உள்ளடக்கத்துக்குச் செல்

பீமா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீமா
An early poster for the film
இயக்கம்லிங்குசாமி
தயாரிப்புஏ. எம். ரத்னம்
கதைலிங்குசாமி
சுஜாதா
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புவிக்ரம்,
திரிஷா,
பிரகாஷ் ராஜ்
ரகுவரன்
செரின்
ஒளிப்பதிவுஆர். டி. ராஜ்சேகர்
படத்தொகுப்புஎன்டனி
விநியோகம்சிறி சூர்யா மூவிஸ்
வெளியீடுஜனவரி 14, 2008
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு30 கோடிகள்

பீமா என்பது 2008 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். லிங்குசாமி[1] இயக்கிய அப்படத்தில் விக்ரம் திரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் பின்னணி இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை பாடல்களை ந. முத்துகுமார், ப.விஜய், வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 2006 ஏப்ரல் 24 ஆம் நாள் தொடங்கியது. இந்தியாவின் பலப் பாகுதிகளிலும் படப்பிடிப்பு நாடைப்பெற்றது. 2007 ஆம் தைப்பொங்கலுக்கு வெளியிட ஏற்பாடாகியிருந்தப்போதும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமக வெளியீடு மே 11 2007க்கு பிற்போடப்பட்டது.சிவாஜி திரைப்படத்தின் வெளியீடு காரணமாக மீண்டும் வெளியீடு பிற்போடப்பட்டது.[2] படத்தின் இசை இருவட்டு ஆகஸ்ட் 10 2007 இல் வெளியிடப்பட்டது. படம் ஜனவரி 15 2008 ஆம் நாள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[3]

கதை சுருக்கம்

[தொகு]

சென்னையில் தனது பலத்தை நி்ருபிக்க முயலும் சின்னாவின் (பிரகாஷ் ராஜ்) குழுவுக்கும் பலமான பெரியவரின் (ரகுவரன்) குழுவிற்கும் இடையான சண்டைகளை மையப்படுத்தி இத்திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. சிறுவயது முதலே சின்னாவை தனது இலட்சிய மனிதனாக போற்றி வளர்ந்து வரும் சேகர் (விக்ரம்), சின்னாவின் குழுவில் இணைந்து பெரியவரின் குழுவிற்கு சவாலாக விளங்குகிறார். சென்னை நகருக்கு புதிதாக வரும் காவல்துறை அதிகாரி (அசிஷ் வித்தியார்த்தி) இவ்விரண்டுக் குழுக்களையுமே எப்படியாவது அழிப்பதற்காக சிறிய அணியொன்றை அமைத்து சட்டவிரோத குழுக்களை தேடி அழிக்கிறார்.

சென்னையின் சட்டவிரோதக் குழுக்கள் பல அழிக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளின் மத்தியில் சேகர் சின்னாவின் பழைய காதலை இணைத்து வைத்து தானும் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பெரியவரின் கும்பலை முற்றாக அழித்துவிட்டு சென்னையில் சின்னாவை பலமிக்க மனிதனாக ஆக்கிவிட்டு சேகர் சின்னா குழுவில் இருந்து பிரிகிறார். படத்தின் கடைசியில் சின்னா, சேகர், சின்னாக்குழு முழுவதும் காவல் துறையால் கொல்லப்படுகிறது.

பாத்திரங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bheema - Photo Gallery". Archived from the original on 2008-01-18. பார்க்கப்பட்ட நாள் 06 December. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |5= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  2. "'Bhima' only after 'Sivaji' – Lingusamy is firm!" (in English). TamilStar.com. Archived from the original on 2007-05-14. பார்க்கப்பட்ட நாள் 2007-04-29. {{cite web}}: External link in |publisher= (help)CS1 maint: unrecognized language (link)
  3. "300 prints for 'Bheemaa'" (in English). Indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 2008-01-11. {{cite web}}: External link in |publisher= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீமா_(திரைப்படம்)&oldid=3709942" இலிருந்து மீள்விக்கப்பட்டது