துரை (இயக்குநர்)
Appearance
துரை | |
---|---|
பிறப்பு | திருவள்ளூர், தமிழ்நாடு | 25 பெப்ரவரி 1940
இறப்பு | 22 ஏப்ரல் 2024 திருநின்றவூர், தமிழ்நாடு | (அகவை 84)
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், படத் தொகுப்பாளர் |
வலைத்தளம் | |
directordurai |
துரை (Durai, 25 பிப்ரவரி 1940 – 22 ஏப்பிரல் 2024)[1] ஓர் இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார்.[2] 2014 வரை, இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் 46 படங்களை இயக்கியுள்ளார். வணிகத் திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டாலும், இவர் பெண்களை மையப்படுத்தி அவளும் பெண்தானே, பசி போன்ற படங்களை இயக்கினார். பசி இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றது.[3] இவர் 2011 இல் 58வது தேசிய திரைப்பட விருதுகளில் (இந்தியா) நடுவர் உறுப்பினராகப் பணியாற்றினார்.[2] 2011 வரை, இவர் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[2]
திரைப்படவியல் பங்களிப்புகள்
[தொகு]- அவளும் பெண் தானே (1974)
- ஒரு குடும்பத்தின் கதை (1975)
- ஆசை 60 நாள் (1976)
- ரகுபதி ராகவன் ராஜாராம் (1977)
- பாவத்தின் சம்பளம் (1978)
- ஒரு வீடு ஒரு உலகம் (1978)
- சதுரங்கம் (1978)
- ஆயிரம் ஜென்மங்கள் (1978)
- பசி (1979)
- கடமை நெஞ்சம் (1979) திஞா
- ஒளி பிறந்தது (1979)
- நீயா (1979)
- பொற்காலம் (1980)
- மரியா மை டார்லிங் (1980)
- அவள் ஒரு காவியம் (1981)
- மயில் (1981)
- தனி மரம் (1981)
- கிளிஞ்சல்கள் (1981)
- துணை (1982)
- வெளிச்சம் விதருன்னா பென்குட்டி (1982)
- டூ குலாப் (1983)
- பெட் பியார் அவுர் பாப் (1984)
- வேலி (1985)
- ஒரு மனிதன் ஒரு மனைவி (1986)
- வீரபாண்டியன்(1987) திஞா
- பாலைவனத்தில் பட்டாம்பூச்சி (1988)
- புதிய அத்தியாயம் (1990)
விருதுகள்
[தொகு]- 1978 - சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசு திரைப்பட விருது - ஒரு வீடு ஒரு உலகம்
- 1979 - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - பசி திரைப்படம்.[2]
- 1979 - சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது - தமிழ்- பசி.[4][5]
- 1980 - தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் பசி திரைப்படத்துக்கு சிறந்த திரைப்பட விருது
- 1982 - கலைமாமணி விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kolappan, B (22 April 2024). "Durai, director of national award winning film Pasi, dies". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 22 April 2024.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "National Film Awards 2010". Directorate of Film Festivals. Archived from the original on 14 April 2012. பார்க்கப்பட்ட நாள் 9 May 2014.
- ↑ Kannan, Dr. R. (2000). Women in Films: An Incisive Study Into the Issues and Trends. Publications Division, Madurai Kamaraj University. p.24.Jump up ^ Bowker (1983). Variety's Film Reviews: 1978-1980. Bowker. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8352-2795-7.
- ↑ https://www.youtube.com/watch?v=xbvqLIHMR2A
- ↑ "The Times of India Directory and Year Book Including Who's who". 1982.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2017-09-22 at the வந்தவழி இயந்திரம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் துரை