நட்புக்காக
Jump to navigation
Jump to search
நட்புக்காக | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் |
கதை | கே. எஸ். ரவிக்குமார் ஜோதி கிருஷ்ணா |
இசை | தேவா |
நடிப்பு | சரத்குமார் சிம்ரன் விஜயகுமார் செந்தில் ரஞ்சித் மனோரமா மன்சூர் அலி கான் |
ஒளிப்பதிவு | அசோக்குமார் |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
கலையகம் | சிறீ சூர்யா மூவிஸ் |
விநியோகம் | சிறீ சூர்யா மூவிஸ் |
வெளியீடு | சூன், 25 1998 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நட்புக்காக 1998ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் சரத்குமார், சிம்ரன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சரத்குமார் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும். தமிழில் சிறப்பான வெற்றியைப் பெற்றதால், கே. எஸ். ரவிக்குமார் இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் சினேகம் கோசம் என்னும் பெயரில் இயக்கினார். பின்னர் இப்படம் திக்காஜரு (2000) என கன்னடத்திலும் மீளுருவாக்கப்பட்டது.
நடிகர்கள்[தொகு]
- சரத்குமார் - சின்னையா, முத்தையா (இரட்டை வேடம்)
- சிம்ரன் - பிரபாவதி
- விஜயகுமார் - கருணாகரன் / ஐயா
- சுஜாதா - லட்சுமி
- மனோரமா - முத்தையாவின் தாயார்
- செந்தில் - குன்னன்
- ஆர். சுந்தர்ராஜன் - கணக்கு பிள்ளை
- அனு மோகன் - டிரைவர்
- சித்தாரா - கௌரி
- மன்சூர் அலி கான் - கஜபதி
- ரஞ்சித் - பசுபதி
- மனோபாலா - கஜபதியின் கணக்கு பிள்ளை
- கே. எஸ். ரவிக்குமார் - நொண்டி சாமியார்
வெளியீடு[தொகு]
இத்திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும்.
மறு உருவாக்கம்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | மொழி | நடிகர்கள் | இயக்குநர் |
---|---|---|---|---|
1998 | சினேகம் கோசம் | தெலுங்கு | சிரஞ்சீவி, மீனா | கே. எஸ். ரவிக்குமார் |
2000 | திக்காஜரு | கன்னடம் | விஷ்ணுவர்தன், அம்பரீஷ் | டி. ராஜேந்திர பாபு |
பாடல்கள்[தொகு]
தேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களும் கவிஞர் காளிதாசன் எழுதியவை.[1]
எண் | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்(கள்) |
1 | "நம்ம அய்யா நல்லவருங்கோ" | காளிதாசன் | மனோ, மலேசியா வாசுதேவன், சரத்குமார், விஜயகுமார் |
2 | "அடிக்கிற கை அனைக்குமா" | ஹரிணி | |
3 | "சின்ன சின்ன முந்திரியா" | மனோ, சித்ரா | |
4 | "கருடா கருடா" | கிருஷ்ணராஜ், சுஜாதா | |
5 | "மீசைக்கார நண்பா" | தேவா | |
6 | "மீசக்கார நண்பா" | கிருஷ்ணராஜ் |
மேற்கோள்கள்[தொகு]
பகுப்புகள்:
- கே. எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படங்கள்
- 1998 தமிழ்த் திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ் திரைப்படங்கள்
- சரத்குமார் நடித்த திரைப்படங்கள்
- மனோபாலா நடித்த திரைப்படங்கள்
- சிம்ரன் நடித்த திரைப்படங்கள்
- விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- மன்சூர் அலி கான் நடித்த திரைப்படங்கள்