ஆதவன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதவன்
இயக்குனர்கே. எசு. ரவிக்குமார்
தயாரிப்பாளர்உதயநிதி ஸ்டாலின்
கதைரமேஷ் கண்ணா
கே. எசு. ரவிக்குமார்
இசையமைப்புஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புசூர்யா
நயன்தாரா
வடிவேலு
முரளி
பி. சரோஜா தேவி
ராகுல் தேவ்
ஆனந்த் பாபு
ஒளிப்பதிவுஆர். கணேஷ்
படத்தொகுப்புடான் மேக்ஸ்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீஸ்
ஐங்கரன் (ஐக்கிய இராச்சியம்)
ஃபைவ்ஸ்டார் (மலேசியா)
வெளியீடுஅக்டோபர் 17, 2009 (2009-10-17)
கால நீளம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்
ஆக்கச்செலவு250 million (U.5)
மொத்த வருவாய்1.5 பில்லியன் (US)

ஆதவன் (ஆங்கிலம்: Aadhavan) என்பது 2009ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படம் கே. எஸ். ரவிக்குமாரின் இயக்கத்திலும் ரமேஷ் கண்ணாவின் திரைக்கதையிலும் வெளிவந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் சூர்யா, நயன்தாரா, முரளி, வடிவேலு, ஆனந்த் பாபு, ரமேஷ் கண்ணா, பி. சரோஜா தேவி, ராகுல் தேவ், சயாஜி சிண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கான இசை அமைப்பை ஹாரிஸ் ஜயராஜ் செய்துள்ளார். இந்தத் திரைப்படம் 2009ஆம் ஆண்டில் தீபாவளித் தினமான அக்டோபர் 17ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
சூர்யா ஆதவன்/மாதவன்/முருகன்
நயன்தாரா தாரா
ஆனந்த் பாபு தரணி
வடிவேலு பேனர்ஜி (பேனர் குப்பா)
ரமேஷ் கண்ணா இளையமான் (குப்புசாமி)
முரளி நீதிபதி சுப்ரமணியம்
பி. சரோஜா தேவி நீதிபதி சுப்ரமணியத்தின் தாய்/மாதவனின் பாட்டி
சயாஜி சிண்டே இப்ராஹிம் ரோதர்
ராகுல் தேவ் அப்துல் குல்கர்னி
சத்யன் முருகன்
அனு ஹாசன் அனு/தாராவின் தாய்
ரியாஸ் கான் காவல் துறை உதவி ஆணையாளர் ரவிக்குமார்
மனோபாலா
கிரி ஜெயம்
அலெக்ஸ்
கே. எசு. ரவிக்குமார் விசேஷ தோற்றம்
உதயநிதி ஸ்டாலின் விசேஷ தோற்றம்

[2]

பாடல்கள்[தொகு]

Untitled

ஆதவன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் ஹாரிஸ் ஜயராஜ் இசையில் வெளிவந்துள்ளன. திரைப்பட இயக்குநர் ஷங்கரால் இப்பாடல்கள் 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று வெளியிடப்பட்டன.

இலக்கம் பாடல் பாடகர்கள் நேரம் (நிமிடங்கள்:விநாடிகள்) பாடல் வரிகள்
1 "ஹசிலி ஃபிசிலி" கார்த்திக், ஹரிணி, பெர்ன், மாயா 05:25 பா. விஜய்
2 "ஏனோ ஏனோ பனித்துளி" சில் ஹடா, சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா ஜெரெமையா 05:15 தாமரை
3 "டமக் டமக்கு" பென்னி தயால் 05:00 நா. முத்துக்குமார்
4 "வாராயோ வாராயோ" உன்னிகிருஷ்ணன், சின்மயி, மேகா 05:24 கபிலன்
5 "தேக்கோ தேக்கோ" சுவி சுரேஷ், சந்தியா, ஸ்ரீ சரண் 05:29 வாலி
6 "மாசி மாசி" மனோ, மேகா 05:34 வாலி

[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதவன்_(திரைப்படம்)&oldid=2703299" இருந்து மீள்விக்கப்பட்டது