உள்ளடக்கத்துக்குச் செல்

திரிஷா கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திரிஷா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திரிஷா கிருஷ்ணன்

திரிசா கிருஷ்ணன்
இயற் பெயர் அனுராதிகா[1]
பிறப்பு மே 4, 1983 (1983-05-04) (அகவை 43)
இந்தியா சென்னை , தமிழ் நாடு
வேறு பெயர் திரிஷா கிருஷ்ணன், அனுராதிகா
நடிப்புக் காலம் 1999 - தற்போது வரை
பெற்றோர் தந்தை : கிருஷ்ணரத்னம் ஐயர் (கிருஷ்ணன்)
தாயார் : உமாபாரதி (உமா)
குறிப்பிடத்தக்க படங்கள் சாமி (2003)
வர்ஷம் (2004)
கில்லி (2004)
அத்தடு (2005)
நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (2005)
உனக்கும் எனக்கும் (2006)
ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலே (2007)
விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
மங்காத்தா (2011)
96 (2018)
பொன்னியின் செல்வன் (2022)

திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]
  • இவரது இயற்பெயர் அனுராதிகா மேலும் இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்பே மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடிக்கும் போதே "திரிஷா" என்று பெயர் மாற்றி கொண்டு நடித்தார்.
  • இவர் சென்னையில் ஒரு மலையாள பிராமணர் குடும்பத்தில் கிருஷ்ணரத்னம் ஐயர் (கிருஷ்ணன்)–உமாபாரதி (உமா) இணையாருக்கு மகளாகப் பிறந்தார்.
  • இவரின் தந்தை ஆரம்பகாலத்தில் சென்னையில் ஒரு பெரிய நட்சத்திர உணவகத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார்.
  • அதே சமயத்தில் திரிஷா படிக்கும் வயதில் இருந்தே பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடத்தப்படும் பல நாடக போட்டிகளில் கலந்து கொண்டு தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டினைப் பெற்றார்.
  • அதை உணர்ந்த தாயார் உமா அவர்கள் தனது மகளின் நடிப்பு திறமையை கண்டறிந்து திரையுலகில் ஒரு பெரிய நட்சத்திரநாயகியாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திறன் போட்டிகளில் அனுராதிகாவை (திரிஷா) களமிறக்கினார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்பாத்திரத்தின் பெயர்மொழிமேலும் தகவல்கள்
1999ஜோடிதுணை கதாபாத்திரம் "அனுராதா"தமிழ்
2002மௌனம் பேசியதேசந்தியாதமிழ்வெற்றியாளர், தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
2003மனசெல்லாம்மலர்தமிழ்
சாமிபுவனாதமிழ்
லேசா லேசாபாலமணிதமிழ்வெற்றியாளர், ஐ.டி.எஃப்.ஏ.வின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருது
அலைமீராதமிழ்
எனக்கு 20 உனக்கு 18பிரீத்திதமிழ்
2004வர்ஷம்சைலஜாதெலுங்குசிறந்த தெலுங்குத் திரைப்பட நடிகைக்கான விருது
சந்தோசம் விருது ஆகியவற்றைப் பெற்றார்.
கில்லிதனலட்சுமிதமிழ்
ஆய்த எழுத்துமீராதமிழ்
2005திருப்பாச்சிசுபாதமிழ்
அத்தடுதெலுங்கு
நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானாSiriதெலுங்குவெற்றியாளர், சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. நந்தி விருதினை வென்றார்., சிறந்த நடிகைக்கான சினி”மா” விருது
ஜிபுவனாதமிழ்
நந்துபூரிதெலுங்குசிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அல்லாரி புல்லோடுதிரிஷா ராவ்தெலுங்கு
ஆறுமகாலட்சுமிதமிழ்
2006ஆதிஅஞ்சலிதமிழ்
பௌர்ணமிபௌர்ணமிதெலுங்குசமர்// தமிழ்
பங்காரம்சிறப்புத் தோற்றம்தெலுங்கு
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங்கவிதாதமிழ்விருப்பமான நடிகைக்கான விஜய் விருதுகளை வென்றார்.
ஸ்டாலின்சித்ராதெலுங்கு
சைனிகுடாவரலட்சுமிதெலுங்கு
2007ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலேகீர்த்திதெலுங்குசிறந்த நடிகைக்கான சினி”மா” விருது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றார்.
கிரீடம்திவ்யாதமிழ்பரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருது
2008கிருஷ்ணா சந்தியாதெலுங்குபரிந்துரை, சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது
பீமாசாலினிதமிழ்
வெள்ளி திரைதிரிஷவகாதமிழ்சிறப்புதோற்றம்
குருவிராதாதேவி/தேவிதமிழ்
புஜ்ஜிகாடுசித்திதெலுங்கு
அபியும் நானும்அபி ரகுராம்தமிழ்வெற்றியாளர், தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது
பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகைக்கான விருது
பரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருது
கிங்சிராவணிதெலுங்கு
2009சர்வம்சந்தியாதமிழ்பரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருது
சங்கம்மகாலட்சுமி பசுபதிதெலுங்கு
2010நமோ வெங்கடேசாபூஜாதெலுங்கு
விண்ணைத்தாண்டி வருவாயாஜெசி தேக்குட்டுதமிழ்
யே மாயா சேசாவேதிரிசாதெலுங்குசிறப்புதோற்றம்
காட்டா மேதாகேனா கன்பூலேஇந்தி
மன்மதன் அம்புஅம்புஜம்தமிழ்
2011குஷிகாதெலுங்கு
மங்காத்தாதமிழ்
2015சகலகலா வல்லவன்திவ்யாதமிழ்
2015லயன்மகாலட்சுமிதெலுங்கு
2015என்னை அறிந்தால்தமிழ்
2015சீக்கட்டி ராஜ்யம்மல்லிகாதெலுங்கு
2015பூலோகம்சிந்துதமிழ்
2016அரண்மனை 2அனிதாதமிழ்
2016நாயகிகாயத்ரிதமிழ்
2016கொடிருத்ராதமிழ்
2018ஹே ஜூட்கிரிஸ்டல் ஆன் சக்ரபரம்புமலையாளம்
2018மோகினிமோகினி / வைஷ்ணவிதெலுங்கு
201896S. ஜானகி தேவிதமிழ்
2019பேட்டசரோதமிழ்

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்!". நியூஸ்ஜெ தொலைக்காட்சி. Archived from the original on 2021-05-05. Retrieved மே 4, 2021.
  2. "எம். எஸ். என் தளச் செய்தி". Archived from the original on 2007-05-13. Retrieved 2007-05-18.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிஷா_கிருஷ்ணன்&oldid=4596715" இலிருந்து மீள்விக்கப்பட்டது