நா. முத்துக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நா.முத்துக்குமார்

தொழில் பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர்
எழுதிய காலம் 1995–தற்பொழுதுவரை

நா.முத்துக்குமார், தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில.

வாழ்க்கை[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்.[1] சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர், தற்போதைய தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராவார்.

படைப்புகள்[தொகு]

இவர் பாடலெழுதிய படங்களின் பெயர்கள் கீழே:

இவரது நூல்கள்[தொகு]

  • நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)
  • கிராமம் நகரம் மாநகரம்
  • பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
  • ஆணா ஆவண்ணா
  • என்னை சந்திக்க கனவில் வராதே
  • சில்க் சிட்டி
  • பால காண்டம்
  • குழந்தைகள் நிறைந்த வீடு
  • வேடிக்கை பார்ப்பவன்

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. MALATHI RANGARAJAN (February 7, 2013). "Life's a lyric". The Hindu. Chennai. http://www.thehindu.com/arts/cinema/lifes-a-lyric/article4389301.ece. பார்த்த நாள்: February 08, 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._முத்துக்குமார்&oldid=1924116" இருந்து மீள்விக்கப்பட்டது