ரெட்டச்சுழி (திரைப்படம்)
ரெட்டச்சுழி | |
---|---|
![]() | |
இயக்கம் | தாமிரா |
தயாரிப்பு | சங்கர் (திரைப்பட இயக்குநர்) |
கதை | தாமிரா |
இசை | கார்த்திக் ராஜா |
நடிப்பு | கே. பாலசந்தர் பாரதிராஜா அஞ்சலி ஆரி |
ஒளிப்பதிவு | செழியன் |
கலையகம் | எஸ் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 23, 2010 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
தாமிரா இயக்கிய படம் ரெட்டச்சுழி. இயக்குநர் சங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளி வந்துள்ளது. கூத்துப்பட்டறையில் பயின்ற ஆரி கதாநாயகன். அங்காடித்தெரு, கற்றது தமிழ் நாயகி அஞ்சலி கதை நாயகி. கார்த்திக் ராஜாவின் இசை. ஒளிப்பதிவாளர் செழியன். 22 குழந்தைகள் படத்தில் வருகிறார்கள். இப்படத்தில் பாரதிராஜா ஒரு சிரிப்புக் கம்யூனிஸ்ட்டாக வருகிறார். பல காட்சிகள் கவிதை போலப் படமாக்கப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் செழியனைப் பாராட்ட நிறைய இடங்கள் உண்டு. 22 குழந்தைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.