இந்தியன் (1996 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியன்
திரைப்பட விளம்பரம்
இயக்கம்ஷங்கர்
தயாரிப்புஎ.எம்.ரத்தினம்
கதைஷங்கர்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புகமல்ஹாசன்,
மனீஷா கொய்ராலா,
நாசர்,
சுகன்யா,
கவுண்டமணி,
செந்தில்,
மனோரமா
சொக்கலிங்க பாகவதர்
வெளியீடு1 மே 1996
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்30 கோடி

இந்தியன் (Indian) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. 1977 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த நாம் பிறந்த மண் படத்தின் அடிப்படை கதையை ஒட்டி இப்படம் அமைந்திருந்தது.[1]

வகை[தொகு]

மசாலாப்படம் / நாடகப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இது கமல்ஹாஸன் இரட்டை வேடத்தில் நடித்து பெரிதும் வெற்றிபெற்ற திரைப்படமாகும். சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் அவரது மகன் சந்துருவாகும் கமல்ஹாசன் நடித்துள்ளார். திரைப்படத்தின் ஆரம்பம் முதலே வர்மக்கலை மூலம் பாரிய குற்றங்கள் புரிபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதை ஆராய்ந்த காவற்துறையினர் வர்மக் கலையினை அறிந்த ஒருவரே இதை நிகழ்த்தியிருப்பதாக அறிந்து தகவற் தளத்தில் தேடியபோது திருமுல்லைவாயிலில் இவ்வாறான கலையைக் கற்ற ஓர் சுதந்திரப் போராட்ட தியாகி இருப்பதை அறிந்து அவ்விடத்தில் காவற்துறையினர் செல்கின்றனர் இந்தியன் அங்கிருந்து டிராக்டர் வண்டி மூலம் தப்பிச் செல்கின்றார். இந்தியனின் மகள் ஒருமுறை உடற் சுகவீனமற்றுப் போனபோது மருத்துவமனையில் பணமின்றி அனுமதிக்கமுடியாமல் போதிய பராமரிப்பு ஏதும் இன்றி இறந்து போகின்றார். பிணத்தை வைத்தியசாலையில் இருந்து வீடு கொண்டு செல்வதற்கு கூட இலஞ்சம் இன்றி பலவேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றார். இதனால் மனம் வருந்தி சந்துரு பட்டணத்திற்குப் பிழைப்புத் தேடிவருகின்றார். பட்டணத்தில் ஏனையவர்கள் போலவே இலஞ்சம் வேண்டி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குகின்றார். ஒரு பேருந்து மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தும் பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக சந்துருவிற்கு கொடுத்து அனுமதியைப் பெறுகின்றது. இவ்வண்டி பின்னர் பாடசாலைச் சிறார்களுடன் சென்றபோது வாகன பிரேக் இன்றிச் சென்று விபத்துக் குள்ளாகின்றது. இதனுடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு ஒருதொகைப் பணத்தைக் கையூட்டாகப் (இலஞ்சம்) கொடுத்து வழக்கில் இருந்து தப்பிக்கின்றார். இச்செயல்களால் ஆத்திரம் அடைந்த இந்தியன் இறுதியில் தனது மகன் சந்துருவைக் கொலை செய்வதுடன் திரைப்படம் முடிவுறுகின்றது.

துணுக்குகள்[தொகு]

  • 1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஒலிப்பதிவு[தொகு]

இந்தியன்
பாடல்கள்
வெளியீடு1996
ஒலிப்பதிவுபஞ்சதன் ரெக்கார்ட் இன்
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்30:05
இசைத்தட்டு நிறுவனம்பிரமிட் சாய்மீரா
இசைத் தயாரிப்பாளர்ஏ. ஆர். ரகுமான்
ஏ. ஆர். ரகுமான் காலவரிசை
'லவ் பேர்ட்ஸ்'
(1996)
இந்தியன்
(1996)
'காதல் தேசம்'
(1996)
வெளி ஒலியூடகங்கள்
யூடியூபில் ஒலி பாடல்கள் (தமிழ்)
யூடியூபில் ஒலி பாடல்கள் (தெலுங்கு)
யூடியூபில் ஒலி பாடல்கள் (இந்தி)

இத்திரைப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களுக்கும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார்.[2]

இப்படத்தின் பாடல்கள் வெளியான ஒரு சில தினங்களில் 6,00,000 பதிவுகள் விற்பனையாகி சாதனை படைத்தது.[3]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அக்கடானு நாங்க" (பாடலாசிரியர்: வாலி)சுவர்ணலதா 5:52
2. "மாயா மச்சிந்ரா" (பாடலாசிரியர்: வாலி)எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா 5:37
3. "பச்சைக் கிளிகள்" (பாடலாசிரியர்: வைரமுத்து)கே. ஜே. யேசுதாஸ் 5:50
4. "டெலிபோன் மணிபோல்" (பாடலாசிரியர்: வைரமுத்து)ஹரிஹரன், ஹரிணி 6:15
5. "கப்பலேறிப் போயாச்சு" (பாடலாசிரியர்: வாலி)எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 6:28

மேற்கோள்கள்[தொகு]

  1. Dhananjayan, G. (2014-11-03) (in en). PRIDE OF TAMIL CINEMA: 1931 TO 2013: Tamil Films that have earned National and International Recognition. Chennai: Blue Ocean Publishers. பக். 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-84301-05-7 இம் மூலத்தில் இருந்து 2020-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200725051313/https://books.google.co.in/books/about/PRIDE_OF_TAMIL_CINEMA_1931_TO_2013.html?id=e07vBwAAQBAJ. பார்த்த நாள்: 2020-07-25. 
  2. "A. R. RAHMAN :: THE OFFICIAL WEBSITE". web.archive.org. 2011-09-13. Archived from the original on 2011-09-13. பார்க்கப்பட்ட நாள் 2022-10-05.
  3. "The Hindu : Singing a different tune". web.archive.org. 2004-05-01. Archived from the original on 2004-05-01. பார்க்கப்பட்ட நாள் 2022-10-05.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியன்_(1996_திரைப்படம்)&oldid=3710428" இலிருந்து மீள்விக்கப்பட்டது