ராஜா (1972 திரைப்படம்)
| ராஜா | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சி. வி. ராஜேந்திரன் |
| தயாரிப்பு | கே. பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
| வெளியீடு | சனவரி 26, 1972 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4543 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜாஎன்பது 1972-ஆம் ஆண்டு சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இந்திய தமிழ் உளவு அதிரடி திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இது 1970 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ஜானி மேரா நாம் படத்தின் மறுஆக்கம் ஆகும். இந்த படம் 1972 சனவரி 26 அன்று வெளியாகி, வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[2]
நடிகர்கள்
[தொகு]- சிவாஜி கணேசன் - இராஜா/சேகர்
- ஜெ. ஜெயலலிதா - இராதா
- கே. பாலாஜி - சந்திரன்/பாபு
- மேஜர் சுந்தரராஜன் - பிரசாந்த்
- எஸ். வி. ரங்கராவ் - நாகலிங்கம் பூபதி
- இரா. சு. மனோகர் - விஸ்வம்
- வி. எஸ். ராகவன் - தர்மலிங்கம் பூபதி
- பண்டரிபாய் - பார்வதி
- காந்திமதி - இராதாவின் தாய்
- ஜே. பி. சந்திரபாபு - பட்டபிராமன்/சீதாராமன்/ஜானகிராமன்
- சித்தூர் வி. நாகையா - ஹரிதாஸ்
- கே. கண்ணன் - ஜம்பு
- ஹரிகிருஷ்ணன் - தலைமை காவல் அதிகாரி
- சேகர் - இளம்வயது இராஜா
- ஜெமினி பாலு -
- ஐ.எஸ்.ஆர் - மகிழ்நிலைய மேலாளர்
தயாரிப்பு
[தொகு]இது 1970 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ஜானி மேரா நாம் என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும்.[3] முதலில் இப்படத்தை ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்குவதாக இருந்தது, ஆனால் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இயக்கத்திலிருந்து விலகிவிட்டார். பின்னர் சிவாஜி கணேசன் சி. வி. ராஜேந்திரனை இயக்குநருக்காக பிரிந்துரைத்து இயக்கவைத்தார்.[4]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[5][6]
| பாடல் | பாடகர்/கள் | நீளம் |
|---|---|---|
| "கல்யாணப் பொண்ணு" | டி. எம். சௌந்தரராஜன் | 04.23 |
| "கங்கையிலே" | பி. சுசீலா | 04.07 |
| "இரண்டில் ஒன்று" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. வசந்தா | 04.16 |
| "நான் உயிருக்கு தருவது" | எல். ஆர். ஈசுவரி | 05.15 |
| "நீ வர வேண்டும்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04.26 |
மறுவெளியீடு
[தொகு]இப்படம் 2018 ஆம் ஆண்டு எண்ணியல் முறையில் மருவுருவாக்கம் செய்யப்பட்டு மே மாதம் வெளியிடப்பட்டது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "151–160". nadigarthilagam.com. Archived from the original on 4 March 2016. Retrieved 24 August 2014.
- ↑ "சிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்!". இந்து தமிழ் திசை. 20 November 2019. Archived from the original on 18 October 2022. Retrieved 18 October 2022.
- ↑ "செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 169– சுதாங்கன்" (in ta). தினமலர் (Nellai). 26 March 2017 இம் மூலத்தில் இருந்து 20 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180820104543/http://www.dinamalarnellai.com/web/news/24803.
- ↑ "சிவாஜி இல்லையென்றால்... – இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் பேட்டி" [If there is no Sivaji... – Director C. V. Rajendran interview]. தினமலர். 25 September 2011. Archived from the original on 18 October 2022. Retrieved 17 October 2022.
- ↑ "Raja (1972)". Raaga.com. Archived from the original on 7 September 2014. Retrieved 24 August 2014.
- ↑ "Raja Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 18 October 2022. Retrieved 18 October 2022.
- ↑ "Shivaji's 'Raja' is back in theatres". நியூசு டுடே. 25 May 2018 இம் மூலத்தில் இருந்து 28 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180528111748/https://newstodaynet.com/index.php/2018/05/25/shivajis-raja-is-back-in-theatres/.
