தாமரை (கவிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாமரை (கவிஞர்)
பிறப்பு தாமரை

இந்தியாவின் கொடி கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தொழில் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், ஊடகவியலாளர்
எழுதிய காலம் 1999—இன்று

தாமரை, குறிப்பிடத்தக்க தமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார்.

கோவையில் பிறந்த தாமரை, எந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகியவற்றையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இயக்குனர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக[1] தாமரை அறிமுகமானார். "வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ...” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். தனக்கென ஒரு கொள்கை, வழிமுறை, இலக்கு ஆகியவற்றைக் கொண்ட இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார்[2]. திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி மிகச்சிறந்த வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.

பாடல்கள் எழுதியுள்ள திரைப்படங்கள் [3][தொகு]

படம் வருடம் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளாரா பிற குறிப்புகள்
வாரணம் ஆயிரம் 2008 இல்லை ஏத்தி ஏத்தி பாடல் - நா.முத்துக்குமார்
காதலில் விழுந்தேன் 2008 இல்லை நாக்கமுக்க நாக்கமுக்க பாடலை படத்தின் இயக்குநரே எழுதியுள்ளார்
வேட்டையாடு விளையாடு 2006 ஆம்
கஜினி - இல்லை x-மச்சி y-மச்சி பாடல் -
கண்ட நாள் முதல் 2005 ஆம் -
காக்க காக்க 2003? ஆம்? -
மின்னலே 2000? இல்லை ஹாரிஸ் ஜயராஜ், கௌதம் மேனன் கூட்டணியில் முதல் பாடல், வசீகரா என் நெஞ்சினிக்க - "மாமா மாமா" பாடல் வாலி எழுதியது
இனியவளே இல்லை? - முதல் திரைப்பாடல்
ஆதவன்
ஆண்டான் அடிமை
ஏபிசிடி
ஆல்பம்
ஏப்ரல் மாதத்தில்
அய்யனார்
பீமா
சென்னையில் ஒரு மழைகாலம்
பைவ் ஸ்டார்
கஜினி
ஹெய் நீ ரொம்ப அழகா இருக்க
ஜெயா
காக்க காக்க
கண்ட நாள் முதல்
கண்னோடு காண்பதெல்லாம்
கார்த்திக் அனிதா
குத்து
லவ் மேரேஜ்
மாசி
மாயன்
மஞ்சு
மின்னலே
முத்தம்
நாணயம்
நெல்லு
நெஞ்சில் ஜில் ஜில்
புதுமைப்பித்தன்(1998)
ராகவன்
சா பூ திரி
சண்டகோழி
தூங்கா நகரம்
உத்தரவு
வேலூர் மாவட்டம்
வேட்டையாடு விளையாடு
யாவரும் நலம்
விண்ணை தாண்டி வருவாயா
இராவணன்

இது முழுமையான தொகுப்பு அல்ல. இன்னும் பல திரைப்படங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

எழுதிய பாடல்கள்[தொகு]

  • வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்[4]

எழுதியுள்ள புத்தகங்கள்[தொகு]

ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் - கவிதைத் தொகுப்பு

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_(கவிஞர்)&oldid=1548499" இருந்து மீள்விக்கப்பட்டது