விசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விசு
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
பணிஇயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1981-
வாழ்க்கைத்
துணை
ராஜம்

விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். 1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது(Remake)[சான்று தேவை]. இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

திரைத்துறையில்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1981 தில்லு முல்லு தமிழ் வசன கர்த்தா
1981 குடும்பம் ஒரு கதம்பம் தமிழ் வசன கர்த்தா,நடிகர்
1982 கண்மணி பூங்கா தமிழ் இயக்குனர்
1982 மணல் கயிறு உத்திரமேரூர் நாரதர் நாயுடு தமிழ் நடிகர், கதாசிரியர், திரைக்கதை, இயக்குனர்
1983 டௌரி கல்யாணம் தமிழ் இயக்குனர்
1984 புயல் கடந்த பூமி தமிழ் இயக்குனர்
1984 ராஜதந்திரம் தமிழ் இயக்குனர்
1984 வாய்ச்சொல்லில் வீரனடி தமிழ் நடிகர், கதாசிரியர், திரைக்கதை, இயக்குனர்
1984 நாணயம் இல்லாத நாணயம் தமிழ் இயக்குனர்
1985 அவள் சுமங்கலிதான் வாட்ச்மேன் ஆறுமுகம் தமிழ் நடிகர், கதாசிரியர், திரைக்கதை, இயக்குனர்
1985 புதிய சகாப்தம் தமிழ் இயக்குனர்
1985 கெட்டிமேளம் தமிழ் இயக்குனர்
1986 சிதம்பர ரகசியம் பீமாராவ் தமிழ்
1986 ஊமை விழிகள் ரத்தினசபாபதி தமிழ்
1986 மிஸ்டர். பாரத் குமேரச கவுண்டர் தமிழ்
1986 மெல்லத் திறந்தது கதவு ராதாவின் அப்பா தமிழ்
1986 சம்சாரம் அது மின்சாரம் அம்மையப்ப முதலியார் தமிழ் நடிகர், கதாசிரியர், திரைக்கதை, இயக்குனர்
1987 திருமதி ஒரு வெகுமதி நாகர்கோயில் நாகமணி தமிழ் நடிகர், கதாசிரியர், திரைக்கதை, இயக்குனர்
1988 பெண்மணி அவள் கண்மணி ரேடியோ மாமா தமிழ் நடிகர், கதாசிரியர், திரைக்கதை, இயக்குனர்
1988 வீடு மனைவி மக்கள் சுப்பையா பிள்ளை தமிழ் நடிகர்
1988 மாப்பிள்ளை சார் தமிழ் இயக்குனர்
1992 வேடிக்கை என் வாடிக்கை தமிழ்
1992 மன்னன் தமிழ்
1992 உரிமை ஊஞ்சலாடுது தமிழ் இயக்குனர்
1993 உழைப்பாளி தமிழ்
1993 சின்ன மாப்ளே கல்யாண தரகர் தமிழ்
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா பட்டுக்கோட்டை பெரியப் தமிழ் இயக்குனர்
1994 வனஜா கிரிஜா ராமநாதன் தமிழ்
1997 நேசம் தமிழ்
1997 அரவிந்தன் தமிழ்
1997 அடிமைச் சங்கிலி தமிழ்
1997 அருணாச்சலம் ரங்காசாரி தமிழ்
1997 அன்புள்ள காதலுக்கு தமிழ்
2000 மன்னவரு சின்னவரு தமிழ்
2001 தங்கமணி ரங்கமணி எஸ். வி. சேகரின் முதலாளி தமிழ் நடிகர், கதாசிரியர், திரைக்கதை, இயக்குனர்
2004 மகா நடிகன் தமிழ்
2004 ஜி ராகவன் தமிழ்
2007 சீனா தானா 001 தமிழ் கௌரவ வேடம்
2008 எல்லாம் அவன் செயல் தமிழ்
2012 ஒருவர் மீது இருவர் சாய்ந்து தமிழ் தயாரிப்பில் உள்ளது
2013 அலேக்ஸ் பாண்டியன் முதலமைச்சர் தமிழ் நடிகர்
1990 வரவு நல்ல உறவு தமிழ் நடிகர், கதாசிரியர், திரைக்கதை, இயக்குனர்

சின்னத்திரை/தொலைக்காட்சி-யில்[தொகு]

சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்திவருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

திரைப்பட தரவு தளத்தில் விசு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசு&oldid=2716576" இருந்து மீள்விக்கப்பட்டது