நீதி (திரைப்படம்)
Appearance
நீதி | |
---|---|
![]() | |
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | கே. பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா சௌகார் ஜானகி |
வெளியீடு | திசம்பர் 7, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 4509 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீதி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன் - இராசா
- ஜெ. ஜெயலலிதா - இராதா
- சௌகார் ஜானகி - சீதா
- கே. பாலாஜி - சங்கர்
- எஸ். வி. சுப்பையா - வேலு
- காந்திமதி - மரகதம்
- இரா. சு. மனோகர் - நாகலிங்கம்
- எம். ஆர். ஆர். வாசு - நல்லகண்ணு
- ஜே. பி. சந்திரபாபு - ஏட்டு கண்ணையா
- மனோரமா - பொன்னம்மா
- சித்தூர் வி. நாகையா - உயர் நீதி மன்ற நீதியரசர்
- டி. கே. பாலச்சந்திரன் - இரகு
- முக்கமாலா கிருஷ்ணமூர்த்தி - மருதப்பன்
- அ. சகுந்தலா - இரெக்கார்டு இராணி
- உசிலைமணி - செட்டியார்
- மேஜர் சுந்தரராஜன் - சக்கரவர்த்தி (சிறப்புத் தோற்றம்)
இசை
[தொகு]படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார், பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[4] "நாளை முதல் குடிக்கமாட்டேன்" என்ற பாடலுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கும் பொழுது, விசுவநாதன் கண்ணதாசனுக்கு மெட்டைப் பாடிக்காட்டினார். அப்பொழுது கண்ணதாசன் விசுவநாதனிடம் மெட்டுக்கு ஏதாவது போலி பாடல் வரிகள் எழுதியுள்ளாரா என்று கேட்டுள்ளார். விசுவநாதன் அதற்கு "இன்று முதல் குடிக்கமாட்டேன்" என்று கூறியுள்ளார். அதனை கேட்ட கண்ணதாசன் எந்த குடிகாரனும் இன்று முதல் குடிக்க மாட்டேன் என்று கூறமாட்டார் என்று கூறி அதனால் வரிகளை "நாளை முதல் குடிக்கமாட்டேன்" என்று மாற்றியமைத்தார்.[5]
தலைப்பு | பாடகர்(கள்) |
---|---|
"எங்களது பூமி" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, கோவை சௌந்தரராசன், வீரமணி, ஜே. பி. சந்திரபாபு & மனோரமா |
"நாளை முதல் குடிக்க மாட்டேன்" | டி. எம். சௌந்தரராஜன் |
"மாப்பிள்ளையை பாத்துக்கடி மைனா" | டி. எம். சௌந்தரராஜன் |
"ஓதுது பார்" | பி. சுசீலா |
"கல்யாணத்துல மேளம்" | பி. சுசீலா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. p. 409. ISBN 0-19-563579-5.
- ↑ K R, Manigandan (10 November 2015). "Very Difficult to Smile When in Pain...But Aachi Did it". தி நியூ இந்தியன் எக்சுபிரசு: pp. 2 இம் மூலத்தில் இருந்து 8 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180708122234/http://www.newindianexpress.com/entertainment/tamil/2015/nov/10/Very-Difficult-to-Smile-When-in-Pain...But-Aachi-Did-it-841134.html.
- ↑ "Neethi". JioSaavn. 28 February 1972. Archived from the original on 8 October 2022. Retrieved 8 October 2022.
- ↑ "Neethi". JioSaavn. 28 February 1972. Archived from the original on 8 October 2022. Retrieved 8 October 2022.
- ↑ Mega Tv (2023-11-23). "கவிஞர் கண்ணதாசனுக்கும், எனக்கும் இப்படி தான் பாட்டு வரும்..! - Endrum MSV - #megatv". Retrieved 2025-04-20.