ஐ. எஸ். இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐ. எஸ். ஆர் (ISR) என்று தமிழ்த் திரைப்பட உலகில் அறியப்பட்ட ஐ. எஸ். இராமச்சந்திரன் (நவம்பர் 7, 1936), ஒரு தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக நடிகர். கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஐ.எஸ்.ஆர். தியேட்டர்ஸ் (ISR Theaters) என்ற நாடக நிறுவனத்தை நிறுவி, சொந்தமாக பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். சென்னை தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். கர்நாடக இசை ஞானமுள்ள ஐ.எஸ்.ஆர், ஓரிரு திரைப்படங்களில் பாடியுமிருக்கிறார்; ஆடியோ ஆல்பம் வெளியிட்டுள்ளார். அரசியல் மற்றும் சமூகத்தை நையாண்டி செய்து அவரே எழுதி, அவரே பாடிய எல்.பி இசைத் தட்டு ஒன்றை எச்.எம்.வி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

பூர்வீகம்

இராஜபாளையத்தை அடுத்து உள்ள சொக்கநாதன் புத்தூர் என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். அவருடைய தந்தையின் பெயர் சர்க்கரை நாடார். அவருடைய இளைய சகோதரரின் பெயர் சோலை என்று அழைக்கப்பட்ட சோலையப்பன். அவரும் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குடும்பம்

மனைவியின் பெயர் பொன்னுத்தாய். அவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். மூத்த மகன் செல்வகுமார், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரிகின்றார். ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் (ISR Ventures) என்கிற திரைபடம் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ஐ.எஸ்.ஆர் மேல்படிப்புக்காக சென்னை வந்து பாலிடெக்னிக் படித்துவிட்டு, தென்னக இரயில்வேயில் பணியில் அமர்ந்தார். பணியில் இருந்து கொண்டே, ஓய்வு நேரங்களில் நாடகம், திரைப்படங்களில் நடித்து வந்தார். கும்பகோணத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே, நெஞ்சு வலி தாக்கி ஒரு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் நடித்த அந்த கடைசித் திரைப்படம் - மோகமுள்.

நடித்த திரைப்படங்கள்

வருடம் திரைப்படம்
1964 சர்வர் சுந்தரம்
1965 நீர்க்குமிழி
நீலவானம்
சாந்தி
1966 தாயே உனக்காக
மேஜர் சந்திரகாந்த்
பாமா விஜயம்
1968 எதிர் நீச்சல்
சோப்பு சீப்பு கண்ணாடி
1969 பூவா தலையா
ஐந்து லட்சம்
1970 தலைவன்
நவக்கிரகம்
நம்ம வீட்டுத் தெய்வம்
ராமன் எத்தனை ராமனடி
கண்ணன் வருவான்
1971 ராஜ நாகம்
புன்னகை
1972 பிஞ்சு மனம்
இதோ எந்தன் தெய்வம்
அவசரக் கல்யாணம்
நீதி
ஞான ஒளி
கண்ணம்மா
1973 சொந்தம்
தெய்வக் குழந்தைகள்
நத்தையில் முத்து
கௌரவம்
1974 ராஜநாகம்
ஹோட்டல் சொர்க்கம்
சமர்ப்பணம்
1975 மனிதனும் தெய்வமாகலாம்
அந்தரங்கம்
எடுப்பார் கைப்பிள்ளை
மொகுடா பெல்லாமா (தெலுங்கு)
பிஞ்சு மனம்
1976 முத்தான முத்தல்லவோ
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது
ஓ மஞ்சு
1977 அவர் எனக்கே சொந்தம்
நல்லதுக்குக் காலமில்லை
பாலாபிஷேகம்
அண்ணன் ஒரு கோயில்
1978 மாங்குடி மைனர்
கண்ணாமூச்சி
மேளதாளங்கள்
1979 வேலும் மயிலும் துணை
ராஜ ராஜேஸ்வரி
பசி
1980 பொன்னகரம்
பம்பாய் மெயில் 109
1981 பட்டம் பறக்கட்டும்
சவால்
கல் தூண்
சிவப்பு மல்லி
1982 பகடை பன்னிரண்டு
லாட்டரி டிக்கெட்
போக்கிரி ராஜா
புதுக் கவிதை
1983 தனிக்காட்டு ராஜா
இமைகள்
தலை மகன்
1984 நான் மகான் அல்ல
நல்லவனுக்கு நல்லவன்
1985 ஜப்பானில் கல்யாணராமன்
1986 மருமகள்
மிஸ்டர் பாரத்
பதில் சொல்வாள் பத்ரகாளி
ஒரு இனிய உதயம்
1988 சர்க்கரைப் பந்தல்
1990 ஆரத்தி எடுங்கடி
என் காதல் கண்மணி
1991 தந்துவிட்டேன் என்னை
1995 மோக முள்