சேரன் (திரைப்பட இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் மாணவர்களுக்கு சேரன் உரையாற்றுகின்றார்,

சேரன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவரது மூன்று திரைப்படங்கள் தேசிய விருதைப் பெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்துக்கும்[1], 2004 ஆம் ஆண்டில் 'ஆட்டோகிராப்' திரைப்படத்துக்கும்[2], 2005 ஆம் ஆண்டில் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன[3].
இவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தவர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் திரைப்படக்கலை பயின்றவர்[4]. நடிகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். இதுவரை இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் முரண் எனும் திரைப்படத்தினை தயாரித்தார்.[5]

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், ஜூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர். [1], [2]

விமர்சனம்[தொகு]

ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சேரன் "இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே, நாங்கள் எல்லாம், திரையுலகமே குரல் கொடுத்துள்ளோம். .. எங்களுடைய எல்லாவற்றையும் இழந்துவிட்டுப் போராடியுள்ளோம்... ஏன் இதையெல்லாம் பண்ணினோம் என்று அருவருப்பாகவுள்ளது..."[6] என்று முறையற்ற டிவிடி மற்றும் இணையப் பதிவேற்றம் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது.[7] பின்னர், தான் குறிப்பிட்டது குறிப்பிட்ட சிலரைத்தான் ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களையும் அல்ல என சேரனால் மறுப்பு வெளியிடப்பட்டது.[8] ஆயினும், இலங்கைத் தமிழர்கள் சார்பில் சேரன் போராட்டத்தையும் முறையற்ற டிவிடி விடயத்தையும் தொடர்புபடுத்தியிருக்கக் கூடாது என்றும், வியாபாரத்தையும் போராட்டத்தையும் சேர்க்க வேண்டாம் என்றும், அல்லது இலங்கைத் தமிழர்களுக்காக என்பதில் சில அல்லது குறிப்பிட்ட இலங்கைத் தமிழர்களுக்காக என தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் பதிலளிக்கப்பட்டது.[9][10]

சேரன் இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி விருதுகள்
1997 பாரதி கண்ணம்மா தமிழ்
1998 தேசிய கீதம் தமிழ் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
பொற்காலம் தமிழ்
2000 வெற்றிக் கொடி கட்டு தமிழ் சமூக நலன்கள் பகுப்பில் சிறந்த திரைப்படம், தேசிய விருது
2001 பாண்டவர் பூமி தமிழ் சிறந்த இயக்குநர், பிலிம்பேர் விருது (தமிழ்)
2004 ஆட்டோகிராப் தமிழ் சிறந்த இயக்குநர், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது; சிறந்த இயக்குநர், பிலிம்பேர் விருது (தமிழ்); சிறந்த திரைப்படம் பிலிம்பேர் விருது (தமிழ்)
2005 தவமாய் தவமிருந்து தமிழ் குடும்ப நலன்களுக்கான திரைப்படம் என்ற பகுப்பில் சிறந்த இயக்குநர், தேசிய விருது
2007 மாயக்கண்ணாடி தமிழ்
2009 பொக்கிசம் தமிழ் சிறந்த இயக்குநருக்கான விஜய் விருதுக்கு முன்மொழியப்பட்டது
2011 ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை தமிழ்

சேரன் நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்பு
2002 காதல் வைரசு இயக்குநர் சேரனாக
சொல்ல மறந்த கதை சிவதாணு கதாநாயகனாக அறிமுகம்
2004 ஆட்டோகிராப் செந்தில்
2005 தவமாய் தவமிருந்து இராமலிங்கம் முத்தையா
2007 மாயக்கண்ணாடி குமார்
2008 பிரிவோம் சந்திப்போம் நடேசன்
ராமன் தேடிய சீதை வேணுகோபால்
2009 பொக்கிசம் லெனின்
2011 யுத்தம் செய் ஜே.கிருஷ்ணமூர்த்தி
முரண் நந்தா
ஆடும் கூத்து 2005 இலிருந்து வெளியிடப்படவில்லை. ஆனால் Zee Tamil தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]