ஸ்ரீகாந்த் (நடிகர்)
ஸ்ரீகாந்த் | |
---|---|
பிறப்பு | ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி பெப்ரவரி 28, 1979 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002 – இன்றுவரை |
வாழ்க்கைத் துணை | வந்தனா ஸ்ரீகாந்த் |
ஸ்ரீகாந்த் (ஆங்கில மொழி: Srikanth, பிறப்பு: பெப்ரவரி 28, 1979) தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் ஆவார். இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் பார்த்திபன் கனவு மற்றும் தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெரும் வெற்றிப்படங்களாக விளங்கின.[1] தெலுங்குத் திரைப்படங்களில் இவர் ஸ்ரீராம் என்று அறியப்படுகிறார்.
திரைவாழ்வு
[தொகு]ஸ்ரீகாந்த்தின் திரை நுழைவு ரோஜாக்கூட்டம் என்ற சசியின் காதல் படத்தில் பூமிகா சாவ்லாவுடன் அமைந்தது. முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்து பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.[2] இவரது அடுத்த வெற்றிப்படமாக சினேகாவுடன் நடித்த ஏப்ரல் மாதத்தில் அமைந்தது. தொடர்ந்து கரு. பழனியப்பன் இயக்கத்தில் உருவான பார்த்திபன் கனவு இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட சிறப்பு விருது கிடைத்தது.[3] பின்தொடர்ந்த படங்கள் தோல்வியைத் தழுவ சிலகாலம் வாய்ப்புகள் இன்றி இருந்தார். 2007ஆம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் தெலுங்கில் நடித்த ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெற்ற வெற்றியைத் தொடர்ந்து புகழ்பெற்ற இயக்குநர் சங்கரின் நண்பன் உட்பட பல புதிய படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[4]
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2002 | ரோஜாக்கூட்டம் | இளங்கோ | தமிழ் | சிறந்த புது நடிகருக்கான விருது |
2002 | ஏப்ரல் மாதத்தில் | கதிர் | தமிழ் | |
2003 | மனசெல்லாம் | பாலா | தமிழ் | |
2003 | பார்த்திபன் கனவு | பார்த்திபன் | தமிழ் | தமிழ்நாடு திரைப்பட விருது |
2003 | ஜூட் | ஈஸ்வரன் | தமிழ் | |
2003 | Okariki Okaru | காமேஸ்வர ராவ் | தெலுங்கு | தமிழில் உன்னை பார்த்த நாள் முதல் |
2004 | போஸ் | போஸ் | தமிழ் | |
2004 | வர்ணஜாலம் | சக்திவேல | தமிழ் | |
2005 | கனா கண்டேன் | பாஸ்கர் | தமிழ் | |
2005 | ஒரு நாள் ஒரு கனவு | சீனு | தமிழ் | |
2005 | பம்பரக்கண்ணாலே | முருகா | தமிழ் | |
2006 | மெர்க்குரி பூக்கள் | கார்த்திக் | தமிழ் | |
2006 | உயிர் | சுந்தர் | தமிழ் | |
2006 | கிழக்கு கடற்கரை சாலை | சந்தோஸ் | தமிழ் | |
2007 | Adavari Matalaku Ardhalu Verule | வாசு | தெலுங்கு | |
2008 | வல்லமை தாராயோ | சேகர் | தமிழ் | கௌரவத் தோற்றம் |
2008 | பூ | தங்கராசு | தமிழ் | |
2009 | இந்திரா விழா | சந்தோஸ் சீனிவாசன் | தமிழ் | |
2010 | ரசிக்கும் சீமானே | நந்து | தமிழ் | |
2010 | போலிஸ் போலிஸ் | தெலுங்கு | தமிழில் குற்றப்பிரிவு | |
2010 | துரோகி | சாமி சீனிவாசன் | தமிழ் | |
2010 | மந்திரப் புன்னகை | தமிழ் | கௌரவத் தோற்றம் | |
2011 | உப்புக்கண்டம் பிரதர்ஸ் பேக் இன் ஆக்சன் | பாபி | மலையாளம் | தமிழில் சத்ரிய வம்சம் |
2011 | தாதா | ராஜீவ் | தெலுங்கு | |
2011 | சதுரங்கம் | திருப்பதிசாமி | தமிழ் | |
2012 | நண்பன் | வெங்கட் ராமகிருஷ்ணன் | தமிழ் | |
2012 | நி்ப்பு | சிறீராம் | தெலுங்கு | தமிழில் ரவடி ராஜா |
2012 | ஹீரோ | பிரேமானந்த் | மலையாளம் | |
2012 | பாகன் (திரைப்படம்) | சுப்பரமணியம் | தமிழ் | |
2013 | புட்டி | மலையாளம் | ||
2014 | எதிரி எண் 3 | தமிழ் | தயாரிப்பு நிலையில் | |
2014 | ஓம் சாந்தி ஓம் | தமிழ் | படபிடிப்பில் | |
2014 | நம்பியார் | ராமச்சந்திரன் | தமிழ் | படபிடிப்பில் |
2015 | சௌகார்பேட்டை | தமிழ் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-10. பார்க்கப்பட்ட நாள் 2011-09-26.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-06-27. பார்க்கப்பட்ட நாள் 2011-09-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.thehindu.com/arts/cinema/article2115546.ece
- ↑ http://www.thehindu.com/arts/cinema/article108928.ece