சுமதி என் சுந்தரி
சுமதி என் சுந்தரி | |
---|---|
இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | என். நாகசுப்ரமணியம் ராம்குமார் பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
வெளியீடு | ஏப்ரல் 14, 1971 |
நீளம் | 3953 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சுமதி என் சுந்தரி (Sumathi En Sundari) என்பது 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைக் காதல் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்[1] சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1967 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமான நயிகா சங்பாத்தின் மறுஆக்கம் ஆகும்.[2][3] இப்படம் 14 ஏப்ரல் 1971 அன்று வெளியானது.[4]
கதை
[தொகு]புகழ்பெற்ற நடிகையாக சுமதி (ஜெயலலிதா) உள்ளார். அவர் சதாரணப் பெண்ணாக வாழ வாழ விரும்புகிறாள். ஆனால் அவரது பிரபல்யம் காரணமாக அவளது இயல்பான வாழ்வை வாழ இயலாமல் தவிக்கிறாள். படப்பிடிப்புக்காக உதகைக்கு தொடருந்தில் செல்லும் படக் குழுவுடன் சுமதி செல்கிறாள். தொடருந்து பயணத்தின்போது உதகை நிலையத்துக்கு முன்பே உள்ள வேரொரு தொடருந்து நிலையத்தில் சுமதி இறங்கிவிடுகிறாள். அவள் இறங்கிய ஊரானது திரையரங்கு போன்ற வசதிகள் அற்ற ஒரு மலைத் தோட்டப் பகுதி. அதனால் அங்கு உள்ளவர் யாருக்கும் அவள் ஒரு திரைப்பட நடிகை என்று தெரியவில்லை.
அவள் வரும்போது கன மழை பெய்கிறது. இருட்டியும்விடுகிறது. அதனால் அங்கே தனியாக உள்ள ஒரு வீட்டின் கதவைத் தட்டி தங்க இடம் கேட்கிறாள். அந்த வீட்டில் மலைத் தோட்டத்தில் மேலாளராக இருக்கும் மது (சிவாஜி கணேசன்) தங்கியுள்ளார். மழைக்கு இடம் கேட்டு வந்துள்ள சுமதிக்கு முதலில் இடம் தர மறுக்கும் மது பின்னர் இரக்கப்பட்டு இடம் தருகிறான். சுமதி தான் ஒரு நடிகை என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறாள். விடிவதற்குள் புறப்பட்டுவிடவேண்டும் என்று அவளிடம் மது அறிவுறுத்துகிறான். இரவில் பெய்த பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு தொடருந்து போக்குவரத்து ஒரு வாரத்துக்கு துண்டிக்கபடுகிறது. இதனால் அவளை அனுப்பிவைக்க முடியாமல் மது தவிக்கிறான். மதுவுடன் ஒரு பெண் தங்கியுள்ள செய்தி மதுவின் முதலாளி ரத்தினசாமிக்குத் (கே. ஏ. தங்கவேலு) தெரியவருகிறது. அவர் சுமதியை மதுவின் மனைவி என்று எண்ணி அவளை உபசரிக்கிறார். ஒரு கட்டத்தில் மதுவும் சுமதியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.
சுமதி வந்து சேராததால் உதகையில் படப்பிடிப்பு நின்றுபோகிறது. படத்தின் இயக்குநர் ஒரு கட்டத்தில் சுமதி இருக்கும் மலைத் தோட்ட முதலாளியின் வீட்டுக்கு வந்து சேர்கிறார். இதனால் பல குழப்பங்கள் உண்டாகின்றன. இறுதியில் என்ன ஆனது என்பதே கதையாகும்.
நடிப்பு
[தொகு]- மதுவாக சிவாஜி கணேசன் [5]
- சுமதி / சுந்தரியாக ஜெயலலிதா [1]
- இயக்குநர் சின்னசாமியாக வி. கோபாலகிருட்டிணன்
- ரத்தினசாமியாக கே. ஏ. தங்கவேலு
- மண்ணாங்கட்டி சுந்தரமாக நாகேஷ்
- சச்சு / சரசுவதியாக சச்சு
- பரமானந்தமாக தேங்காய் சீனிவாசன்
- தொடருந்தி நிலைய அதிகாரியாக செந்தாமரை
- மூர்த்தியாக வெண்ணிற ஆடை மூர்த்தி
- நடனமாதாக ஜெயகுமாரி
- ஐயராக குண்டு கருப்பையா
- பார்வதியாக எஸ். என். பார்வதி
- திரைப்படத் தயாரிப்பாளராக ஜெமினி மாலி
தயாரிப்பு
[தொகு]இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக கொடைக்கானலில் நடைபெற்றது. மேலும் கேரளாத்தின் தேக்கடியிலும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.[6][7] ஒரு முக்கியமான காட்சிக்கு இரண்டு குதிரைகள் வேண்டும் என்று இயக்குநர் ராஜேந்திரன் விரும்பினார், ஆனால் இரண்டு குதிரைகளில் ஒன்று நோஞ்சானாக ஒல்லியாக இருப்பதைக் கண்டார். அது பின்பக்கமாகவே நடக்கக் கண்டார். சிவாஜி கணேசனின் தேதி கிடைப்பது கடினம் என்பதால் குதிரைக்காக படப்பிடிப்பை ஒத்திவைக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். நாகேஷ் நோஞ்சான் குதிரையில் சவாரி செய்தும், சிவாஜி கணேசன் நல்ல ஆரோக்கியமான குதிரையில் சவாரி செய்ததும் நகைச்சுவைக் காட்சியாக மாறியது.[6]
பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு எஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.[8] இப்படத்தில் சிவாஜி பாடுவதாக இடம்பெற்ற "பொட்டு வைத்த முகமோ" என்ற பாடலே படத்திற்காக எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடலாகும். அப் பாடலை முதலில் வேறொருவர் பாடுவதாக இருந்தார், ஆனால் விஸ்வநாதன் பாலசுப்ரமணியத்தை பாடவைத்தார்.[9] அந்தப் பாடல் வலஜி இராகத்தை அடிப்படையாகக் கொண்டது.[10]
பாடல் | பாடகர் | வரிகள் | நீளம் |
---|---|---|---|
"ஒரு ஆலயம் மங்கை மனது" | பி. சுசீலா | கண்ணதாசன் | 05:24 |
"எல்லோருக்கும் காலம் வரும்" | ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈசுவரி | 02:58 | |
"ஓ ஓராயிரம்" | பி. சுசீலா | 04:00 | |
"பொட்டு வைத்த முகமோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. வசந்தா | 05:10 | |
"ஏ பிள்ளே சச்சாயி" | டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன், எல். ஆர். ஈசுவரி | 04:32 | |
"ஒரு தரம் ஒரே தரம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | வாலி | 03:30 |
"கல்யாண சந்தையிலே" | பி. சுசீலா | கண்ணதாசன் | 02:25 |
வெளியீடும் வரவேற்பும்
[தொகு]சுமதி என் சுந்தரி 14 ஏப்ரல் 1971 அன்று வெளியானது[11] பிலிம் வேர்ல்டு டி. ஜி. வைத்தியநாதன் படத்தைப் பாராட்டினார்[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Classic Pick: Sumathi En Sundari". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 December 2008 இம் மூலத்தில் இருந்து 4 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180704115045/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrintGifMSIE_PASTISSUES2&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2008/12/19&ChunkNum=0&ID=Ar02900.
- ↑ Vamanan (23 April 2018). "Tamil cinema's Bong connection". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 8 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180708101152/https://epaper.timesgroup.com/olive/apa/timesofindia/SharedView.Article.aspx?href=TOICH/2018/04/23&id=Ar00819&sk=6633D1AA&viewMode=text.
- ↑ Ashok Kumar, S. R. (20 November 2005). "'Chithralaya' Gopu, proprietor of Mannar & Co, Oho Productions". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 November 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071130052502/http://www.thehindu.com/2005/11/20/stories/2005112014160200.htm.
- ↑ "141-150". Nadigarthilagam.com. Archived from the original on 12 July 2018. பார்க்கப்பட்ட நாள் 25 August 2014.
- ↑ 5.0 5.1 Vaidyanathan, T. G. (1971). "Tamil Nadu's Opium". Film World. Vol. 7. p. 59. Archived from the original on 22 June 2022. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
- ↑ 6.0 6.1 "நகைச்சுவை காட்சியில் ஒரு சோகக்கதை - ஸி.வி.ராஜேந்திரன்". Kalki. 4 February 1979. pp. 26–27. Archived from the original on 8 November 2023. பார்க்கப்பட்ட நாள் 8 November 2023 – via இணைய ஆவணகம்.
- ↑ "சிவாஜி இல்லையென்றால்... – இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் பேட்டி" [If there is no Sivaji... – Director C. V. Rajendran interview]. தினமலர். 25 September 2011. Archived from the original on 18 October 2022. பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.
- ↑ "Sumathi En Sundari Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 2022-10-23. பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.
- ↑ "சிவாஜpக்கு எஸ்.பி. [sic] பாடிய முதல் பாட்டு". தினகரன் (இலங்கை). 27 May 2014. Archived from the original on 21 October 2022. பார்க்கப்பட்ட நாள் 21 October 2022.
- ↑ "ஏழிசை எம்எஸ்வி | பயோகிராபி". தினமலர். Archived from the original on 26 June 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2024.
- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்" (in ta). தினமணி. 6 December 2016 இம் மூலத்தில் இருந்து 24 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200624160449/https://www.dinamani.com/cm-jayalalitha/2016/dec/06/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2610816.html.
வெளி இணைப்புகள்
[தொகு]- 1971 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்