உள்ளடக்கத்துக்குச் செல்

வேலைக்காரன் (1987 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலைக்காரன்
திரைப்பட சுவரொட்டி படம்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புராஜம் பாலசந்தர்
புஷ்பா கந்தசாமி
கதைகே. பாலச்சந்தர்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
சரத் பாபு
அமலா
செந்தில்
நாசர்
வி. கே. ராமசாமி
கே. ஆர். விஜயா
பல்லவி
புலியூர் சரோஜா
டெல்லி கணேஷ்
ஒளிப்பதிவுடி. எசு. விநாயகம்
படத்தொகுப்புஆர். விட்டல்
சி. லான்சி
கலையகம்கவிதாலயா திரைப்பட தயாரிப்பகம்
விநியோகம்கவிதாலயா திரைப்பட தயாரிப்பகம்
வெளியீடு7 மார்ச் 1987
நாடு இந்தியா
மொழிதமிழ்

வேலைக்காரன் (Velaikkaran) என்பது 1987ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். ரஜினிகாந்த், சரத் பாபு, அமலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்தது. இது அமிதாப் பச்சன், சாஜி கபூர், சுமிதா பாட்டீல், பர்வீன் பாபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நமக் அலால் என்ற இந்தி திரைப்படத்தின் மறுஆக்கமாகும். மேலும் இத்திரைப்படம் ஒரு சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும்.

நடிகர்கள்

[தொகு]

துணுக்குகள்

[தொகு]
  • ரஜினிகாந்த் இந்த திரைப்படத்திற்காக தனது தலைமுடி பாணியை மாற்றி அமைத்துக் கொண்டார். 1996 வரை அவர் இதே சிகை அலங்காரத்தை பராமரித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]
  • இத்திரைப்படத்தில் இடம்பெற்ற, "ஐ கேன் டாக் இங்கிலீஷ், ஐ கேன் வாக் இங்கிலீஷ்..." என்ற பிரபலமான உரையாடலானது நமக் அலால் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் பேசிய உரையாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சிறப்பான வரவேற்பு பெற்ற இத்திரைப்படம், எஸ். பி. முத்துராமன், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான வெற்றித் திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் மு. மேத்தா இயற்றினார்.[2]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம்
(நிமிடம் : வினாடி)
1 எனக்குத் தா உன் உயிரை பி. ௭ஸ். சசிரேகா மு. மேத்தா 04:28
2 மாமனுக்கு மயிலாப்பூர்தான் மலேசியா வாசுதேவன் 04:36
3 பெத்து எடுத்தவதான் மலேசியா வாசுதேவன் 04:34
4 வா வா வா கண்ணா மனோ, சித்ரா 05:53
5 வேலை இல்லாதவன் மனோ 04:24
6 தோட்டத்திலே பாத்திகட்டி எஸ். பி. பாலசுப்ரமணியம், சாய்பாபா 04:34

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://pages.rediff.com/velaikaran/1595424
  2. "Velaikaran Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2013-12-27.