உள்ளடக்கத்துக்குச் செல்

பூவை செங்குட்டுவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவை செங்குட்டுவன்
பிறப்புமுருகவேல் காந்தி
கீழப்பூங்குடி சிவகங்கை, தமிழ்நாடு,  இந்தியா
இறப்பு2025 செப்டெம்பர் 5
சென்னை, தமிழ்நாடு
தொழில்கவிஞர்
பாடலாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, இலக்கியவாதி
குறிப்பிடத்தக்க விருதுகள்கலைமாமணி விருது, 'கலைச்செல்வம்', 'கவிமன்னர்', 'கண்ணதாசன் விருது' 
துணைவர்காந்திமதி
பிள்ளைகள்பூவை தயா, இரவிச்சந்திரன், கலைச்செல்வி, விஜயலட்சுமி
பெற்றோர்இராமையா அம்பலம்-இலட்சுமி அம்மாள்

பூவை செங்குட்டுவன் (Poovai Senkuttuvan) (இறப்பு: 5 செப்டம்பர் 2025) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். இவர் பக்திப் பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர்.[1] 1967-ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள், 4000-இற்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 திரைப்படங்களுக்கு கதை, 3 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் ஆகியவற்றை எழுதியவர். மேலும் 15-இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், 30-இற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்துறையில் பங்காற்றியவராவார்.[2]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பூவை செங்குட்டுவன் சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி என்னும் ஊரில் இராமையா அம்பலம்-இலட்சுமி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

பக்திப் பாடல்கள்

[தொகு]

'தேரழந்தூர் சகோதரிகள்' என்ற அறிமுகத்தோடு ஆரம்பகாலத்தில் அழைக்கப்பட்டு பின்னாளில் சூலமங்கலம் சகோதரிகளாகப் புகழ் பெற்றவர்களுக்காக பல பக்திப் பாடல்களை இயற்றியவர் பூவை செங்குட்டுவன்.

விருதுகள்

[தொகு]

இயற்றிய பாடல்களில் சில

[தொகு]
ஆண்டு திரைப்படம் பாடல் பாடியோர் இசையமைப்பாளர்
1966 கௌரி கல்யாணம் திருப்புகழைப் பாட சூலமங்கலம் இராஜலட்சுமி, பி. சுசீலா ம. சு. விசுவநாதன்
வரணும் வரணும் மகராணி டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
தொட்டது போலே கனவு கண்டேன்
1967 கந்தன் கருணை திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் சூலமங்கலம் இராஜலட்சுமி, பி. சுசீலா குன்னக்குடி வைத்தியநாதன்)[6]
1967 கற்பூரம் வணங்கிடும் கைகளின் வடிவத்தை பி. சுசீலா, சூலமங்கலம் இராஜலட்சுமி டி. பி. இராமச்சந்திரா
1968 புதிய பூமி நான் உங்கள் வீட்டுப் பிள்ளை டி. எம். சௌந்தரராஜன் ம. சு. விசுவநாதன்
1968 காதல் வாகனம் வணக்கம் என் வணக்கம் பி. சுசீலா கே. வி. மகாதேவன்
1969 வா ராஜா வா இறைவன் படைத்த உலகை சீர்காழி கோவிந்தராஜன் குன்னக்குடி வைத்தியநாதன்
1970 திருமலை தென்குமரி குருவாயூரப்பா திருவருள் தருவாய் சீர்காழி கோவிந்தராஜன் குன்னக்குடி வைத்தியநாதன்
1972 அகத்தியர் தாயிற் சிறந்த கோயிலுமில்லை டி. கே. கலா குன்னக்குடி வைத்தியநாதன்
1972 கனிமுத்துப்பாப்பா அனைத்துப் பாடல்கள் பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜோதி கண்ணா டி. வி. ராஜூ
1973 ராஜராஜ சோழன் ஏடு தந்தானடி தில்லையிலே சீர்காழி கோவிந்தராஜன், எஸ். வரலட்சுமி குன்னக்குடி வைத்தியநாதன்
1973 பெத்த மனம் பித்து காலம் நமக்கு தோழன் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா வி. குமார்
---- பௌர்ணமி காலம் எனக்கொரு பாட்டெழுதும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஆர். கே. சேகர்
1974 தாகம் வானம் நமது தந்தை, எஸ். ஜானகி எம். பி. சீனிவாசன்
உருகிடும் வேளையிலும் நல்ல
1974 குமாஸ்தாவின் மகள் எழுதி எழுதி பழகி வந்தேன் சூலமங்கலம் இராஜலட்சுமி, எம். ஆர். விஜயா வி. குமார்
1982 வடிவங்கள் தண்ணீரில் மீன் அழுதால் கே. ஜே. யேசுதாஸ் சந்திரபோஸ்

பாடலாசிரியராக

[தொகு]
  1. மேல்நாட்டு மருமகள்
  2. பிஞ்சு மனம்
  3. குமார விஜயம்
  4. நீ ஒரு மகாராணி
  5. ஆடு புலி ஆட்டம்
  6. அன்னலட்சுமி
  7. மேளதாளங்கள்
  8. பருவகாலம்
  9. சமையல்காரன்
  10. புதிய பூமி
  11. வா ராஜா வா
  12. அகத்தியர்
  13. கனிமுத்து பாப்பா
  14. புதிய காற்று

இறப்பு

[தொகு]

பூவை செங்குட்டுவன் வயது மூப்பு காரணமாக 2025 செப்டம்பர் 5 அன்று சென்னையில் காலமானார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திரையிசைப் பாடல்களில் கவிதை நயம்".
  2. "Grill-mill-Poovai Senguttuvan".
  3. "கவிஞர்கள் திருநாள் விருது - 2010".
  4. "திருவள்ளுவர் விருது, சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு". Dinamani. Retrieved 2022-07-29.
  5. "2021 தமிழ்நாடு அரசின் விருதுகள்".
  6. "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்.. – கவிஞர் பூவை செங்குட்டுவன்". வல்லமை (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-01-02. Retrieved 2022-07-29.
  7. "பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்". தினமலர். https://cinema.dinamalar.com/tamil-news/132334/cinema/Kollywood/Lyricist-and-poet-Poovai-Senguttuvan-passes-away.htm. பார்த்த நாள்: 5 September 2025. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவை_செங்குட்டுவன்&oldid=4342906" இலிருந்து மீள்விக்கப்பட்டது