உள்ளடக்கத்துக்குச் செல்

அருண்மொழி (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண்மொழி
பிறப்புநெப்போலியன்
பணிபுல்லாங்குழல் இசைக் கலைஞர், பின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1980-

அருண்மொழி (Arunmozhi) என்று அறியப்படும் நெப்போலியன், இந்திய திரைப்பட பாடகராவார். 1980களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பின்னணி இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசித்த இவரை சூரசம்ஹாரம் திரைப்படத்தில் நான் என்பது நீயல்லவோ தேவ தேவி எனும் பாடல் மூலமாக பாடகராக இளையராஜா அறிமுகப்படுத்தினார். இசையமைப்பாளர்கள் தேவா, சிற்பி, எஸ். ஏ. ராஜ்குமார், ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பலர் இசையமைத்த திரைப்படங்களில் அருண்மொழி பாடியிருந்தாலும் இளையராஜா இசையமைத்த திரைப்படங்களில் பாடியதே அதிகம். அப்பாடல்கள், மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றன.[1][2][3]

பாடிய சில பாடல்கள்

[தொகு]
வரிசை எண் திரைப்படம் பாடல் உடன் பாடியவர் இசை பாடலாசரியர் குறிப்பு
1 பொண்டாட்டி தேவை ஆராரோ பாட்டுப்பாட நானும் கே. ௭ஸ். சித்ரா இளையராஜா வாலி ஆபேரி ராகம்
2 கவிதை பாடும் அலைகள் உன்னை காணாமல் நான் ஏது கே. ௭ஸ். சித்ரா இளையராஜா கங்கை அமரன் ஆபேரி ராகம்
3 பொங்கிவரும் காவேரி வெள்ளி கொலுசுமணி கே. ௭ஸ். சித்ரா இளையராஜா கங்கை அமரன் ஆபேரி ராகம்
4 தாலாட்டு பாடவா வெண்ணிலவுக்கு வானத்த பிடிக்கலையா எஸ். ஜானகி இளையராஜா வாலி கீரவாணி ராகம்
5 நீதானா நீதானா நெஞ்சே நீதானா எஸ். ஜானகி இளையராஜா வாலி கீரவாணி ராகம்
6 ௭னது ராகம் மௌனராகம் எஸ். ஜானகி இளையராஜா வாலி கீரவாணி ராகம்
7 வராது வந்த நாயகன் எஸ். ஜானகி இளையராஜா கங்கை அமரன்
8 மல்லுவேட்டி மைனர் மனசுக்குள்ள நாயனச் சத்தம் எஸ். ஜானகி இளையராஜா
9 வானத்தைப் போல ௭ங்கள் வீட்டில் ௭ல்லா நாளும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா எஸ். ஏ. ராஜ்குமார் நா. முத்துக்குமார்
10 கும்மி பாட்டு அடி ஆச மச்சான் ஸ்வர்ணலதா இளையராஜா கஸ்தூரி ராஜா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "பாடகர் அருண்மொழி".
  2. "பாடகர் அருண்மொழி பாடல்களோடு பேசுகின்றார்".
  3. "பாடகர் அருண்மொழி என்னும் நெப்போலியன்".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்மொழி_(பாடகர்)&oldid=3986981" இலிருந்து மீள்விக்கப்பட்டது