உள்ளடக்கத்துக்குச் செல்

தியாகு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாகு
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியன்
திரைக்கதைசிவசங்கரி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரகுவரன்
கலையகம்ஏ. வி. எம் புரடக்ஷன்ஸ்
வெளியீடு5 அக்டோபர் 1990 (1990-10-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தியாகு (Thiyagu) 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிவசங்கரி எழுதியதை எஸ்.பி. முத்துராமன் இயக்கினார். இத்திரைப்படத்தை ஏவி. எம். புரொடக்சன்ஸ் தயாரித்தது. இத்திரைப்படம் சிவசங்கரியின் நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் ரகுவரன் நடித்துள்ளார், தொலைக்காட்சி தொடரிலிருந்து தனது பாத்திரத்தை மாற்றம் செய்து நடித்தார். இத்திரைப்படம் 1990 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டு வணிக ரீதியாக தோல்வியடைந்தது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

சிவசங்கரி எழுதிய ஒரு மனிதனின் கதை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. 1978–79 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் இதழில் தொடராக வந்தது. 1985 ஆம் ஆண்டில் 'தியாகு' என்ற இதே பெயரில் வெளிவந்த தொலைக்காட்சித் தொடரரைத் தழுவி ரகுவரன் நடித்தார்.[3][4] ஏ.வி.எம் புரொடக்சன்ஸ் பின்னர் இந்தத் தொடரை தியாகு என்ற தலைப்பில் ஒரு திரைப்படமாக மாற்ற முடிவு செய்தது. ரகுவரன் அதே பாத்திரத்தில் நடிக்க, எஸ். பி. முத்துராமன் இயக்குநராக நியமிக்கப்பட்டார். முத்துராமன் படத்திற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை.[5]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.

வெளியீடு மற்றும் வரவேற்பு

[தொகு]

இத்திரைப்படம் 1990 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்டது.[6] அப்போதைய தமிழக முதல்வர் எம். கருணாநிதிக்கு இந்த படம் திரையிடப்பட்டது . அவரது ஒரு படமாக்கப்பட்ட பேச்சு இறுதிக் காட்சியில் இணைக்கப்பட்டது.[1][2] இவையனைத்தும் இருந்தபோதிலும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[7][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Thiyagu — Kalaingar Speech about the film". YouTube. AP International. 14 September 2012. பார்க்கப்பட்ட நாள் 16 April 2020.
  2. 2.0 2.1 Saravanan 2013, ப. 324.
  3. Srinivasan, Pavithra (21 March 2008). "Farewell, Raghuvaran!". Rediff.com. Archived from the original on 7 April 2020. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
  4. Warrier, Shobha (21 May 2001). "'Unfortunately, we tend to condemn alcoholics'". Rediff.com. Archived from the original on 7 April 2020. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
  5. 5.0 5.1 Saravanan 2013, ப. 323.
  6. Saravanan 2013, ப. 322.
  7. "பிளாஷ்பேக் : சினிமாவான சின்னத்திரை தொடர்" (in ta). தினமலர். 6 May 2017 இம் மூலத்தில் இருந்து 7 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200407154249/https://cinema.dinamalar.com/tamil-news/58987/cinema/Kollywood/Flashback-:-Serial-becomes-Cinema.htm. 

வெளி இணைப்புகள்

[தொகு]

film details

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகு_(திரைப்படம்)&oldid=3743981" இலிருந்து மீள்விக்கப்பட்டது