உள்ளடக்கத்துக்குச் செல்

விஜய பாஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய பாஸ்கர்
Vijaya Bhaskar
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1924
பெங்களூர், மைசூர் அரசு, இந்தியா
இறப்பு3 மார்ச்சு 2002 (அகவை 77–78)
பெங்களூர், கருநாடகம்
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசைக்கலைஞர்
இசைத்துறையில்1953–1986

விஜயபாஸ்கர் (Vijaya Bhaskar, கன்னடம்: ವಿಜಯಭಾಸ್ಕರ್; 1924–2002)[1] தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு, கொங்கணி உட்பட்ட பன்மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

விஜயபாஸ்கர் வயலின், வீணை, பியானோ ஆகிய இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 50களின் ஆரம்பத்தில் மும்பாய் சென்று மதன்மோகன், நவுசாத்ஆகியோருக்கு இசை குறியீடுகள் எழுதிப் பணியாற்றினார். அவர்களுடைய பல பாடல்களுக்கு இவர் பியானோ இசை வாசித்துள்ளார். பி ஆர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இவரைக் கன்னடத் திரைப்படத்தில் இசையமைக்க வாய்ப்பு எடுத்துக் கொடுத்தார். 1953 இல் "ஸ்ரீ ராம பூஜா" திரைப்படத்திற்கு இசையமைத்தார். இந்தித் திரைப்படங்களை பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன.

இயக்குநர் புட்டண்ணா கனகலுடன் இணைந்து நிறைய படங்களுக்கு இசையமைத்தார். "நகரபாவு" (தமிழில் ராஜ நாகம் (திரைப்படம்)) பெரும் வெற்றி பெற்றது. நகரபாவு வெற்றிக்கு பிறகு சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி மூலம் தமிழுக்கு வந்தார். ஸ்ரீதர், எஸ். பி. முத்துராமன், கே. பாலச்சந்தர் படங்களுக்கு இசையமைத்து தமிழகத்திலும் பிரபலமானார். ஏழு முறை சிறந்த கன்னட இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார்.

இசையமைத்த தமிழ்ப் படங்கள்

[தொகு]

இசையமைத்த சில புகழ்பெற்ற பாடல்கள்

[தொகு]
  • மணமகளே உன் மணவறைக்கோலம் (காலங்களில் அவள் வசந்தம், வாணி ஜெயராம்)
  • பாடும் வண்டே பார்த்ததுண்டா (காலங்களில் அவள் வசந்தம், வாணி ஜெயராம்)
  • அன்பு மேகமே (எங்கம்மா சபதம், எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்)
  • சம்சாரம் என்பது வீணை (மயக்குகிறாள் ஒரு மாது - எஸ்பிபி - கண்ணதாசன்)
  • ஒரு புறம் வேடன் (மயக்குகிறாள் ஒரு மாது - எஸ்பிபி & வாணி ஜெயராம் - கண்ணதாசன்)
  • வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் (மயக்குகிறாள் ஒரு மாது, கே. ஜே. ஜேசுதாஸ் - கண்ணதாசன்)

விருதுகள்

[தொகு]
  • இராஜ்குமார் விருது (2001)
  • சுர்சிங்கர் பிராசுகசுதி[2]

சிறந்த இசையமைப்பாளருக்கான கருநாடக திரைப்பட விருது

[தொகு]
  • 1967–68: பெல்லி மோடா
  • 1971–72: யாவா ஜன்மாத மைதிரி
  • 1972–73: சங்கல்பா
  • 1983–84: தரணி மந்தலா மத்யடோலாகே
  • 1989–90: முரளிகானா அம்ருதபன்னா
  • 1991–92: பத்திதா பாவனி

இறப்பு

[தொகு]

விஜயபாசுகர் 3 மார்ச் 2002 காலை இதய செயலிழப்பு காரணமாக பெங்களூர் ஜெ. பி. நகரிலுள்ள தனது 77ஆவது வயதில் இறந்தா. இவர் மனைவி, மகன் மற்றும் 5 பேரக் குழந்தையுடன் வாழ்ந்துவந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vijaya Bhaskar profile". kannadamoviesinfo.wordpress.com. Retrieved 17 திசம்பர் 2015.
  2. 2.0 2.1 "Kannada music director Vijayabhaskar dead". The Times of India. 3 March 2002. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Kannada-music-director-Vijayabhaskar-dead/articleshow/2698240.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_பாஸ்கர்&oldid=4460383" இலிருந்து மீள்விக்கப்பட்டது