உள்ளடக்கத்துக்குச் செல்

சத்யராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்யராஜ்

பிறப்பு அக்டோபர் 3, 1954 (1954-10-03) (அகவை 70)
கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தொழில் திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்
துணைவர் மகேஸ்வரி
பிள்ளைகள் திவ்யா,
சிபிராஜ்

சத்யராஜ் சுப்பையன் (Sathyaraj, பிறப்பு: 3 அக்டோபர் 1954) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார்.

வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.[1]

எம்.ஜி.ஆர் பித்தன்

[தொகு]

ரங்கராஜ் என்ற இயற்பெயர் கொண்ட சத்யராஜ் என்று எம். ஜி. ஆர் 1967 ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூட்டினால் தமிழக மக்களிடையே ஏற்பட்ட அனுதாப அலையால் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் அன்றைய திமுக தலைவரும் முதல்வருமான அறிஞர் அண்ணா திமுகவின் பிரச்சார பீரங்கி என்றும் பிரச்சார ராஜா என்றும் பெயர் இட்டார். துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு திரையுலகில் வெற்றி நடை போட்ட அரசக்கட்டளை திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை தனது தாயார் சத்யபாமா அவர்களின் பெயரையும் அண்ணா அவர்கள் அன்புடன் அழைத்த பிரச்சார ராஜா என்று பெயரை சேர்த்து அந்த நிறுவனத்திற்க்கு சத்யராஜா என்று பெயர் இட்டார். அதை இரசிகராக கருத்தில் கொண்டு சத்யராஜ் என்று தனது பெயரை திரையுலகில் வைத்து கொண்டார்.

1987இல் சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரைப் பத்திரிகை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும், அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அதன்பின் திருமணத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தனது ஞாபகமாக தான் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையைப் பரிசாகக் கேட்டு வாங்கிக் கொண்டார் சத்யராஜ்.[சான்று தேவை]

பெரியார் திரைப்படம்

[தொகு]

சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காகப் பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழுணர்வு

[தொகு]

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். இதில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில

[தொகு]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

1970 களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1978 சட்டம் என் கையில் விக்கி கமல்ஹாசன் நடித்த திரைப்படம்
கண்ணன் ஒரு கைக்குழந்தை
1979 ஏணிப்படிகள் பி. என். மாதவன்
முதல் இரவு

1980 களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1982 மூன்று முகம் "தாடி" ராஜ்
பகடை பனிரெண்டு
1983 பாயும் புலி
பூக்கள் விடும் தூது
1984 நூறாவது நாள்
24 மணி நேரம்
எனக்குள் ஒருவன்
நான் மகான் அல்ல ஜகன்
1985 சாவி 'ஆனந்த்'- டென்னிஸ் வீரர்
நான் சிகப்பு மனிதன் மோகன்ராஜ்
திறமை
முதல் மரியாதை
பகல் நிலவு தேவராஜன்
காக்கிசட்டை விக்கி
ஈட்டி
பிள்ளைநிலா விக்கி
1986 விக்ரம் சுகிர்தராஜா
தர்மம்
இரவுப் பூக்கள்
மந்திரப் புன்னகை
மிஸ்டர் பாரத் கோபிநாத்
முதல் வசந்தம் குங்குமப் பொட்டு கவுண்டர்
ரசிகன் ஒரு ரசிகை
விடிஞ்சா கல்யாணம்
கடலோரக் கவிதைகள் தாஸ்
1987 பூவிழி வாசலிலே ஜீவா
சின்னத்தம்பி பெரியதம்பி பெரியதம்பி
ஆளப்பிறந்தவன் ஆளப்பிறந்தவன்
மக்கள் என் பக்கம் சாம்ராஜ்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு காவல் ஆய்வாளர் பல்ராம்
ஜல்லிக்கட்டு அர்ஜூன்
மனதில் உறுதி வேண்டும் சிறப்புத் தோற்றம்
வேதம் புதிது பாலு தேவர் வெற்றி: சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது
1988 அண்ணாநகர் முதல் தெரு சிவராமன் (ராம் சிங்)
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு வினோத்
கணம் கோர்ட்டார் அவர்களே
புதிய வானம் எம். ஜி. ராஜரத்னம்
ஜீவா ஜீவா
1989 தாய்நாடு
பிக் பாக்கெட்
சின்னப்பதாஸ்
அன்னக்கிளி சொன்ன கதை
திராவிடன்
வாத்தியார் வீட்டுப் பிள்ளை 100 ஆவது திரைப்படம்

1990 களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
1990 உலகம் பிறந்தது எனக்காக குவாட்டர், கோவிந்தன்
ராஜா
வாழ்க்கைச் சக்கரம் தங்கவேலு
மல்லுவேட்டி மைனர் ராசப்ப கவுண்டர்,
மாரப்ப கவுண்டர்
வேலை கிடைச்சுடுச்சு
நடிகன் ராஜா/தேவராஜ்
மதுரை வீரன் எங்க சாமி
1991 புது மனிதன் கபாலி
பிரம்மா ரவி வர்மன்
1992 திருமதி பழனிச்சாமி பழனிச்சாமி
தெற்கு தெரு மச்சான் சுப்ரமணி
பங்காளி சக்திவேல்/துரை
மகுடம் முத்துவேல்
ரிக்சா மாமா
1993 உடன் பிறப்பு சத்யா
ஏர்போர்ட் கேப்டன் அர்ஜுன்
கட்டளை
வால்டர் வெற்றிவேல் வெற்றிவேல்
1994 அமைதிப்படை தங்கவேலு ,
நாகராஜ சோழன் (அமாவாசை)
வீரப்பதக்கம்
வண்டிச்சோலை சின்ராசு சின்ராசு
தோழர் பாண்டியன்
தாய் மாமன் ராசப்பன்
1995 எங்கிருந்தோ வந்தான்
வில்லாதி வில்லன் எடிசன்/பூவு/
வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம்
இயக்குநராகவும்
மாமன் மகள்
1996 சேனாதிபதி சேனாதிபதி,
சேதுபதி
சிவசக்தி சிவா
1997 பெரிய மனுஷன் ராமகிருஷ்ணன்,
சுப்பிரமணி
பகைவன் வாசு
வள்ளல் துரைராசு
1998 கல்யாண கலாட்டா ஜீவா
1999 மலபார் போலீஸ் சின்னசாமி,
ராமசாமி
பொண்ணு வீட்டுக்காரன் ஜீவா
அழகர்சாமி அழகர்சாமி
சுயம்வரம் அருணாச்சலம்

2000 களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2000 என்னம்மா கண்ணு காசி
புரட்சிக்காரன் அண்ணா
வீரநடை பெரிய கருப்பன்
உன்னைக் கண் தேடுதே விச்சு
2001 லூட்டி ராசப்பா
அசத்தல் வெற்றி
குங்குமப்பொட்டுக் கவுண்டர் குங்குமப் பொட்டு கவுண்டர்,
கந்தசாமி
ஆண்டான் அடிமை சிவராமன்
2002 விவரமான ஆளு மயில்சாமி
மாறன் மாறன்
2003 ராமச்சந்திரா ராமச்சந்திரா
மிலிட்டரி 'மிலிட்டரி' மாதவன்
சேனா சேனா
ஆளுக்கொரு ஆசை அறிவழகன்
2004 அடிதடி திருப்பதி
ஜோர் சபாபதி
செம ரகளை
சவுண்ட் பார்ட்டி குமரேசன்
அழகேசன் அழகேசன்
மகா நடிகன் சத்யா
2005 ஐயர் ஐ. பி. எஸ் கோபால் ஐயர்,
வெங்கடாசலபதி
மண்ணின் மைந்தன் பிரதாப் சிறப்புத் தோற்றம்
6'2 ஜேம்ஸ்/பாலமுருகன்
இங்கிலீஷ்காரன் தமிழரசு
வெற்றிவேல் சக்திவேல் வெற்றிவேல்
வணக்கம் தலைவா மாணிக்கம்
2006 கோவை பிரதர்ஸ் கணேஷ்
சுயேட்சை எம். எல். ஏ. நம்பிராஜன்
குருஷேத்திரம் பரத்
2007 அடாவடி பரத்
பெரியார் பெரியார் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)
கண்ணாமூச்சி ஏனடா ஆறுமுகம் கவுண்டர்
ஒன்பது ரூபாய் நோட்டு மாதவ படையாச்சி வெற்றி, விஜய் விருதுகள் (சிறந்த நடிகர்)
2008 தங்கம் தங்கம்
வம்புச்சண்டை ஜீவானந்தம்
2009 சங்கம் சிவய்யா தெலுங்குத் திரைப்படம்

2010 களில்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2010 அகத்தன் கரீந்திர வர்மா மலையாளத் திரைப்படம்
குரு சிஷ்யன் குரு
பொள்ளாச்சி மாப்பிள்ளை சிங்கலப்பா
இரண்டு முகம் சர்வேஸ்வரன்
கௌரவர்கள் தொண்டைமான்
2011 சட்டப்படி குற்றம் சுபாஷ் சந்திர போஸ்
வெங்காயம் அவராகவே சிறப்புத் தோற்றம்
ஆயிரம் விளக்கு லிங்கம்
உச்சிதனை முகர்ந்தால் நடேசன்
2012 நண்பன் விருமாண்டி சந்தானம் (வைரஸ்) வெற்றி, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
வெற்றி, சிறந்த துணை நடிகருக்கான SIMA விருது
வெற்றி, விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்)
2013 மிர்ச்சி தேவா தெலுங்குத் திரைப்படம்
நாகராஜ சோழன் எம். ஏ., எம். எல். ஏ நாகராஜ சோழன் (அமாவாசை ) 200 ஆவது திரைப்படம்
சென்னை எக்ஸ்பிரஸ் துர்கேஸ்வர அழகுசுந்தரம் இந்தி திரைப்படம்
தலைவா ராமதுரை
வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவனாண்டி
ராஜா ராணி ஜேம்ஸ் வெற்றி, சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரை—விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகர்)
2014 கலவரம் வெற்றிச் செல்வன்
சிகரம் தொடு செல்லப் பாண்டியன்
பூஜை சிவக்கொழுந்து
இசை
ஏழு கடல் தாண்டி படப்பிடிப்பில்
2015 லைலா ஓ லைலா சாகீத் காதர் மலையாளத் திரைப்படம்
பாகுபலி
ஒரு நாள் இரவில் சேகர்
2016 நேனு சைலஜா
கெத்து துளசி ராமன்
பிரம்மோத்சவம்
ஜாக்சன் துரை துரை
ஹைப்பர் நாராயண மூர்த்தி
2017 மொட்ட சிவா கெட்ட சிவா கிருபாகரன்
பாகுபலி 2 கட்டப்பா
மெர்சல் ரத்னவேல்
களவாடிய பொழுதுகள் பெரியார்
2018 கடைக்குட்டி சிங்கம்
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் நடராஜ்
நோட்டா மகேந்திரன்
கனா முருகேசன்
பார்ட்டி கர்ணன்
2019 ஜர்சி
பிரதி ரோஜு பண்டகே
தம்பி ஞானமூர்த்தி
ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2021 துக்ளக் தர்பார் முதலமைச்சர் "நாகராஜ சோழன்" (அமாவாசை) தமிழ் விருந்தினர் தோற்றம்
எம்.ஜி.ஆர் மகன் எம். ஜி. ராமசாமி தமிழ்
தீர்ப்புகள் விற்கப்படும் நலன்குமார் தமிழ்
2022 1945 இராமலிங்கையா தெலுங்கு
எதற்கும் துணிந்தவன் ஆதிராயர் தமிழ்
ராதே ஷியாம் பரமஹம்ச தெலுங்கு, இந்தி
வீட்ல விசேஷம் தமிழ் தயாரிப்பில்
பக்கா கமர்சியல் தெலுங்கு படப்பிடிப்பில்
TBA பிரின்ஸ் TBA தமிழ், தெலுங்கு படப்பிடிப்பில்[2]

இயக்கிய திரைப்படங்கள்

[தொகு]

தயாரித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் நடிகர்கள் குறிப்புகள்
2007 லீ சிபிராஜ்
2014 நாய்கள் ஜாக்கிரதை சிபிராஜ்
2017 சத்யா சிபிராஜ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "லீ திரைப்பட விமர்சனம்".
  2. "Sivakarthikeyan's film with Anudeep is titled 'Prince' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-15.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யராஜ்&oldid=4127361" இலிருந்து மீள்விக்கப்பட்டது