தையல்காரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தையல்காரன்
இயக்குனர்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்பாளர்எஸ். தானு
கதைஜெ. மகேந்திரன்
இசையமைப்புஎஸ். பி. பாலசுப்பிரமணியம்
நடிப்புபார்த்திபன்,ஐஸ்வர்யா,சர்மிளா
ஒளிப்பதிவுரீ. எஸ். விநாயகம்
படத்தொகுப்புஆர். விட்டால்
கலையகம்கலைப்புலி இன்ரநஷனல்
வெளியீடுசனவரி 14, 1991 (1991-01-14)
கால நீளம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தையல்காரன் (thaiyalkaran) 1991 இல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் பார்த்திபன் (நடிகர்), ஐஸ்வர்யா, சாய்குமார் புடிபேடி, ஸ்ரீஜா, சார்மலி ஆகியோரும் அவர்களுடன் இணைந்து முரளி குமார், சொக்கலிங்க பாகவதர், வாசு விக்ரம், டப்பிங் ஞானகி, கணேஷ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். திரைப்படத்தை எஸ். தானு தயாரித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு  எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்துள்ளார். மேலும் சனவரி 14, 1991 ல் வெளியிடப்பட்டுள்ளது.[1][2]

கதைச்சுருக்கம்  [தொகு]

பாண்டியன் (பார்த்தீபன்) ஏழை தையல்காரன். அவன் பயமற்ற தைரியமானவன். அவனுடைய தைரியத்தை அவன் வாழும் கிராமமக்கள் பாராட்டினர். அக்கிராமத்தில் உள்ள காவேரி (ஐஸ்வர்யா) அவனை காதலித்தாள். காவேரி ஜெயபாலின் (சசிகுமார் புடிபேடி) சகோதரி. ஜெயபால் வசதியான ரௌடி. அவன் ஒரு மீன் சந்தையையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.

பிறகு, பாண்டியன் பலருக்கு உதவினான். ஒரு பெண்ணை அவளின் குடிகார கணவனிடம் இருந்தும், பிறகு பாண்டியன் முன்னர் பிரபல பாடகராக இருந்து தற்போது வறுமையில் வாடும் சொக்கலிங்க பாகவதர் (சொக்கலிங்க பாகவதர்), விபச்சாரத்திற்காக கடத்தப்பட்ட ஓர் இளம்பெண்ணான லக்ஷ்மி (சர்மிளா), வேலையற்ற போதைப்பொருளிற்கு அடிமையான வாலிபன் ஆகியோர் பாண்டியனால் காப்பாற்றபட்டவர்களாவர். இவர்களை தன் வீட்டிலே தங்கவைத்ததுடன் அவர்களை காப்பாற்ற இரவு பகலாக உழைத்தான். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

  • ஆர். பார்த்தீபன்- பாண்டியன்
  • ஐஸ்வர்யா- காவேரி
  • சசிகுமார்  புடிபேட்டி - ஜெயபால்
  • ஸ்ரீஜி - ஓமனா
  • சர்மிளா - லக்ஷ்மி
  • முரளிகுமார் - இன்ஸ்பெக்டர் சுகுமார்
  • சொக்கலிங்க பாகவதர்- சொக்கலிங்க பாகவதர்
  • வாசு விக்ரம் - கோபி
  • டப்பிங் ஜானகி
  • கணேஷ்கர் - கஜா
  • தியாகு
  • எம். ஆர். கிருஷ்ண மூர்த்தி- நாயர்
  • மனோகர்
  • சூர்யகாந்
  • சாவித்ரி
  • அனுஷ்யா
  • ஹேமா
  • அஜய் ரத்தினம் (சிறப்பு தோற்றம்)

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்துள்ளார். 1991 ல் இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில்  உள்ள 5 பாடல்களையும் வாலி எழுதியுள்ளார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thaiyalkaran (1991) Tamil Movie". spicyonion.com. பார்த்த நாள் 2016-10-06.
  2. N. Krishnaswamy (1991-02-01). Thaiyalkaaran. p. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19910201&printsec=frontpage. பார்த்த நாள்: 2016-10-06. 
  3. "Thaiyalkaran Songs — Raaga". play.raaga.com. பார்த்த நாள் 2016-10-06.
  4. "Thaiyalkaaran (Original Motion Picture Soundtrack)". itunes.apple.com. பார்த்த நாள் 2016-10-06.