கெத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெத்து
கெத்து சுவரொட்டி
இயக்கம்திருக்குமரன்
தயாரிப்புஉதயநிதி ஸ்டாலின்
கதைதிருக்குமரன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புஉதயநிதி ஸ்டாலின்
ஏமி சாக்சன்
சத்யராஜ்
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புதினேஷ் பொன்ராஜ்
கலையகம்ரெட் ஜயன்ட் மூவிஸ்
விநியோகம்ரெட் ஜயன்ட் மூவிஸ்
வெளியீடுசனவரி 14, 2016 (2016-01-14)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கெத்து (Gethu) என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்க் குற்றத் திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். முதன்மைக் கதாபாத்திரங்களில் உதயநிதி ஸ்டாலினும் ஏமி சாக்சனும் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படத்தினைத் திருக்குமரன் இயக்கியுள்ளார். இவர்களுடன் சத்யராஜ், விக்ராந்த் ஆகியோரும் துணைக்கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜயராஜின் இசையிலும் சுகுமாரின் படப்பிடிப்பிலும் சனவரி 14, 2016 அன்று இத்திரைப்படம் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதைமாந்தர்
உதயநிதி ஸ்டாலின் சேது
ஏமி சாக்சன் நந்தினி இராமானுசம்
விக்ராந்த் இடேவிடு கிறித்தோபர்
சத்யராஜ் துளசி இராமன்
கருணாகரன் காவலர்
அவினாசு இடேவிட்டின் முதலாளி
மைம் கோபி இரவுடி இராசா
அனுராதா இராசாவின் தாயார்

[2]

பாடல்கள்[தொகு]

கெத்து
ஒலிப்பதிவு
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
நீளம்22:15
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்இடிவோ
இசைத் தயாரிப்பாளர்ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ் காலவரிசை
'நண்பேன்டா
(2015)
கெத்து 'சிங்கம் 3
(2016)

இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.[3] 2015 திசம்பர் 25ஆம் நாள் திரைப்படத்தின் இசைத்தொகுப்பை இடிவோ வெளியிட்டது.[4] பிகைண்டுவுட்சு இவ்விசைத்தொகுப்புக்கு ஐந்தில் 2.5 விண்மீன்களை வழங்கித் தரப்படுத்தியிருந்தது.[5]

# பாடல்வரிகள்பாடகர் நீளம்
1. "தில்லு முல்லு"  வி. பத்மாவதி, சீர்காழி சிற்பி, கானா வினோத்நரேஷ் ஐயர், இரனினா இரெட்டி 6:02
2. "தேன் காற்று"  தாமரைஹரிச்சரண், சாசா திருப்பதி 5:05
3. "எவன்டா இவன்"  எம். சி. விக்கிஎம். சி. விக்கி,ஷர்மிளா 3:11
4. "அடியே அடியே"  தாமரைகார்த்திக், சாலினி 3:22
5. "முட்டைப் பச்சி"  கானா வினோத் சி. பிரபாகானா வினோத்து, அந்தோனி தாசன், மரண கானா விஜி, எபிசா 4:35
மொத்த நீளம்:
22:15

[6]

வெளியீடு[தொகு]

இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வச் செய்ம்மதி ஒளிபரப்பானது சன் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது.

வரிவிலக்கு[தொகு]

கெத்து தமிழ்ச் சொல் அன்று எனக்கூறி இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படவில்லை.[7] தமிழ் அகரமுதலியில் கெத்து என்ற சொல் உள்ள பக்கத்தைத் துவிட்டர், பேசுபுக்கு ஆகியவற்றில் பகிர்ந்து உதயநிதி ஸ்டாலின் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.[8] இது தொடர்பாக படக்குழு வரிவிலக்கு அளிக்க சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின் விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் கெத்து தமிழ் சொல்லே என்பதை அறிந்து வரிவிலக்கு அளிக்க உத்தரவிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "What is Udhay`s `Gethu` is all about?". Sify. 26 மே 2015. 2015-05-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 நவம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Gethu (2016) Full Cast & Crew". IMDb. 18 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "'கெத்து' இசை, ஹாரிஸ் ஜெயராஜுக்கு 'சொத்தாக' அமையுமா?". தினமலர் சினிமா. 27 திசம்பர் 2015. 18 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. Keerthi Leo (28 திசம்பர் 2015). "கெத்து இசை வெளியீட்டு விழாவின் புகைப்படத் தொகுப்பு". உதயன் சினிமா செய்திகள். 18 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Gethu Songs Review". Behindwoods. 18 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Gethu". Saavn. 2015-12-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "'கெத்து' தமிழ் வார்த்தைதான். ஆதாரத்துடன் கூறும் உதயநிதி". IndiaGlitz. 18 சனவரி 2016. 18 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. ஸ்கிரீனன் (18 சனவரி 2016). "'கெத்து'க்கு வரிச்சலுகை இல்லை: நீதிமன்றத்தை நாட படக்குழு முடிவு". தி இந்து. 18 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெத்து&oldid=3659888" இருந்து மீள்விக்கப்பட்டது