புரியாத புதிர் (1990 திரைப்படம்)
| புரியாத புதிர் | |
|---|---|
சுவரிதழ் | |
| இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
| தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
| கதை | கே. எஸ். ரவிக்குமார் |
| இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
| நடிப்பு | ரகுமான் ரகுவரன் சரத்குமார் ஆனந்த்பாபு ரேகா சித்தாரா |
| ஒளிப்பதிவு | ஏ. ஹரிபாபு |
| படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
| கலையகம் | சூப்பர் குட் பிலிம்சு |
| விநியோகம் | சூப்பர் குட் பிலிம்சு |
| வெளியீடு | செப்டம்பர், 71990 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
புரியாத புதிர் (Puriyaadha Pudhir) 1990ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த இத்திரைப்படம் ஒரு திகில் திரைப்படமாகும். இப்படம் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். 30 நாட்கள் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு செலவு வெறும் ₹ 29 லட்சம் ஆகும்.[1] இது 1973 ஆவது ஆண்டில் இந்தியில் வெளியான தன்ட் என்னும் திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய முதல் திரைப்படமாகும்.
நடிகர்கள்
[தொகு]- ரகுமான்
- ரகுவரன்
- சரத்குமார்
- ஆனந்த்பாபு
- ரேகா
- சசித்தாரா
- சேரன் - (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.[2][3]
| பாடல் | பாடியோர் | வரிகள் |
|---|---|---|
| "டோ டோ ரி ரி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | எஸ். ஏ. ராஜ்குமார் |
| "கண்ணோரம் கங்கை தான்" | சுவர்ணலதா | |
| "கண்ணோரம் கங்கை தான்" | எஸ். ஏ. ராஜ்குமார் | |
| "ஓர் இரவில் காற்று" | கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா | வாலி |
| "விசயம் போகப் போக" | மனோ, அனிதா சுரேஷ் |
மீளுருவாக்கம்
[தொகு]தமிழ் மொழியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படம் மலையாள மொழியிலும் மீளுருவாக்கம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Hindu : Cinema Plus : Life sparkles". Archived from the original on 2013-02-08. Retrieved 2015-03-10.
- ↑ "Puriyatha Puthir". JioSaavn. 19 October 2020. Archived from the original on 17 April 2021. Retrieved 22 April 2023.
- ↑ "Puriyatha Puthir (1990) Tamil Super Hit Film LP Vinyl Record by S.A.Rajkumar". Disco Music Center. Archived from the original on 23 October 2021. Retrieved 27 January 2022.