தாயம்மா
தாயம்மா | |
---|---|
இயக்கம் | கோபி பீம்சிங் |
தயாரிப்பு | எம். ஜெகதீஸ்வரன் |
கதை | கங்கை அமரன் (வசனங்கள்) |
திரைக்கதை | கோபி பீம்சிங் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பாலு தேவன் |
படத்தொகுப்பு | பி. லெனின் வி. டி. விஜயன் |
கலையகம் | பி.எம்.எஸ். சினி ஆர்ட்சு |
வெளியீடு | திசம்பர் 27, 1991 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாயம்மா (Thayamma) என்பது 1991 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை கோபி பீம்சிங் இயக்கியிருந்தார். இப்படத்தில் பாண்டியன், ஆனந்த் பாபு, பாபு ஆகியோருடன் கீதாவும் ஒரு தலை ராகம் சங்கரும் நடித்திருந்தனர். இப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மலையாளத் திரைப்படமான தூவல்சுபர்சத்தின் மறுஆக்கமாகும். இத்திரைப்படம் 1987 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமான திரீ மென் அண்டு எ பேபி என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த அமெரிக்கத் திரைப்படமும் 1985 இன் பிரெஞ்சு திரைப்படமான திரீ மென் அண்ட் எ கிரேடிலை அடிப்படையாகக் கொண்டது.[1]
கதைச்சுருக்கம்
[தொகு]ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று இளைஞர்களான பாண்டியன், ஆனந்த், பாபு ஆகியோர் நண்பர்களாகவும் அறைத் தோழர்களாகவும் இருக்கின்றனர். மாவட்ட ஆட்சித் தலைவர் படிப்பு படிக்கும் இரங்கராஜன் இவர்களது பக்கத்து வீட்டுக்காரர். பாண்டியன் ஒருநாள், தான் இல்லாத நேரத்தில் ஒரு பொட்டலம் வரும் என்று தன் நண்பர்களை எச்சரிக்கிறான். மறுநாள், ஆனந்தும் பாபுவும் தங்கள் வீட்டு வாசலில் ஒரு குழந்தையைக் கண்டனர். மூன்று இளைஞர்களும் அவளுக்கு தந்தை இல்லை என்று நம்புகின்றனர். அப்போதிருந்து, அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. முதலில் குழந்தையை கைவிட முயல்கிறார்கள் ஆனால் பின்னர் குழந்தையை கவனித்து தாயம்மா என்று பெயரிடுகிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது என்பது கதையின் மையமாக அமைகிறது.
நடிகர்கள்
[தொகு]- பாண்டியனாக பாண்டியன்
- ஆனந்தாக ஆனந்த் பாபு
- பாபுவாக பாபு
- தாயம்மாவாக பேபி இராதா
- இரங்கராஜனாக சங்கர்
- சிசுபாலனாக கவுண்டமணி
- அழகப்பனாக செந்தில்
- கல்யாணியாக கீதா
- கௌரி
- பூதலிங்கமாக வெண்ணிற ஆடை மூர்த்தி
- இரா. சங்கரன்
- ஆனந்தின் மாமாவாக ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- டைப்பிஸ்ட் கோபு
- விக்ரமன்
- எம். என். ராஜம்
- பிருந்தா
- மணி மீனு
- சுருதி
- பிரேமி
பாடல்கள்
[தொகு]கங்கை அமரனின் பாடல் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3]
பாடல் | பாடகர்(கள்) | கால அளவு |
---|---|---|
"ஆளை பார்த்த சாமியார்" | மலேசியா வாசுதேவன், மனோ | 4:14 |
"எங்க பாட்டுக்கு" | மலேசியா வாசுதேவன், மனோ, எஸ். என். சுரேந்தர் | 4:53 |
"ஒரு முத்துக்கிளி கத்தும்" | அருண்மொழி, மனோ, எஸ்.என்.சுரேந்தர் | 4:49 |
"பழைய கனவாய்" | கே.எஸ்.சித்ரா | 4:51 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zac Efron makes his Disney comeback with this comedy remake". 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
- ↑ "Thaayamma (Original Motion Picture Soundtrack) - EP". Apple Music. 1 சனவரி 1991. Archived from the original on 4 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Pudhu Nellu Pudhu Naatthu - Thayamma Tamil Film LP Vinyl Record by Ilayaraaja". Macsendisk (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 4 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-04.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- 1991 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இந்திய நகைச்சுவைத் திரைப்படங்கள்
- மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- பாண்டியன் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்