சரிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சரிதா தென்னிந்திய திரைப்பட நடிகை. 141 படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.[1][2][3]

வரலாறு[தொகு]

சரிதா கெ. பாலசந்தரால் 1978இல் மரோசரித்ரா என்ற தெலுங்குப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 ல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதன்பின் கெ.பாலசந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப்படத்தில் அதே ஆண்டு நடித்தார். அந்தப்படம் தப்புத்தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது

சரிதா பாலசந்தரின் முக்கியமான கதாநாயகி. 22 படங்களில் பாலசந்தர் அவரை நடிக்கச்செய்திருக்கிறார். அவற்றில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுக்கவிதை போன்றவை குறிப்புடத்தக்கவை. பாலசந்தர் படங்கள் வழியாக சரிதா பல முக்கியமான விருதுகளைப் பெற்றார்.

தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்த சரிதா ஓர் இடைவெளிக்குப்பின் 2005 ல் தமிழில் ஜூலி கணபதி என்ற திரைப்படத்தில் மனநிலை பிறழ்ந்த கதாபாத்திரத்தில் நடித்தார்

படங்கள்[தொகு]

 • அவள் அப்படித்தான்
 • தப்புத்தாளங்கள்
 • நெஞ்சில் ஒரு ராகம்
 • மலையூர் மம்பட்டியான்
 • கொம்பேறி மூக்கன்
 • மௌனகீதங்கள்
 • நெற்றிக்கண்
 • தண்ணீர் தண்ணீர்
 • ஊமை விழிகள்
 • சாட்டை இல்லாத பம்பரம்
 • வீட்டுக்கு ஒரு கண்ணகி
 • அண்ணி
 • அக்னி சாட்சி
 • கல்யாண அகதிகள்
 • பொண்ணு ஊருக்கு புதிசு
 • எங்க ஊரு பொண்ணு
 • புதுக்கவிதை
 • சிவப்பு சூரியன்
 • தங்கைக்கு ஒரு கீதம்
 • நூல்வேலி
 • பூப்பூவா பூத்திருக்கு
 • வேதம் புதிது
 • ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது
 • தாய் மூகாம்பிகை
 • மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி
 • கீழ்வானம் சிவக்கும்
 • வண்டிச்சக்கரம்
 • ஆல்பம்
 • ஜூலி கணபதி

விருதுகள்[தொகு]

சரிதா சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை 1979-80, 1982-83, 1988 ஆகிய ஆண்டுகளுக்காகப் பெற்றார்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிதா&oldid=2717328" இருந்து மீள்விக்கப்பட்டது