கரு. பழனியப்பன்
கரு பழனியப்பன் | |
---|---|
![]() | |
பிறப்பு | மார்ச்சு 6, 1972[1] கானாடுகாத்தான், காரைக்குடி, தமிழ்நாடு |
பணி | நடிகர், இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | பியா |
உறவினர்கள் | பழ. கருப்பையா (பெரியப்பா) கரு. ஆறுமுகத்தமிழன் (பெரியப்பா மகன்) |
வலைத்தளம் | |
http://www.karupalaniappan.com/ |
கரு பழனியப்பன் (Karu Palaniappan மார்ச் 6,1972) என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார்.[2][3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]பழனியப்பன் காரைக்குடியில் பிறந்து வளர்ந்தார். இவருடைய பெற்றோர் பால சின்ன கருப்பையா, நாகம்மையாவர் ஆவர். இவர்களின் மூன்று குழந்தைகளில் இவரே மூத்தவர். அரசியல்வாதியும், திரைப்படத் தயாரிப்பாளருமான பழ. கருப்பையா இவரது பெரியப்பா ஆவார். இணையத்தில், இவருடைய பெரியப்பாவை, இவருடைய தந்தை என தவறாகப் புரிந்து கொள்வாரும் உண்டு. குழந்தைப் பருவத்திலிருந்தே பழனியப்பனைப் புத்தகங்கள் ஈர்த்தன. வணிகரான இவருடைய தந்தை சின்ன கருப்பையா ஒரு தீவிர வாசகர் ஆவார். கண்ணதாசன், ஜெயகாந்தன், அசோகமித்திரன் போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிப்பதை ஆர்வமாகக் கொண்டிருந்தார். தந்தையிடமிருந்து வாசிக்கும் பழக்கத்தை பழனியப்பன் பெற்றார். புத்தகங்களை வாசிப்பதில் இருந்த இவரது விருப்பம் பின்னர் பிற மொழிகளைக் கற்றல், நடிப்பு, உரையாடல் ஆகியவற்றில் திறமைகளை வளர்த்துக்கொண்டார்.
மதுரை செவந்த் டே அட்வெண்டிஸ்ட் பள்ளியில் கல்வி பயின்ற பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்து, மதுரை தியாகராஜ கல்லூரியில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தமிழ் இலக்கியம் மீதான தீவிரமான நாட்டத்தினால் விகடன் குழும இதழ்களில் மாணவர் பயிற்சியில் சேர்ந்தார்.
1994 ஆம் ஆண்டிலிருந்து திரைப்படத் துறையில் பங்காற்றி வருகிறார். பார்த்திபனிடம் புள்ளகுட்டிக்காரன், ஹவுஸ்புல் ஆகிய படங்களில் உதவியாளராகப் பணியாற்றினார். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களில் இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]பியா என்பவரைக் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இனியா (மகள்), தயா (மகன்) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.[4]
தொழில்
[தொகு]கரு பழனியப்பன் இயல்பாகக் கதை சொல்லக்கூடிய நேர்த்திக்காக அறியப்படுகிறார். இவரது முதல் தமிழ்த் திரைப்படமான பார்த்திபன் கனவு (2003) படத்தில், ஸ்ரீகாந்த் - சினேகா ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது.[5] 2005-இல் “அசோகமித்திரன்” என்ற பெயரில் ஆரம்பித்த திரைப்படம் நின்றுபோனது.[6] பின்னர் அவர் அதே திரைப்படத்தை 2012-ஆம் ஆண்டில் ஒரு புதிய குழுவுடன் அருள்நிதியைக் (முன்னணி கதாபாத்திரம்) கொண்டு தொடங்கினார். இருப்பினும் இரண்டு மாதகால படப்பிடிப்பிற்குப் பிறகு, படம் மீண்டும் இரத்து செய்யப்பட்டது. இயக்குநர் மற்றும் நடிகராக 2013 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்தப் படத் திட்டத்தைப் புதுப்பிக்க முயன்றார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.[7][8] இதேபோல் மற்றொரு திட்டம், அமீர், ராஜ்கிரண் ஆகியோர் நடிப்பில் பாண்டிய வம்சம், தயாரிப்பு தொடங்கிய பின்னர் நின்றுபோனது.[9]
விஷால் நடித்த இவரது இரண்டாவது படமான சிவப்பதிகாரம் வணிக ரீதியிலும் விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. பிரிவோம் சந்திப்போம் குடும்பப் பார்வையாளர்களின் முக்கியக் கவனத்தைப் பெற்றது. இவரது அடுத்த படமான மந்திரப் புன்னகையில் கதாநாயகனாக அறிமுகமானார், ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்த சதுரங்கம் திரைப்படம் 2006-இல் முடிவடைந்தாலும் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த நிலையில் இறுதியில் 2011 ஆம் ஆண்டு வெளியானது. மாதவனும், ராஜ் கிரணும் கரு பழனியப்பனுடன் ஒரு புதிய திரைப்படத்தில் இணைவதற்காக ஒப்பந்தமாயினர்.[10]
திரைப்பட வரலாறு
[தொகு]இயக்குநராக
[தொகு]ஆண்டு | படம் | இயக்குநர் |
நடிகர் | குறிப்பு |
2003 | பார்த்திபன் கனவு | ஆம் | இல்லை | சிறந்த இயக்குநருக்கான மாநில விருது |
2006 | சிவப்பதிகாரம் | ஆம் | இல்லை | |
2008 | பிரிவோம் சந்திப்போம் | ஆம் | இல்லை | |
2010 | மந்திரப் புன்னகை (2010) | ஆம் | ஆம் | |
2011 | சதுரங்கம் | ஆம் | இல்லை | சிறந்த கதாசிரியருக்கான மாநில விருது |
2013 | ஜன்னல் ஓரம் | ஆம் | இல்லை | |
2016 | கள்ளன் | இல்லை | ஆம் | |
2019 | நட்பே துணை | இல்லை | ஆம் |
உதவி இயக்குநர்
[தொகு]- புள்ள குட்டிக்காரன் (1995)
- துள்ளாத மனமும் துள்ளும் (1999)
- பெண்ணின் மனதைத் தொட்டு (2000)
- பூவெல்லாம் உன் வாசம் (2001)
விருதுகள்
[தொகு]- சிறந்த இயக்குநர் விருது, தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (பார்த்திபன் கனவு – 2003)
- சிறந்த கதை ஆசிரியர் விருது, தமிழ்நாடு அரசு திரைப்பட விருது (சதுரங்கம் – 2011)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-23. Retrieved 2017-07-04.
- ↑ "Kollywood's Top 25 Directors – Directors – Vetrimaran Balaji Sakthivel Lingusamy Vasanth Karu Pazhaniappan Simbudevan". Behindwoods.com. Retrieved 2008-11-06.
- ↑ [1] [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Biography பரணிடப்பட்டது 2017-07-21 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Archived copy". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-11-09.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-11-09.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ http://behindwoods.com/tamil-movie-news-1/apr-12-03/arulnidhi-ashokamitran-21-04-12.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-09. Retrieved 2017-06-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-01. Retrieved 2017-06-29.
- ↑ "Madhavan to share screen space with Rajkiran". chennaivision. 3 June 2016 இம் மூலத்தில் இருந்து 3 சூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160603103304/http://chennaivision.com/madhavan-share-screen-space-rajkiran/. பார்த்த நாள்: 3 June 2016.