தேர்தலின் புள்ளியியல் வெளியூடு". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 2008-10-30.
  14. ரிச்மென், பவுலா (1991). தெற்காசியாவின் மாறுபட்டத் தனமை கொண்ட பண்பாடுகள், அத்தியாயம் 9: ஈ. வெ. ராமசாமியின் இராமாயண வாசிப்பு. கலிபோர்னியா பல்கல்க்கழகம். http://www.escholarship.org/editions/view?docId=ft3j49n8h7&chunk.id=d0e9800&toc.depth=1&toc.id=d0e9800&brand=eschol. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கக்கன்&oldid=2433583" இருந்து மீள்விக்கப்பட்டது