நண்பன் (2012 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நண்பன்
விளம்பர சுவரொட்டி
இயக்கம்ஷங்கர்
தயாரிப்புராஜு ஈஸ்வரன்
கதைஷங்கர்
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்பு
ஒளிப்பதிவுமனோஜ் பரமஹம்சா
கலையகம்ஜெமினி
வெளியீடுஜனவரி 12, 2012
ஓட்டம்188 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்[1]
மொத்த வருவாய்56 கோடி

நண்பன் என்பது 2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் த்ரீ இடியட்ஸ் (2009) என்ற ஹிந்தி படத்தின் மீளுருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.[2].

நடிப்பு[தொகு]

படப்பிடிப்பு[தொகு]

இதன் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கியது.[3] பிறகு தேராதூன்[4],ஐரோப்பா, அந்தமான், கோயம்பத்தூர்[5] மற்றும் சென்னையில்[4][6][7] நடைபெற்றது. பாடல் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது.[8] படப்பிடிப்பு முழுவதுமாக அக்டோபரில் நிறைவடைந்தது.[9][10] மொத்தம் 8 மாதகாலம் படப்பிடிப்பு நடைபெற்றது.[11]

வெளியீடு[தொகு]

நண்பன் ஜனவரி 12,2012 வெளியாகியது.[12][13][14] பிரெஞ்சு மொழியின் துணை உரை(Subtitle) உடன் பிரான்சு நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்னும் பெருமை நண்பன் படத்தையே சேரும்.[15] தற்போதய தமிழக அரசின் திட்டத்தின் படி வரிவிலக்கு பெற்ற முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.[16][17]

ஆல் இசு வெல்[தொகு]

ஆல் இசு வெல்
Pongalliswell.jpg
ஆல் இசு வெல்
கதை மாந்தர்பஞ்சவன் பாரிவேந்தன்
நடிகர்விஜய்
ஆக்கம்ஷங்கர்
முதல் பயன்பாடுநண்பன்
வேறு இடங்களில்3 இடியட்ஸ்

ஆல் இசு வெல் (All is Well) என்பது இந்த திரைப்படத்தில் பஞ்சவன் பாரிவேந்தனாக நடித்த விஜய் பேசிய வசனமாகும்.[18] இந்த வசனம் ஏற்கனவே இந்தி மொழியில் வெளிவந்த 3 இடியட்சு திரைப்படத்திலும் கூறப்பட்டது.[19]

விளக்கம்[தொகு]

ஆல் இஸ் வெல் என்பது எல்லாம் நல்லதுக்கே என்பதைக் குறிக்கின்றது. அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்ற நேர் மனப்பாங்கை ஏற்படுத்தும் எனத் திரைப்படத்தில் குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் சரியாகி விடும் என்றில்லை. ஆனாலும் பிரச்சினைகளைச் சந்திப்பதற்கான துணிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் திரைப்படத்தில் கூறப்படுகின்றது.[20]

பாடல்கள்[தொகு]

ஹார்ட்டிலே பேட்டரி... என்ற நண்பன் திரைப்படப் பாடலிலும் ஆல் இஸ் வெல்... என்ற 3 இடியட்ஸ் திரைப்படப் பாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.[21]

மேற்கோள்கள்[தொகு]

 1. Nanban Box Office Collections Report[தொடர்பிழந்த இணைப்பு]. 123movierating.blogspot.in. Retrieved on 2013-12-06.
 2. Official: '3 Idiots' is 'Nanban'. Vijay is Aamir Khan
 3. "Shankar completes the first schedule of 'Nanban'". Movies.sulekha.com. பார்த்த நாள் 2011-09-13.
 4. 4.0 4.1 Prakash KL (2011-03-22). "Shankar wraps up Nanban second schedule". Entertainment.oneindia.in. பார்த்த நாள் 2011-09-13.
 5. "'Nanban' - The tidbits". IndiaGlitz. பார்த்த நாள் 2011-09-13.
 6. "Vijay spotted at Ampa mall..!". Behindwoods. April 22, 2011. http://www.behindwoods.com/tamil-movie-news-1/apr-11-04/nanban-vijay-22-04-11.html. பார்த்த நாள்: November 23, 2011. 
 7. "'Nanban' shoot at Koyambedu water tank - Tamil Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-09-13.
 8. "First Look: Shankar's comic caper Nanban". என்டிடிவி. பார்த்த நாள் 23 November 2011.
 9. It's a clean 'U' for 'Nanban'!
 10. "All's well with Nanban". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 October 2011. Archived from the original on 5 அக்டோபர் 2013. https://web.archive.org/web/20131005004736/http://articles.timesofindia.indiatimes.com/2011-10-20/news-interviews/30302442_1_nanban-pongal-shankar. பார்த்த நாள்: 21 October 2011. 
 11. "Vijay's Nanban for Pongal, announces Shankar". 21 October 2011. Oneindia.in. பார்த்த நாள் 21 October 2011.
 12. Vijay's Nanban on Jan 12
 13. Happy NewYear- Pongal 2012 releases confirmed
 14. "Nanban And Vettai Will Not Be Out On The Same Day". Behindwoods.com (31 December 2011). பார்த்த நாள் 3 January 2012.
 15. 'Nanban' for the French - Indiaglitz.com
 16. "Nanban gets tax exemption". Sify.com. மூல முகவரியிலிருந்து 15 டிசம்பர் 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 January 2012.
 17. "No entertainment tax for 'Nanban'". IndiaGlitz. பார்த்த நாள் 15 January 2012.
 18. நண்பன்-அரங்க முன்னோட்டம் உயர் வரையறுத்தல் (தமிழில்)
 19. ஆல் இஸ் வெல் (ஆங்கில மொழியில்)
 20. விமர்சனம் (தமிழில்)
 21. ராகா (தமிழில்)

வெளி இணைப்புகள்[தொகு]

 • சர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில் நண்பன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்பன்_(2012_திரைப்படம்)&oldid=3217860" இருந்து மீள்விக்கப்பட்டது