உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாரிஸ் ஜயராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாரிஸ் ஜெயராஜ்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஹாரிஸ் ஜெயராஜ்
பிற பெயர்கள்தி மெலடி கிங்
பிறப்புசனவரி 8, 1975 (1975-01-08) (அகவை 49)
பிறப்பிடம்கோடம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)கிட்டார், விசைப்பலகை, பியானோ, தோல் இசைக்கருவிகள்
இசைத்துறையில்2001–நடப்பு

ஹாரிஸ் ஜெயராஜ் (Harris Jayaraj) (பிறப்பு 8 சனவரி 1975, திருநெல்வேலி) தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

இளமை

[தொகு]

சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ்.[1] இவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார். இவர் ஜாய்ஸ் என்பவரை மணந்தார். இவருக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்னும் மகனும், கேரன் நிக்கிட்டா என்னும் மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய 12-ம் வயதியல் (1987)ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார்.

பணிவாழ்வு

[தொகு]

இசையமைப்பாளராக 2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தார்.

இசைக் கச்சேரி

[தொகு]

2011ம் ஆண்டு ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் இசைக் கச்சேரியை நடத்தப்போவதாக அறிவித்தார். அதில் தமிழ் முன்னனிப் பாடகர்களான கார்த்திக், ஹரிசரண், சின்மயி, திப்பு, ஹரிணி, நரேஷ் ஐயர், ஹரீஸ் இராகவேந்திரா, க்ரிஸ், ஆலப்ராஜு, கேகே (கிருஷ்ணகுமார் குன்னத்), பென்னிதயாள், ஆன்ட்ரியா, சுவி சுரேஷ், சுனிதா சாரதி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சுவேதா மேனன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கினார்.

இசையமைத்த திரைப்படங்கள்

[தொகு]
• முதல் வெளியீடு ♦ மீளுருவாக்கம்
ஆண்டு தமிழ் தெலுங்கு இந்தி குறிப்பு
2001 மின்னலே செளி ரெஹ்னா ஹெ தெறி தில் மெயின் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)
மஜ்னு மஜ்னு -
12 பி 12 பி தோ ராஸ்தே – 12பி
2002 வெற்றி வாசு -
சாமுராய் சாமுராய்
2003 லேசா லேசா
சாமி சுவாமி ஐபிஎஸ்
கோவில் ருத்ருடு
காக்க காக்க கர்சனா (2004) போர்ஸ் (2011) சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)

தமிழக அரசு திரைப்பட விருது (சிறந்த இசையமைப்பாளர்)
பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருது (சிறந்த இசையமைப்பாளர்)

2004 செல்லமே பிரேம சந்தரங்கம்
அரசாட்சி ஜட்ஜ்மென்ட் கடக்: தி டெஸ்ராயர்
அருள் ஆக்கந்துடு மெய்ன் பல்வான்
2005 தொட்டி ஜெயா •# ஜலகண்டா
உள்ளம் கேட்குமே பிரேமின்ச்சி சுடு
அந்நியன் அப்பரிச்சுடு அப்பரிச்சிட் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)

தமிழக அரசு திரைப்பட விருது (சிறந்த இசையமைப்பாளர்)

கஜினி கஜினி தமிழக அரசு திரைப்பட விருது (சிறந்த இசையமைப்பாளர்)

பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருது (சிறந்த இசையமைப்பாளர்)

2006 வேட்டையாடு விளையாடு இராகவன் தி ஸ்மார்ட் ஹன்ட்
குமரன் சைனிகுடு
2007 பச்சைக்கிளி முத்துச்சரம் துரோகி
உன்னாலே உன்னாலே நீவாலே நீவாலே
வெற்றித் திருமகன் (2008) முன்னா பகவத்
2008 பீமா பீமா
சத்யம் சல்யூட் ரிட்டன் ஆப் காக்கி
தாம் தூம் ரக்சகுடு
வாரணம் ஆயிரம் சூர்யா த/பெ கிருஷ்ணா சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)

விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)
பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருது (சிறந்த இசையமைப்பாளர்)

2009 அயன் வீடுக்கடே வித்வான்சக்: தி டெஸ்ராயர் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது (தமிழ்)

மிர்ச்சி திரை இசை விருதுகள் - தெற்கு (சிறந்த இசைப்பாளர் - தமிழ்)
எடிசன் விருதுகள் - இந்தியா (சிறந்த இசையமைப்பாளர்)

ஆதவன் கட்டிக்குடு தில்தார் தி ஆர்யா விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)
2010 இராம்சரண் ஆரஞ்சு மிர்ச்சி திரை இசை விருதுகள் - தெற்கு (சிறந்த பாடல் தொகுப்பு - தெலுங்கு)
எங்கேயும் காதல் நின்னு சூஸ்தே லவ் வஸ்தாவுண்டி விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)
2011 கோ இரங்கம் எடிசன் விருதுகள் - இந்தியா (சிறந்த இசையமைப்பாளர்)
ஏழாம் அறிவு செவன்து சென்சு சென்னை vs சீனா
2012 நண்பன் சிநேகிதுடு
ஒரு கல் ஒரு கண்ணாடி ஒகே ஒகே
மாற்றான் பிரதர்ஸ் நெ1 ஜுட்வா
துப்பாக்கி துப்பாக்கி தென்னிந்திய பன்னாட்டுத் திரைப்பட விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர் - தமிழ்)
2013 இரண்டாம் உலகம் வர்ணா
என்றென்றும் புன்னகை சிருனவ்வுலா சிருஜல்லு
2014 இது கதிர்வேலன் காதல்
யான்
2015 என்னை அறிந்தால் எந்த வாடு கானே
அனேகன் அனேகுடு அனேக் எடிசன் விருதுகள் - புகழ்பெற்ற பாடல் (டங்காமாரி)
நண்பேன்டா குட் ஈவினிங்
2016 கெத்து
இருமுகன் இன்கோக்கடு இன்டர்நேசனல் ரௌடி
சிங்கம் 3 யாமுடு 3
2017 வனமகன் 50வது திரைப்படம்
ஸ்பைடர் ஸ்பைடர்
துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில்
கருப்பு ராஜா வெள்ளை ராஜா முதற் கட்டப் பணிகள்
2019 காப்பான்

பாடலாசிரியராக

[தொகு]
பாடல் ஆண்டு திரைப்படம் பாடகர்கள்
குளு குளு வெண்பனி போல 2010 எங்கேயும் காதல் அர்ஜுன் மேனன்
வை வை வைபை 2017 சிங்கம் 3 கார்த்திக், நிகிதா காந்தி, கிரிஸ்டோபர் ஸ்டான்லி

விளம்பரப்படங்கள்

[தொகு]

இவர் 2008ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த கோக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப்படம், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் அகரம் தொண்டு நிறுவனம் இணைந்து தயாரித்த ஹுரோவா? ஜீரோவா? எனும் கல்வி உரிமை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட விழிப்புணர்ச்சி விளம்பரப்படம் போன்று பல்வேறு விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் நடிகர்கள் ஹுரோவா? ஜீரோவா? எனும் விளம்பரப்படத்தில், தமிழ்த் திரைத்துறையின் முன்னனி நடிகர்களான விஜய், சூர்யா, மாதவன், ஜோதிகா போன்றோர் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

[தொகு]
சிறப்பு விருதுகள்
  • 2009 ஆம் ஆண்டு, தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார்.
  • 2015 ஆம் ஆண்டு சனவரி மாதம், தமிழ்நாடு ரோட்டரி சங்கங்களின் வாழ்நாள் சாதனையாளர் விருதை, தமிழக ஆளுநர் ரோசையாவிடம் பெற்றார்[2].
  • 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ரிட்சு குழுமத்தின் மேசுட்ரோ விருதைப் பெற்றார்[3].
இதர விருதுகள்
ஆண்டு திரைப்படம் மொழி வகை வழங்கியவர் முடிவு
2001 மின்னலே தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) வெற்றி
2003 சாமி தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) பரிந்துரை
காக்க காக்க தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் தமிழக அரசு திரைப்பட விருதுகள் வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள் வெற்றி
2005 அந்நியன் தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் தமிழக அரசு திரைப்பட விருதுகள் வெற்றி
கஜினி தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) பரிந்துரை
சிறந்த இசையமைப்பாளர் தமிழக அரசு திரைப்பட விருதுகள் வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள் வெற்றி
2006 வேட்டையாடு விளையாடு தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) பரிந்துரை
2007 உன்னாலே உன்னாலே தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) பரிந்துரை
சிறந்த இசையமைப்பாளர் விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) வெற்றி
சிறந்த இளமையான இசைத் தொகுப்பு இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள் வெற்றி
பெரும்பாலானோர் ரசித்த பாடல்
(ஜுன் போனால்)
வெற்றி
2008 வாரணம் ஆயிரம் தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருதுகள் வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) வெற்றி
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(அவ என்னத் தேடி வந்த அஞ்சல)
வெற்றி
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(முன்தினம் பார்த்தேனே)
பரிந்துரை
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை)
பரிந்துரை
ஆண்டின் சிறந்த இசைத்தொகுப்பு இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள் வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் சவுத் ஸ்கோப் விருதுகள் வெற்றி
தாம் தூம் தமிழ் ஆண்டின் சிறந்த காதல் பாடல்
(அன்பே என் அன்பே)
இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள் வெற்றி
2009 அயன் தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) வெற்றி
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(விழிமூடி யோசித்தால்)
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) பரிந்துரை
இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள் வெற்றி
ஆண்டின் சிறந்த இசைத்தொகுப்பு மிர்ச்சி திரையிசை விருதுகள் வெற்றி
மிர்ச்சி நேயர்களின் சிறந்த இசைத்தொகுப்பு வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் எடிசன் விருதுகள் வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் சவுத் ஸ்கோப் விருதுகள் வெற்றி
ஆதவன் தமிழ் சிறந்த இசையமைப்பாளர் விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) வெற்றி
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(ஹசிலி ஃபிசிலி)
பரிந்துரை
சிறந்த இசையமைப்பாளர் இசையருவி தமிழ்த் திரையிசை விருதுகள் வெற்றி
சிறந்த இசைத்தொகுப்பு வெற்றி
2010 ஆரஞ்சு தெலுங்கு சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) பரிந்துரை
சிறந்த இசைத்தொகுப்பு மிர்ச்சி திரையிசை விருதுகள் வெற்றி
மிர்ச்சி நேயர்களின் சிறந்த இசைத்தொகுப்பு வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் பிக் பண்பலை விருதுகள் வெற்றி
2011 எங்கேயும் காதல் தமிழ் சிறந்த இசையமைப்பாளர் விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) பரிந்துரை
சிறந்த இசையமைப்பாளர் விஜய் திரையிசை விருதுகள் வெற்றி
சிறந்த மேற்கத்திய பாடல்
(நங்கை நிலாவின் தங்கை)
வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் பிக் தமிழ் மெல்லிசை விருதுகள் வெற்றி
சிறந்த இசைத்தொகுப்பு வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் எடிசன் விருதுகள் வெற்றி
கோ தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) பரிந்துரை
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(என்னமோ ஏதோ)
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) வெற்றி
சிறந்த பின்னணி இசை வெற்றி
புகழ்பெற்ற பாடலுக்கான விருது
(என்னமோ ஏதோ)
விஜய் திரையிசை விருதுகள் வெற்றி
ஆண்டின் சிறந்த பாடல்
(என்னமோ ஏதோ)
மிர்ச்சி திரையிசை விருதுகள் வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் எடிசன் விருதுகள் வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் சென்னை டைம்ஸ் திரைப்பட விருதுகள் வெற்றி
ஏழாம் அறிவு தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) பரிந்துரை
ஃபோர்ஸ் இந்தி சிறந்த இசையமைப்பாளர் ஸ்டார் டஸ்ட் விருதுகள் பரிந்துரை
2012 நண்பன் தமிழ் சிறந்த இசையமைப்பாளர் விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) பரிந்துரை
சிறந்த இசையமைப்பாளர் பிக் தமிழ் மெல்லிசை விருதுகள் பரிந்துரை
ஒரு கல் ஒரு கண்ணாடி தமிழ் பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(வேணாம் மச்சான்)
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) பரிந்துரை
துப்பாக்கி தமிழ் சிறந்த இசையமைப்பாளர் பிலிம்பேர் விருதுகள் (தென்னிந்தியா) பரிந்துரை
பெரும்பாலானோர் விரும்பிய பாடல்
(கூகுள் கூகுள்)
விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் தென்னிந்திய பன்னாட்டுத் திரைப்பட விருதுகள் (தமிழ்) வெற்றி
சிறந்த இசையமைப்பாளர் எடிசன் விருதுகள் பரிந்துரை
2015 என்னை அறிந்தால் தமிழ் சிறந்த இசையமைப்பாளர் தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (தமிழ்) பரிந்துரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. A special birthday for Harris, 8 January 2008
  2. "ஹாரிஸ் ஜெயராஜை கெளரவப்படுத்திய கவர்னர்". இந்தியாக்ளிட்ஸ். 22 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2015.
  3. "ரிட்சு இசுடைல் விருதுகள் 2015". இந்தியாக்ளிட்ஸ். 4 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரிஸ்_ஜயராஜ்&oldid=3884604" இலிருந்து மீள்விக்கப்பட்டது