மின்னலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மின்னலே
இயக்குனர் கௌதம் மேனன்
தயாரிப்பாளர் Dr. முரளி மனோகர்
கதை கௌதம் மேனன்
நடிப்பு மாதவன்,
ரீமா சென்,
அப்பாஸ்,
விவேக்,
நாகேஷ்
இசையமைப்பு ஹாரிஸ் ஜயராஜ்
வெளியீடு 2001
கால நீளம் 150 நிமிடங்கள்
மொழி தமிழ்
ஆக்கச்செலவு Rs.7,30,00,000

மின்னலே திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மாதவன்,ரீமா சென் போன்ற பலரின் நடிப்பிலும் வெளிவந்த இத்திரைத்தை கௌதம் மேனன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

காதல்படம்

கதை[தொகு]

கல்லூரியில் அடாவடித்தனம் செய்யும் மாணவனான ராஜேஷ் (மாதவன்) அங்கு பயிலும் மாணவனான சாமுவேல் (அப்பாஸ்) இருவரும் பர எதிரிகள்.பலமுறை மோதியும் உள்ளனர்.இவர்களிருவரும் கல்லூரியிலிருந்து வேலைகள் தேடவும் ஆரம்பிக்கின்றனர்.அச்சமயம் ராஜேஷ் பெங்களூரில் அழகிய பெண்ணொருவரைச் சந்திக்கின்றார்.அவரைப் பார்த்த உடனே அவர் மீது காதல் கொள்ளும் ராஜேஷ் அவரைத் தேடியும் செல்கின்றார்.ஆனால் அவரோ சென்னையிலேயே தங்கியுள்ளார் என்பதனை பின்னைய நாட்களிள் அறிந்து கொள்ளும் ராஜேஷ் அவரைப் பலமுறை சந்திக்கவும் செய்கின்றார்.அச்சமயம் அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வந்த சாமுவேல் ராஜேஷ் காதலித்த பெண்ணையே திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது இதனை அறிந்து கொள்ளும் ராஜேஷ் தானே அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் மாப்பிள்ளை என்ற பொய்யைக் கூறி அவர் வீட்டினுல் நுழையவும் செய்கின்றார்.இச்செய்தியை பின்னர் உணர்ந்து கொள்ளும் அவர் காதலியும் அவரை ஏற்றாரா என்பதே கதையின் முடிவு.

துணுக்குகள்[தொகு]

  • 175 நாட்கள் தொடர்ந்து திரையில் காண்பிக்கப்பட்டது இத்திரைப்படம்.
  • திரையில் வெளியாகின முதல் வாரத்தில் 40 மில்லியன் இந்திய ரூபாய்க்களையும் மொத்தத்தொகையாக 375 மில்லியன் இந்திய ரூபாய்க்களையும் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
  • இத்திரைப்படம் ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
  • இத்திரைப்படத்தின் மூலம் ஹ்ரிஷ் ஜெயராஜ் தனது இசைப்பயணத்தை தொடங்கினார்.
  • சில்லுனு ஒரு காதல் திரைப்பட இயக்குந்ரான என்.கிருஷ்ணா இத்திரைப்படத்தில் லாரி ஓட்டுபவராக நடித்துள்ளார்.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மின்னலே&oldid=1374238" இருந்து மீள்விக்கப்பட்டது