உள்ளடக்கத்துக்குச் செல்

ரோஜா மலரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோஜா மலரே
இயக்கம்டி. எம். ஜெயமுருகன்
தயாரிப்புநிர்மலாதேவி ஜெயமுருகன்
கதைடி. எம். ஜெயமுருகன்
இசைஆதித்தியன்
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்கமலம் மூவிஸ்
வெளியீடுதிசம்பர் 5, 1997 (1997-12-05)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

ரோஜா மலரே (Roja Malare) என்பது 1997 ஆம் ஆண்டய இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். டி. எம். ஜெயமுருகன் இயக்கிய இப்படத்தில் முரளி, ரிவா பப்பர், அருண் பாண்டியன், ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிர்மலாதேவி ஜெயமுருகன் தயாரித்த இப்படத்திற்கு ஆதித்யானால் இசை அமைக்கபட்டுள்ளது. படம் எதிர்மறையான விமர்சனங்களுடன் 1997 திசம்பர் 5 அன்று வெளியானது.[1][2][3]

கதை

[தொகு]

கண்ணன் ( முரளி ) தனது நண்பர்களுடன் ( ஆனந்த் பாபு, செந்தில், மதன் பாப் ) ஒரு இசைக் குழுவில் பாடகராக உள்ளார். கண்ணன் ஒரு கல்லூரி மாணவியான மலர்விழியைக் (ரிவா பப்பர்) காதலிக்கிறான். ஆனால் அவனால் தன் காதலை வெளிப்படுத்தாமல் உள்ளார். மலர்விழிக்கு கண்டிப்புமிக்க தொழிலதிபரான அருணுடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. கண்ணனின் காதலை மலர்விழி ஏற்றுக்கொள்வாரா என்பது கதையின் மீதிப் பகுதியின் போக்கை உருவாக்குகிறது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

படத்தில் இடம்பெற்ற பாடல்கள் புனித மேரித் தீவுகளில் படமாக்கப்பட்டன.[4]

இசை

[தொகு]

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசையமைப்பை இசையமைப்பாளர் ஆதித்யன் மேற்கொண்டார். 1997 இல் வெளியான பாடல் பதிவில், டி. எம். ஜெயமுருகன் எழுதிய ஏழு பாடல்கள் இருந்தன.[5][6] இந்த படத்தின் பிரபலமான பாடல்களில் ஒன்று "அழகோவியம்".

எண். பாடல் பாடகர் (கள்) காலம் பாடல் வரிகள்
1 'ஆனந்தம் வந்ததடி' மனோ 4:41
2 'அழகோவியம்' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:49 டி. எம். ஜெயமுருகன்
3 'பாம்பே ரிவா' மனோ 5:07
4 'கேட்டவரம்' மனோ 4:16
5 'பூப்பூவா' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 6:15
6 'ரோஜா மலரின்' ஜீமன் கே.ஜே. 4:56
7 'உடையது' பி. ஜெயச்சந்திரன் 5:27

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Filmography of rojamalare". cinesouth.com. Retrieved 2012-11-04.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Roja Malare: Movie Review". indolink.com. Archived from the original on 2013-10-07. Retrieved 2012-11-25.
  3. "ROJA MALARE". bbthots.com. Archived from the original on 2014-02-21. Retrieved 2012-11-25.
  4. https://web.archive.org/web/20130424003725/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-5.htm
  5. "Roja Malare". thiraipaadal.com. Retrieved 2012-11-10.
  6. "Roja Malare". hummaa.com. Archived from the original on 13 September 2009. Retrieved 2012-11-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜா_மலரே&oldid=3726696" இலிருந்து மீள்விக்கப்பட்டது