ஆனந்த் பாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்த் பாபு
பிறப்புஆகத்து 30, 1963 (1963-08-30) (அகவை 60)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1983-1999;
2009- தற்போது வரை
பெற்றோர்நாகேஷ்
ரெஜினா
வாழ்க்கைத்
துணை
சாந்தி (1985-2013)
(மணமுறிவு) [1]
பிள்ளைகள்ஜோஸ்யா (பி.1987)
கஜேஸ் (பி.1991)
ஜான் (பி. 1997)
ரெஜினா மேரி (பி. 2003)

ஆனந்த் பாபு (பிறப்பு: 30 ஆகத்து 1963) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.[2] இவர் நன்கறியப்பட்ட தமிழ் நடிகர் நாகேஷின் மகனாவார். இவரது நன்றாக நடனமாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர். 2009ஆம் ஆண்டு முதல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆனந்த் பாபு 1985 திசம்பர் 8 அன்று சாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இளைய மகனான கஜேஷ் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளானதால் 2006 ஆவது ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[3]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி கதாபாத்திரம் குறிப்புகள்
1983 தங்கைக்கோர் கீதம் தமிழ்
1984 கடமை தமிழ்
1984 புயல் கடந்த பூமி தமிழ்
1984 நியாயம் கேட்கிறேன் தமிழ்
1985 பாடும் வானம்பாடி தமிழ் பாபு
1985 வெற்றிக்கனி தமிழ்
1985 உதயகீதம் தமிழ் ஆனந்த்
1985 பார்த்த ஞாபகம் இல்லையோ தமிழ்
1985 விஸ்வநாதன் வேலை வேண்டும் தமிழ்
1985 இளமை தமிழ்
1985 பந்தம் தமிழ்
1985 அர்த்தமுள்ள ஆசைகள் தமிழ்
1986 மௌனம் கலைகிறது தமிழ்
1986 பலேமித்ருடு தெலுங்கு
1988 கடற்கரை தாகம் தமிழ்
1989 தாயா தாரமா தமிழ்
1990 புரியாத புதிர் தமிழ் பாபு
1990 புது வசந்தம் தமிழ் மைக்கேல்
1990 எங்கள் சுவாமி அய்யப்பன் தமிழ் சிறப்புத் தோற்றம்
1990 எதிர்காற்று தமிழ் ஜனா (ஜனார்த்தன்)
1990 புதுப்புது ராகங்கள் தமிழ்
1991 சிகரம் தமிழ் கிருஷ்ணா
1991 சேரன் பாண்டியன் தமிழ் சந்திரன்
1991 இதய ஊஞ்சல் தமிழ்
1991 எம்ஜிஆர் நகரில் தமிழ்
1991 புத்தம் புது பயணம் தமிழ் பாபு
1991 அன்பு சங்கிலி தமிழ்
1991 ஈஸ்வரி தமிழ்
1991 ஒன்னும் தெரியாத பாப்பா தமிழ்
1991 தாயம்மா தமிழ்
1991 மாமஸ்ரீ தெலுங்கு
1991 இல்லு இல்லளு பிள்ளலு தெலுங்கு
1992 வானமே எல்லை தமிழ் தீபக்
1992 ரெண்டு பொண்டாட்டி காவல்காரன் தமிழ் கிருஷ்ணன், ஆனந்த்
1992 காவலுக்கு கண்ணில்லை தமிழ்
1992 செவிலியர் மிகயல் மலையாளம் பிரெத்தி
1993 நான் பேச நினைப்பதெல்லாம் தமிழ் விஸ்வநாத்
1993 சூரியன் சந்திரன் தமிழ்
1993 என் இதய ராணி தமிழ்
1993 மா வறிகி பெல்லி தெலுங்கு
1994 மணிரத்னம் தமிழ்
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா தமிழ்
1994 வாட்ச்மேன் வடிவேலு தமிழ்
1994 கிஷ்கிந்தா கந்தா தெலுங்கு
1995 பதிலி தெலுங்கு
1996 லத்தி சார்ஜ் தெலுங்கு
1996 மெருப்பு தெலுங்கு
1996 வீட்டுக்குள்ளே
1997 ரோஜா மலரே தமிழ் அன்பு
1998 சந்தோசம் தமிழ் கார்த்திக்
1998 சேரன் சோழன் பாண்டியன் தமிழ் சோழன்
1999 அன்புள்ள காதலுக்கு தமிழ்
2009 ஆதவன் தமிழ் தரணி
2009 மதுரை சம்பவம் தமிழ்
2009 ஒளியும் ஒலியும் தமிழ்
2012 ஏதோ செய்தாய் என்னை தமிழ் வீரு
2014 1 நினொக்கதினே தெலுங்கு சந்திரசேகர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-11-21. பார்க்கப்பட்ட நாள் 2015-03-12.
  2. "நடன நடிகர்... நாகேஷ் மைந்தன் ஆனந்த்பாபு - இன்று ஆனந்த்பாபு பிறந்தநாள்". இந்து தமிழ். 30 ஆகஸ்ட் 2020. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. http://www.behindwoods.com/tamil-movie-news/june-06-02/15-06-06-anand-babu.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_பாபு&oldid=3586140" இலிருந்து மீள்விக்கப்பட்டது