உள்ளடக்கத்துக்குச் செல்

ப்ரியா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப்ரியா
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎஸ். பி. தமிழரசி
(எஸ். பி. டி. பிலிம்ஸ்)
கதைசுஜாதா
இசைஇளையராஜா
நடிப்புஸ்ரீதேவி
ரஜினிகாந்த்
ஸ்ரீகாந்த்
வெளியீடுதிசம்பர் 19, 1978
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ப்ரியா (Priya) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய ப்ரியா என்ற புதினத்தின் கதையாகும். நாவலில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெறவில்லை.[1]

தமிழ் திரைப்படங்களில், முதன்முறையாக இரட்டை ஒலி (Stereo Sound) பயன்படுத்தப்பட்ட திரைப்படமாக குறிப்பிடப்படுவது “ப்ரியா” ஆகும்.[2] கே. ஜே. யேசுதாஸ் தனது தரங்கிணி ஸ்டூடியோவிற்காக, இரட்டை / ஸ்டீரியோ முறையில் பாடல் பதிவு செய்வதற்கான கருவிகளை புதிதாக வாங்கியிருந்தார்[3]. இந்த படத்தின் ஒலி அமைப்பு, அந்த காலத்தில் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. திரைப்படங்களில் இரட்டை (ஸ்டீரியோ) ஒலி வந்தபின், பார்வையாளர்களின் அனுபவம் மிகவும் மாறியது. காட்சியில் நடக்கும் செயல்கள், நடப்பு, மழை, கூட்டத்தின் சத்தம் போன்றவை உண்மைக்கு மிக அருகில் கேட்கத் தொடங்கின. இதனால், திரைப்படம் பார்ப்பது இன்னும் உயிர்ப்பாக ஆனது.

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் பஞ்சு அருணாசலம் இயற்றினார்.[4]

பாடல்கள் [4]
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "ஏ பாடல் ஒன்று"  கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி 4:32
2. "அக்கரைச் சீமை அழகினிலே"  கே. ஜே. யேசுதாஸ் 4:21
3. "டார்லிங் டார்லிங்"  பி. சுசீலா 4:39
4. "என் உயிர் நீதானே"  கே. ஜே. யேசுதாஸ், ஜென்சி அந்தோனி 4:51
5. "சிறீராமனின் சிறீதேவி"  கே. ஜே. யேசுதாஸ் 4:02

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நாவல்கள், திரைப்படங்களாக உருமாறும்போது...". தினமணி. 6 ஏப்ரல் 2015. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2015/apr/06/நாவல்கள்-திரைப்படங்களாக-உர-1094199.html. 
  2. "இரட்டை ஒலி from thehindu.com". Retrieved 2019-08-01.
  3. "இரட்டை ஒலி from malaimalar.com". Retrieved 2019-08-01.
  4. 4.0 4.1 "Tamil movie songs". 5starmusiq.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப்ரியா_(திரைப்படம்)&oldid=4462691" இலிருந்து மீள்விக்கப்பட்டது