மிஸ்டர் பாரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிஸ்டர் பாரத்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
கதைவிசு
திரைக்கதைவிசு
இசைஇளையராஜா
நடிப்புரசினிகாந்த்
சத்யராஜ்
அம்பிகா
சாரதா
ரகுவரன்
கவுண்டமணி
விசு
எஸ். வி. சேகர்
ஐ.எஸ்.ஆர்
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகம்
படத்தொகுப்புஆர். விட்டல்
சி. லான்சி
கலையகம்ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம்
விநியோகம்ஏவிஎம் படத்தயாரிப்பு நிறுவனம்
வெளியீடுசனவரி 10, 1986
நாடு இந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்2.00 கோடி

மிஸ்டர் பாரத் 1986இல் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ரசினிகாந்த், சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ். வி. சேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இது அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார் நடிப்பில் 1978ஆம் ஆண்டில் வெளியான திரிசூல் இந்தி திரைப்படத்தின் மீளுருவாக்கமாகும்.

கதைச் சுருக்கம்[தொகு]

ஒரு மகன், தனது தாயை ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழும் தனது தந்தையை பழிவாங்கும் கதையாகும்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படத்தில் ரசினிகாந்தின் தந்தையாக சத்யராஜ் நடித்திருந்தார். ஆனால் சத்யராஜ், ரஜினியை விட 4 வயது குறைவானவர்.[1][2]

பாடல்கள்[தொகு]

இப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.[3] இத்திரைப்படத்தில் இடம்பெற்ற, மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இணைந்து பாடிய சிறந்த வெற்றிப் பாடலான என்னம்மா கண்ணு பாடல், தனுஷ், சிரேயா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் 2006ஆம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் மறுஆக்கம் செய்திருந்தனர்.[4] மேலும், இப்பாடலின் முதல் வரியான என்னம்மா கண்ணு என்ற பெயரில், சத்யராஜ் நடிப்பில் 2000ஆம் ஆண்டில் வெளியானது.[5]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 என் தாயின் மீது ஆணை மலேசியா வாசுதேவன் வைரமுத்து 04:31
2 என்னம்மா கண்ணு மலேசியா வாசுதேவன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 04:36
3 எந்தன் உயிரின் எஸ். ஜானகி புலமைப்பித்தன் 04:24
4 காத்திருக்கேன் எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வாலி 06:08
5 பச்சை மிளகாய் மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி கங்கை அமரன் 04:41

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.behindwoods.com/features/Interviews/interview-5/actor/sathyaraj.html
  2. http://m.thehindu.com/arts/cinema/article2839950.ece/[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Mr. Bharath Songs". raaga. 2013-12-24 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2006-11-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-25 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-01-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-25 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்டர்_பாரத்&oldid=3680696" இருந்து மீள்விக்கப்பட்டது