என்னை அறிந்தால்
| என்னை அறிந்தால் | |
|---|---|
| இயக்கம் | கெளதம் வாசுதேவ் மேனன் |
| தயாரிப்பு | ஏ.எம். இரத்தினம் ஐசுவர்யா |
| கதை | கௌதம் மேனன் ஸ்ரீதர் இராகவன் |
| இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
| நடிப்பு | அஜித்குமார் அனுஷ்கா திரிஷா அருண் விஜய் |
| ஒளிப்பதிவு | டான் மெக்கார்த்தர் |
| படத்தொகுப்பு | ஆன்டனி |
| கலையகம் | ஸ்ரீ சாய்ராம் கிரியேசன் |
| விநியோகம் | ஈராஸ் இன்டர்நேஷனல் |
| வெளியீடு | 5 பிப்ரவரி 2015 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | ₹ 65 கோடி[1] |
| மொத்த வருவாய் | ₹ 100 கோடி |
என்னை அறிந்தால் (Yennai Arindhaal) என்பது, நடிகர் அஜித் குமார்,அனுஷ்கா நடிப்பில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.
நடிகர்கள்
[தொகு]- அஜித் குமார் - சத்தியதேவ்
- அனுசுகா செட்டி - தேன்மொழி
- அருண் விஜய் - விக்டர் மனோ
- திரிஷா - ஹேமானிகா
- பார்வதி நாயர் - எலிசபெத் (லிசா)
- பார்வதி நாயர் - எலிசபெத் (லிசா)
- விவேக் - ரிவால்வர்" ரிச்சர்
- அமித் பார்கவ் - தேன்மொழியின் வருங்கால கணவன்
- சுமன் - முருகானந்தம்
- நாசர் (சிறப்புத் தோற்றம்)
- ஆசிசு வித்யார்த்தி - கோல்டன் ராஜ்
வெளியீடு
[தொகு]இத்திரைப்படம் 2015 சனவரி தைப்பொங்கல் அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடையாத காரணத்தால் இத்திரைப்படம் பிப்ரவரி 5 அன்று வெளியாகுமென இப்படத்தின் தயாரிப்பாளரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[2]
இசை
[தொகு]| என்னை அறிந்தால் | ||||
|---|---|---|---|---|
| ஒலிப்பதிவு
| ||||
| வெளியீடு | 1 சனவரி 2015 | |||
| ஒலிப்பதிவு | 2014 | |||
| இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் | |||
| நீளம் | 32:22 | |||
| மொழி | தமிழ் | |||
| இசைத்தட்டு நிறுவனம் | சோனி இந்தியா | |||
| இசைத் தயாரிப்பாளர் | ஹாரிஸ் ஜயராஜ் | |||
| ஹாரிஸ் ஜயராஜ் காலவரிசை | ||||
| ||||
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் ஒன்றிற்கு, இங்கிலாந்திலிருந்து ஒருவரை பாட வைத்ததாக ஹாரிஸ் தெரிவித்தார்.[3]. மேலும் படத்தின் பாடல்கள், நவம்பர் மாதத்தில் வெளியிடப்படுமென படக்குழுவினர் தெரிவித்தனர்[4]. இப்படத்தில் இடம்பெற்ற "அதாரு அதாரு" பாடல் மட்டும் 2014 திசம்பர் 11 அன்று வெளியானது. இதர பாடல்கள் 2015 இல் புத்தாண்டு அன்று நள்ளிரவில் வெளியாயின.
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
| 1. | "ஏன் என்னை" | தாமரை | சுனிதா சாரதி, கரிஷ்மா ரவிச்சந்திரன் | 04:08 | ||||||
| 2. | "மழை வரப்போகுதே" | தாமரை | கார்த்திக், எம்சி ஜெஸ் | 05:40 | ||||||
| 3. | "உனக்கென்ன வேணும் சொல்லு" | தாமரை | பென்னி தயாள், மஹதி | 05:07 | ||||||
| 4. | "என்னை அறிந்தால்" | தாமரை | தேவன் ஏகாம்பரம், மார்க் தாமஸ், அபிஷேக் | 05:43 | ||||||
| 5. | "அதாரு அதாரு" | விக்னேஷ் சிவன் | விஜய் பிரகாஷ், கானா பாலா | 04:55 | ||||||
| 6. | "மாயா பஜார்" | தாமரை | ஆளப் ராஜூ, பிரியா சுப்பிரமணியன், வேல்முருகன், கிருஷ்ணா ஐயர் | 04:14 | ||||||
| 7. | "இதயத்தில் ஏதோ ஒன்று" | தாமரை | சின்மயி | 03:55 | ||||||
மொத்த நீளம்: |
32.22 | |||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தல55 படத்தின் ஆக்கச்செலவு: 65கோடி". தினமலர். 28 அக்டோபர் 2014. Retrieved 2 நவம்பர் 2014.
- ↑ "என்னை அறிந்தால் வெளியீடு". Tamilulagam. 17 சனவரி 2015. Archived from the original on 2016-03-04. Retrieved 18 சனவரி 2015.
- ↑ "தல55 படத்திற்காக புதுக்குரல்". Behindwoods. 13 ஆகத்து 2014. Archived from the original on 2014-09-14. Retrieved 2 நவம்பர் 2014.
- ↑ "தல55 படத்தின் நிலவரம்". தினமலர். 6 அக்டோபர் 2014. Retrieved 2 நவம்பர் 2014.