சேரன் பாண்டியன்
| சேரன் பாண்டியன் | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
| தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
| கதை | கே. எஸ். ரவிக்குமார் ஈரோடு சௌந்தர் (வசனம்) |
| இசை | சௌந்தர்யன் |
| நடிப்பு | சரத்குமார் ஸ்ரீஜா விஜயகுமார் நாகேஷ் ஆனந்த் பாபு மஞ்சுளா விஜயகுமார் சித்ரா கவுண்டமணி செந்தில் கே. எஸ். ரவிக்குமார் |
| ஒளிப்பதிவு | அசோக்ராஜன் |
| படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
| கலையகம் | சூப்பர் குட் பிலிம்சு |
| விநியோகம் | சூப்பர் குட் பிலிம்சு |
| வெளியீடு | மே 31, 1991 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
சேரன் பாண்டியன் (Cheran Pandiyan) 1991ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், விஜயகுமார், நாகேஷ், ஆனந்த் பாபு மஞ்சுளா விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
கதைச் சுருக்கம்
[தொகு]கிராமத்தின் தலைவரான விஜயகுமார் (பெரிய கவுண்டர்) தன்னுடைய மனைவி மஞ்சுளா, மகள் ஸ்ரீஜா உடன் வசித்து வருகிறார். இவர் சாதி ஏற்றத் தாழ்வுகளைக் கடைபிடித்து வாழ்பவர். தனது சகோதரரான சரத்குமாரை (சின்னக் கவுண்டர்) இவருக்கு பிடிக்காமல் போகிறது. காரணம் சரத்குமார், விஜயகுமாரின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்குப் பிறந்தவர் என்பதால் விஜயகுமார் எப்பொழுதுமே சரத்குமாரை வெறுக்கிறார்.
இந்நிலையில் சரத்குமாரின் உறவினரான ஆனந்த் பாபு இந்தக் கிராமத்திற்கு வருகிறார். ஆனந்த்பாபுவுக்கு விஜயகுமாரின் மகளான ஸ்ரீஜாவின் மேல் காதல் வருகிறது. இதையறிந்த விஜயகுமார் ஸ்ரீஜாவுக்கு அந்த ஊரில் நாகேசின் மகனான கே. எஸ். ரவிக்குமார் உடன் திருமணம் செய்ய முடிவு செய்கிறார். விஜயகுமார் தனது தம்பியான சரத்குமார் நல்லவர் என்பதைப் புரிந்து கொண்டாரா, தனது மகளின் காதலை ஏற்றுக் கொண்டாரா என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.
மீளுருவாக்கம்
[தொகு]தமிழில் சிறப்பான வெற்றியைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டில் தெலுங்கில் பாலராமகிருஷ்ணலு என மீளுருவாக்கம் செய்யப்பட்டது.
நடிகர்கள்
[தொகு]- சரத்குமார் - சின்னக் கவுண்டர் (இராஜபாண்டியன்)
- விஜயகுமார் - பெரிய கவுண்டர் (மணிசேரன்)
- நாகேஷ் - மணியம்
- ஆனந்த் பாபு - சந்திரன்
- மஞ்சுளா விஜயகுமார் - பார்வதி
- கவுண்டமணி - "மெக்கானிக்" மாணிக்கம்
- செந்தில்
- அனுஜா - மாணிக்கத்தின் மனைவி
- ஸ்ரீஜா - வெண்ணிலா
- சித்ரா - பரிமளம்
- கே. எஸ். ரவிக்குமார்
- குமரிமுத்து
- சேரன் - பேருந்து நடத்துநர்
பாடல்கள்
[தொகு]இப்படத்தின் பாடல்களை எழுதி இசையமைத்தவர் சௌந்தர்யன் ஆவார்.[2][3]
| # | பாடல் | பாடியோர் | நீளம் | |
|---|---|---|---|---|
| 1. | "கண்கள் ஒன்றாக" | மனோ, சித்ரா | 5:19 | |
| 2. | "காதல் கடிதம்" | எஸ். ஏ. ராஜ்குமார், சுவர்ணலதா | 5:00 | |
| 3. | "ஏ சம்பா நாத்து" | சுவர்ணலதா | 4:47 | |
| 4. | "வா வா எந்தன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:43 | |
| 5. | "கொடியும்" | மலேசியா வாசுதேவன், சுனந்தா | 5:05 | |
| 6. | "சின்னத் தங்கம்" | கே. ஜே. யேசுதாஸ் | 4:33 | |
| 7. | "எதிர்வீட்டு" | அருண்மொழி, சித்ரா | 5:22 | |
| 8. | "ஊருவிட்டு ஊருவந்து" | எஸ். பி. சைலஜா | 5:24 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://spicyonion.com/movie/cheran-pandiyan/
- ↑ "Cheran Pandiyan (1991) Tamil Super Hit Film LP Vinyl Record by Soundaryan". Disco Music Center. Archived from the original on 27 January 2022. Retrieved 27 January 2022.
- ↑ "Cheran Pandiyan (1991)". Raaga.com. Archived from the original on 21 May 2015. Retrieved 3 December 2016.