கலாட்டா கல்யாணம்
கலாட்டா கல்யாணம் | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | நாகசுப்பிரமணியம் ராம்குமார் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
வெளியீடு | ஏப்ரல் 12, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 4357 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கலாட்டா கல்யாணம் (Galatta Kalyanam) 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] சித்ராலயா கோபு எழுத்தில் சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்படமானது 1965 இந்தியா பாக்கித்தான் போரின்போது போர் நிதி திரட்டும் விதமாக சித்ராலயா கோபு எழுதி சிவாஜி கணேசன் இயக்கி, தமிழ்த் திரையுலக பிரபலங்கள் நடித்த கலாட்டா கல்யாணம் என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு அதேபெயரில் சிவாஜி கணேசனின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படமாகும்.[2]
கதைச்சுருக்கம்
[தொகு]நான்கு பெண்களைப் பெற்ற ஒரு தந்தை, தன் பெண்களுக்கு வரன் பார்க்கும் வேலையை அவரது இரண்டாவது பெண்ணின் காதலனிடம் ஒப்படைக்கிறார். முதல் பெண் ஆண்களை வெறுப்பவர். மூன்றாவது பெண் இசைப் பைத்தியமாகவும், நான்காவது பெண் சினிமா பைத்தியமாகவும் இருக்கின்றனர். வெவ்வேறு குணாம்சங்கள் கொண்ட இந்தப் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் வேளையில் இரண்டாவது பெண்ணின் காதலன் ஈடுபட்டு அதனால் ஏற்படும் சிரமங்களே படத்தின் கதை.
விமர்சனம்
[தொகு]திரைப்படத்தின் நகைச்சுவையான வசனங்களுக்காகவும் குழப்பமில்லாத இயக்கத்திற்காகவும் கல்கி பத்திரிகை பாராட்டி இருந்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கலகல 'கலாட்டா கல்யாணம்'; சிவாஜியும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல்படம்!" (in ta). Hindu Tamil Thisai. 29 April 2020 இம் மூலத்தில் இருந்து 2 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210602215514/https://www.hindutamil.in/news/blogs/551921-galatta-kalyanam-sivaji.html.
- ↑ டி.ஏ.நரசிம்மன் (5 சூலை 2018). "திருவல்லிக்கேணி எனும் திருத்தலம்`". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2018.
- ↑ "கலாட்டா கல்யாணம்". Kalki. 5 May 1968. p. 33. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.