சுனந்தா (பாடகி)
Appearance
சுனந்தா | |
---|---|
பிறப்பு | கேரளா, இந்தியா |
பணி | இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 1984–1995 |
சுனந்தா (Sunanda) ஓர் இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். 1983-இல் சென்னைக்குச் செல்வதற்கு முன் கேரளாவில் தனது முதல் பட்டப்படிப்பை முடித்தார். கருநாடக இசையில் பயிற்சி பெற்றார். பின்னர் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அறிமுகமானார். சுனந்தா புதுமைப்பெண் திரைப்படத்தில் முதற்பாடலைப் பாடினார். [1]
தொழில்
[தொகு]சுனந்தா தமிழில் பின்னணி பாடுவதற்கு முன், ஒரு மலையாள ஆவணப்படத்திற்காகக் கருநாடக இசைப் பாடல்களையும் சுலோகங்களையும் பாடினார். இவரது முதற் திரைப்படப் பாடல் வெற்றி பெற்றது. மேலும் 1980, 1990-களில் தமிழ் மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களில் பல வெற்றிப் பாடல்களைப் பாடினார்.[2] தனிப்பட்ட காரணங்களால் பல ஆண்டுகளாக இவரால் தொடர்ந்து பின்னணி பாட முடியவில்லை.
பாடிய பாடல்களில் சில
[தொகு]ஆண்டு | திரைப்படம் | இசையமைப்பாளர் | பாடல் |
---|---|---|---|
1984 | புதுமைப் பெண் | இளையராஜா | "காதல் மயக்கம்" |
1985 | சின்ன வீடு | இளையராஜா | "வெள்ள மனம் உள்ள மச்சான்" |
1987 | எங்க ஊரு பாட்டுக்காரன் | இளையராஜா | "செண்பகமே செண்பகமே" |
1988 | சொல்ல துடிக்குது மனசு | இளையராஜா | "பூவே செம்பூவே" |
1989 | என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் | இளையராஜா | "பூமுடித்து பொட்டு" |
1993 | வால்டர் வெற்றிவேல் | இளையராஜா | "மன்னவா மன்னவா" |
1993 | கிழக்குச் சீமையிலே | ஏ. ஆர். ரகுமான் | "எதுக்குப் பொண்டாட்டி" |
1994 | செவ்வந்தி | இளையராஜா | "செம்மீனே செம்மீனே" |
1994 | வீட்ல விசேஷங்க | இளையராஜா | "பூங்குயில் ரெண்டு ஒன்னுல" |
1995 | காதலன் | ஏ. ஆர். ரகுமான் | "இந்திரையோ இவள் சுந்தரியோ" |
1996 | மகாபிரபு | தேவா | "சொல்லவா சொல்லவா ஒரு" |
1997 | சூர்யவம்சம் | எஸ். ஏ. ராஜ்குமார் | "நட்சத்திர ஜன்னலில்" |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Interview With Playback Singer Sunandha | 'Paadava En Paadalai |-[ Epi-22]-(30/11/19) - YouTube". www.youtube.com. Retrieved 29 December 2020.
- ↑ "Sunanda Tamil Songs: Listen Sunanda Hit Tamil Songs on Gaana.com". Gaana.com. Retrieved 29 December 2020.