அடிமைப் பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடிமைப் பெண்
இயக்கம்கே.சங்கர்
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்,
ஜெயலலிதா,
சோ ,
சந்திரபாபு
வெளியீடு01.05.1969
ஓட்டம்180 நிமிடங்கள்
மொழிதமிழ்

அடிமைப் பெண் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார். கே. வி. மகாதேவன் பாடல்களுக்கு இசையமைத்தார். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, சந்திரபாபு மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 230 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

அடிமைப் பெண் படப்பிடிப்பிற்காக ஜெய்பூர் சென்ற போது வெள்ளை தொப்பியை அணிந்தார் எம்.ஜி.ஆர்.[1] அது பிடித்துப் போக தொடர்ந்து பயன்படுத்தினார். எம்.ஜி.ஆரின் அடையாளமாக மாறிப்போனது தொப்பி.[2]

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வேங்கைமலை ராணியின் மீது தவறுதலாக நடக்க முயன்ற பொழுது கால்கள் வெட்டப்படும் செங்கோடன் சூரக்கோட்டை ராஜா ஆவான். இவன் தன் மனைவி மீது தவறுதலாக நடக்க முயற்சித்தான் என்ற கூற்றினால் அவனுடன் போர் புரிய வருகின்றான் போரில் வெற்றியும் பெறுகின்றான் வேங்கைமலை ராஜா (எம்.ஜி.ஆர்). ஆனால் நயவஞ்சக முறையில் அவனைக் கொலை செய்யும் செங்கோடன் பின்னர் அவன் நாட்டில் வாழும் பெண்கள் அனைவரையும் அடிமைப் படுத்த உத்தரவு பிறப்பிக்கின்றான். இச்செய்தியைக் கேட்டு அறியும் வேங்கையன்,தாயார் தனது மகனை செங்கோடன் கையில் பறிகொடுத்து தலைமறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றார். வேங்கையனும் சிறுவயது முதல் சிறையில் அடைக்கப்பட்டு உலகமறியாது வாழ்கின்றான். காட்டுவாசி போலவே மாறிவும் வேங்கையனை வேங்கைமலையினைச் சேர்ந்தவனால் காப்பாற்றப்படுகின்றான். பின்னர் ஜீவா (ஜெயலலிதா) என்ற பெண்ணால் வளர்க்கப்படுகின்றான் வேங்கையன். அவளிடன் பேச, போர் செய்ய மற்றும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ளும் வேங்கையன் தனது தாயாரையும் சந்திக்கின்றான். தன் மகனை முதலில் சந்திக்க மறுக்கும் வேங்கையனின் தாயார் பின்னர் வேங்கையன் அடிமையாகவிருந்த பெண்களை விடுவித்தபின்னர் அவனைச் சந்திக்கின்றார். இச்சமயம் ஜீவா போன்றொரு பெண் வேறொரு பகுதிக்கு ராணியாகவிருப்பதைக் காணும் வேங்கையன் திகைப்படைகின்றான். அவளும் இவன் மீது காதல் கொள்கின்றாள். ஆனால் ஜீவாவையே காதலிக்கும் வேங்கையன் அப்பெண்ணை ஏமாற்றி தன் நாடு திரும்புகின்றான். அச்சமயம் பார்த்து செங்கோடனுக்கு உதவி புரியும் அந்த ராணி தன்னை ஏமாற்றியதற்காக வேங்கையனை பழிவாங்குவதற்கு முயற்சி செய்யும் சமயம் ஜீவா தனது தோழி என்பதனைத் தெரிந்து கொள்கின்றாள். இச்சமயம் பார்த்து வேங்கையனின் தாயாரைக் கடத்திச் செல்லும் செங்கோடனிடமிருந்து தன் தாயை மீட்டெடுத்து செங்கோடனைக் கொலை செய்கின்றான் வேங்கையன். அதே சமயம் ஜீவாவைக் கொலை செய்ய முயலும் பெண்ணான வேங்கையனை அடைய விரும்பிய ராணி தவறுதலாகத் தாக்கப்பட்டு கொலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற பாடல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. [தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் கல்லூரி கட்டத் தயங்கியது ஏன்? 16/01/2016 விகடன் - எம்.ஜி.ஆர் 1972ம் ஆண்டு பொம்மை இதழுக்கு அளித்தப் பேட்டி
  2. [எம்.ஜி.ஆர் பற்றிய சுவாரசியங்கள் - தினமலர் இணையப்பக்கம் நாள் 17 ஜனவரி 2019]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமைப்_பெண்&oldid=3353808" இருந்து மீள்விக்கப்பட்டது