ஆடு புலி ஆட்டம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடு புலி ஆட்டம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சாந்தி நாராயணன்
(சொர்ணாம்பிகா புரொடக்சன்)
கதைமகேந்திரன்
திரைக்கதைஎஸ். பி. முத்துராமன்
வசனம்மகேந்திரன்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
ரசினிகாந்த்
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புஆர். விட்டால்
வெளியீடுசெப்டம்பர் 30, 1977
நீளம்3947 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆடு புலி ஆட்டம் (Aadu Puli Attam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, ரசினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் 'எத்துக்கு பை எத்து' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அல்லு ராமலிங்கம் மற்றும் கைகால சத்யநாராயணா நடிப்பில் சில காட்சிகள் இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்டு பின் தெலுங்கில் வெளியானது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படத்திற்கு கதை மற்றும் வசனம் இயக்குநர் மகேந்திரன் எழுதியுள்ளார்.[3] 'உறவே புதுமை நினைவே இளமை' என்ற பாடல் குன்றத்தூர், திருநீர்மலை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. சாந்தி நாராயணன் தயாரித்த இத்திரைப்படம் வெற்றியடைந்தது.[4]

பாடல்கள்[தொகு]

விஜய பாஸ்கர் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், மற்றும் பூவை செங்குட்டுவன் அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டுள்ளது.

எண். பாடல் பாடகர்கள் நீளம்
1 "உறவோ புதுமை" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:13
2 "வானுக்கு தந்தை எவனோ" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். அஞ்சலி 4:22
3 "மணமே சோலையா" வாணி ஜெயராம் 4:21
4 "பூங்குயில் பாடுது" வாணி ஜெயராம் 2:58

மேற்கோள்கள்[தொகு]

  1. "எஸ்.பி.முத்துரான், மகேந்திரன், கமல், ரஜினியின் 'ஆடுபுலி ஆட்டம்'; 'வானுக்கு தந்தை எவனோ', 'உறவோ புதுமை நினைவோ இனிமை' பாடல்கள்; அற்புதப் பாடல்களைத் தந்த இசையமைப்பாளர் விஜயபாஸ்கர்". இந்து தமிழ். 30 செப்டம்பர் 2020. 30 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "'என்னடி முனியம்மா' பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்". இந்து தமிழ். 5 மே 2021. 14 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மகேந்திர மகத்துவம்! - இயக்குநர் மகேந்திரன் நினைவு நாள்". இந்து தமிழ். 2 ஏப்ரல் 2020. 28 செப்டம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  4. முத்துராமன், எஸ். பி. (20 சனவரி 2016). "சினிமா எடுத்துப் பார் 42: ஆடு புலி ஆட்டம்". இந்து தமிழ். 2 டிசம்பர் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 மே 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]