சித்ரா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்ரா
பிறப்புமே 2, 1992 (1992-05-02) (அகவை 29)
சென்னை, தமிழ்நாடு
இறப்பு9 டிசம்பர் 2020 (வயது 28)
இறப்பிற்கான
காரணம்
தற்கொலை
பணிநடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2013–2020

சித்ரா (Chitra, 2 மே 1992 - 9 திசம்பர் 2020) என்பவர் தமிழ்நாட்டு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை மன்னன் மகள் (2014), சின்ன பாப்பா பெரிய பாப்பா (2014-2018), சரவணன் மீனாட்சி 2 (2014-2016), சரவணன் மீனாட்சி 3 (2018), பாண்டியன் ஸ்டோர்ஸ் (2018-2020) போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சித்ரா 02 மே, 1992 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் மூன்று பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார். இவரின் தந்தை காமராஜ் ஒரு காவல் அதிகாரி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு அக்காவும் உண்டு. இவர் முதுகலை பட்டம் பெற்றவர். தன்னுடைய பிஎஸ்சி இளங்களைப் பட்டத்தை சென்னையில் உள்ள டாக்டர் எம். ஜி. ஆர் ஜானகி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியிலும், அதையடுத்து 2012-2014 ஆம் ஆண்டு எம். எஸ். சி உளவியல் படிப்பை எஸ். ஐ. டி கல்லூரியில் முடித்தார்.

இவருக்கு தொழிலதிபர் ஹேமநாத் என்பவருக்கும் ஆகத்து மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்தாம் மற்றும் இருவருக்கும் பதிவு திருமணம் முடித்த நிலையில், 2021 ஆம் ஆண்டு திருமணம் நடக்க திட்டம் செய்யப்பட்டுள்ளது.

இறப்பு[தொகு]

இவர் சென்னையில் உள்ள விடுதி ஒன்றில், 09 திசம்பர் 2020 அன்று காலை 02:30 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.[1]

சின்னத்திரையில்[தொகு]

இவர் 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் 10 நிமிடக்கதைகள் என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில், ஷாப்பிங் ஜோன், சட்டம் சொல்லுது என்ன?, நண்பேன்டா, ஊர் சுத்தலாம் வாங்க, நொடிக்கு நொடி அதிரடி, என் சமையல் அறையில், விளையாடு வாகை சூடு போன்ற நிகழ்ச்சியில் தொகுப்பளராக பணி புரிந்தார்.

2014 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் 'மன்னன் மகள்' என்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில், சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் பெரிய பாப்பா என்ற கதாபாத்திரத்தில் நளினி, நிரோஷா, ஜாங்கிரி மதுமிதா உடன் இணைந்து நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வேந்தர் தொலைக்காட்சியில் 'சா பூ திரி 2' மற்றும் 'ஜில் ஜங் ஜக்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில், சரவணன் மீனாட்சி 2 (2014-2016), சரவணன் மீனாட்சி 3 (2018), ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டார்லிங் டார்லிங் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், வேலுநாச்சி[2] என்ற தொடரில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் பாண்டியன் ஸ்டோர்ஸ்[3] என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_(நடிகை)&oldid=3254704" இருந்து மீள்விக்கப்பட்டது