சிறீபிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிறீ பிரியா
பிறப்பு சிறீ பிரியா
1958 (அகவை 59–60)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
பணி நடிகர், அரசியல்வாதி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1973–1992
2007-தற்போது வரை
அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம்
வாழ்க்கைத்
துணை
ராஜ்குமார் சேதுபதி
(1988-தற்போது வரை)
பிள்ளைகள் சினேகா, நாகார்ஜூன்

சிறீபிரியா (ஸ்ரீபிரியா) தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போது கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பேச்சாளராகப் பொறுப்பு வகிக்கின்றார்.[1] இவர் 1970கள் மற்றும் 1980 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார்.

திருமண வாழ்க்கை[தொகு]

சிறீபிரியா தெலுங்கு, கன்னட, மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளபோதிலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இராஜ்குமார் என்னும் நடிகரை மணந்தார். இவர்களுக்கு சினேகா, நாகார்ஜூன் என்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இரு திரைப்படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார்.[2]

அறிமுகம்[தொகு]

தமிழில் சிறீ பிரியாவை 1974ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். அநேகமாகப் புதுமுகங்களே நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் நாயகியின் இளவயது விதவைத் தங்கையாக குணச்சித்திரப் பாத்திரத்தை ஏற்று நடித்து சிறீ பிரியா தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது முன்னேறி வரும் நடிகராக இருந்த கமல்ஹாசன் அவரிடம் ஒருதலைக் காதல் கொள்பவராக நடித்திருந்தார்.

சிறீ பிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடித்தார். ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து சிறீ பிரியா நடித்துள்ளார்.

இவரது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகத் திகழ்வது அவள் அப்படித்தான் என்னும் திரைப்படம். இதில் தாம் சந்தித்த தொடர் தோல்விகளின் காரணமாக, சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தினை மிக இயல்பாக சித்தரித்திருந்தார். வணிக அடிப்படையில் வெற்றி பெறாவிடினும், இப்படம் இன்றளவும் தமிழின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை]

முக்கியமான படங்கள்[தொகு]

இவற்றில் நீயா மற்றும் நட்சத்திரம் ஆகிய படங்களை இவர் தயாரித்து நடித்திருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீபிரியா&oldid=2494218" இருந்து மீள்விக்கப்பட்டது