உள்ளடக்கத்துக்குச் செல்

லிஜோமோல் ஜோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிஜோமோல் ஜோஸ்
2019இல் லிஜோமோல்
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2016–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
அருண் ஆண்டனி ஓனிசெரில் (தி. 2021)

லிஜோமோல் ஜோஸ் (Lijomol Jose) ஓர் இந்திய நடிகையாவார். இவர் முதன்மையாக மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தோன்றுகிறார். அவர் மிகவும் பாராட்டப்பட்ட மகேஷிண்டே பிரதிகாரம் (2016) என்ற மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் (2016) , ஹனி பீ 2.5 (2017) போன்ற படங்களில் நடித்தார். சிவப்பு மஞ்சள் பச்சை (2019) படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[1]

தொழில்

[தொகு]

2016 ஆம் ஆண்டில், இவர் மலையாளத் திரைப்படமான மகேசிண்ட பிரதிகாரம் திரைப்படத்தில் அறிமுகமானார்.[2] கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் (2016) படத்தில், இவருக்கு ஒரு பெரிய பாத்திரம் வழங்கப்பட்டது. மேலும், படம் வெற்றி பெற்றது.[3][4] இவரது மூன்றாவது படமான ஹனி பீ 2.5 (2017)இல், நடிகை பாவனாவின் தனிப்பட்ட அழகுக் கலைஞராக நடித்தார்.[5] பின்னர் இவர் மம்முட்டியுடன் ஸ்ட்ரீட் லைட்ஸ் (2018) படத்தில் நடித்தார். அதற்கு முன் சித்தார்த்துக்கு இணையாக சிவப்பு மஞ்சள் பச்சை (2019) மூலம் தமிழ் திரைப்படவுலகில் அறிமுகமானார்.[6][7] 2021 ஆம் ஆண்டில், நடிகர் சூர்யாவுடன் தீதும் நன்றும், ஜெய் பீம் போன்ற தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்தார். ஜெய்பீம் படத்தில் செங்கேணியின் வேதனையை மாசற்ற பரிபூரணத்துடன் சித்தரித்தார்.[8]

சொந்தட வாழ்க்கை

[தொகு]

லிஜோமோல் ஜோஸ், அருண் ஆண்டனி ஓனிசெரில் என்பவரை 5 அக்டோபர் 2021 அன்று கேரளாவின் வயநாட்டில் திருமணம் செய்து கொண்டார்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Krishnakumar, Ranjani (1 November 2021). "Jai Bhim Review: A No Holds Barred Film on Institutional Violence". Archived from the original on 1 November 2021. பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
  2. "Mollywood Movie Actress Lijomol Jose Biography, News, Photos, Videos".
  3. S, Aravind K (30 November 2016). "Malayalis' favourite 'Soniya' signs her third". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்).
  4. "It's the time of love, not wedding". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). 30 November 2017.
  5. "Many mistook me as Bhavana's touch-up girl: Lijomol".
  6. Manu, Meera (27 March 2017). "Keeping fingers crossed: Lijomol Jose". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்).
  7. Subramanian, Anupama (10 March 2019). "Lijomol forays into K'Town". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்).
  8. "Jai Bhim Review | Lijomol Jose is Brilliant in This Pertinent Legal Drama". November 2021.
  9. "Malayalam actress Lijomol Jose gets married to Arun Antony Onisseril in Wayanad, Kerala". India Today (in ஆங்கிலம்). 6 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிஜோமோல்_ஜோஸ்&oldid=4014720" இலிருந்து மீள்விக்கப்பட்டது