அழகி (2002 திரைப்படம்)
அழகி | |
---|---|
இயக்கம் | தங்கர் பச்சான் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பார்த்திபன் நந்திதா தாஸ் தேவயானி |
வெளியீடு | 2002 |
ஓட்டம் | 147 நிமிடங்கள்[1] |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | இந்திய ரூபா. 2.5 கோடி |
அழகி (ⓘ) (2002) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2004இல் தெலுங்கு மொழியில் இலேத்த மனசுலு என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2]
வகை
[தொகு]கதை
[தொகு]கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சண்முகமும் (பார்த்திபன்) தனலட்சுமி (நந்திதா தாஸ்) இருவரும் சிறுவயதில் கிராமச் சூழலில் படித்த மாணவர்கள் தனலக்ஸ்மியை பலமுறை ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்றும் சண்முகம் அவர் மீது காதல்கொண்டிருந்தார், தனலக்ஸ்மியும் அவர் மீது காதல் கொண்டிருந்தார் ஆனால் குடும்பச் சூழல்கள் காரணமாக இருவரும் பிரிந்து செல்கின்றனர்.தனலட்சுமி ஏழைக் குடியானவனைத் திருமணம் செய்து மிகுந்த இன்னல்களிற்குள் தள்ளப்படுகின்றார். ஆனால் சண்முகமோ வசதி படைத்தவராக வளர்மதி (தேவயானி) என்ற பெண்ணை மணம் செய்து மனநிறைவுடன் வாழ்கின்றார்.திடீரென ஒரு நாள் தனலட்சுமியை ஏழ்மை நிலையில் பார்த்துவிட்ட சண்முகம் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்துவந்து வேலை ஒன்றும் பெற்றுத் தருகின்றார்.இதன் பின்னர் சண்முகம் குடும்பத்தில் ஏற்படும் மாறுதல்கள் திரைக்கதையின் முடிவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Udhaiyya Gheetha's Azhagi". British Board of Film Classification. 8 March 2003. Archived from the original on 1 March 2022. பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.
- ↑ Mohan Rao Ogirala (21 July 2004). "And quiet flows the don's sidekick...". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 29 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190329095506/https://timesofindia.indiatimes.com/hyderabad-times/And-quiet-flows-the-dons-sidekick/articleshow/785217.cms.