முரட்டுக்காளை
தோற்றம்
(முரட்டுக்காளை (1980 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முரட்டுக்காளை | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். பாலசுப்ரமணியன் எம். குமரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரஜினிகாந்த் ரதி அக்னிகோத்ரி ஜெய்சங்கர் சுருளிராஜன் தேங்காய் சீனிவாசன் சுமலதா |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | பி. விட்டல் |
வெளியீடு | திசம்பர் 20, 1980 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முரட்டுக்காளை இயக்குநர் எஸ். பி. முத்துராமன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ரஜினிகாந்த், ரதி அக்னிகோத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 20-திசம்பர்-1980.
நடிகர்கள்
[தொகு]- இரசினிகாந்து - காளையன்[1]
- ரதி அக்னிகோத்ரி - கண்ணம்மா[2]
- சுமலதா - சௌந்தர்யம்[2]
- ஜெய்சங்கர் - சுந்தரவேலு[1]
- சுருளி ராஜன் - சாமிப்பிள்ளை[1]
- ஒய். ஜி. மகேந்திரன் - காளையனின் முதல் தம்பி[3]
- ஜி. சீனிவாசன் - கண்ணம்மாவின் தந்தை[4]
- சாந்தாராம் - சங்கிலி[4]
- இராஜப்பா - காளையனின் இரண்டாவது தம்பி[3]
- மாஸ்டர் இராமு - காளையனின் மூன்றாவது தம்பி[3]
- எஸ். ஏ. அசோகன் (விருந்தினர் தோற்றம்)[2]
- தேங்காய் சீனிவாசன் (விருந்தினர் தோற்றம்)[2]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார். "எந்த பூவிலும் வாசம் உண்டு" என்ற பாடல், ஸ்பானிஷ் இசையமைப்பாளர் அண்டோனியோ ரூயிஸ்-பிப்போ இசையமைத்த "கேன்சியன் ஒய் டான்சா" என்ற பாடலைத் தழுவி இருந்தது.[5]
பாடல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "எந்தப் பூவிலும்" | எஸ். ஜானகி | ||||||||
2. | "புது வண்ணங்கள்" | எஸ். ஜானகி | ||||||||
3. | "பொதுவாக என் மனசு தங்கம்" | மலேசியா வாசுதேவன் | ||||||||
4. | "மாமே மச்சான்" | எஸ். பி. சைலஜா | ||||||||
5. | "கோடான கோடி கொண்ட செல்வனை" | மலேசியா வாசுதேவன், பி. சுசிலா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Ramachandran 2014, ப. 117.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Rajadhyaksha & Willemen 1998, ப. 447.
- ↑ 3.0 3.1 3.2 <"சினிமா எடுத்துப் பார் 48: ரஜினி விக் வைத்து நடித்த ஒரே படம்!". Hindu Tamil Thisai. 2016-03-02. Retrieved 2025-04-28.
- ↑ 4.0 4.1 "சினிமா எடுத்துப் பார் 52: சண்டையில் தெரிந்த அன்பு!". Hindu Tamil Thisai. 2016-03-30. Retrieved 2025-04-28.
- ↑ Shekar, Anjana (7 March 2021). "Tamil film music and plagiarism: What fans feel about recurring issue". The News Minute (in ஆங்கிலம்). Archived from the original on 3 October 2023. Retrieved 3 October 2023.