உள்ளடக்கத்துக்குச் செல்

கே. பாலாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. பாலாஜி
K. Balaji
பிறப்புகிருஷ்ணமாச்சாரி பாலாஜி
(1934-06-24)24 சூன் 1934
சென்னை,
(தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு2 மே 2009(2009-05-02) (அகவை 74) [1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வில்லன் பாலாஜி
கல்வி
பணி
  • திரைப்படத் தயாரிப்பாளர்
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1951–2009
அறியப்படுவதுபில்லா (1980)
பெற்றோர்கிருஷ்ணமாச்சாரி
ஜானகி தேவி
வாழ்க்கைத்
துணை
ஆனந்தவல்லி (இற. 1996)
பிள்ளைகள்சுரேஷ் பாலாஜி
சுஜாதா
சுசித்ரா மோகன்லால்
உறவினர்கள்

கே. பாலாஜி (K. Balaji, 24 சூன் 1934 – 2 மே 2009) பழம்பெரும் திரைப்பட நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கதாநாயகனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர். பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவரது அசாத்தியமான வில்லத்தனத்தை பாராட்டி இவருக்கு "பீமன் பாலாஜி" பொருத்தமான பெயரை வழங்கினர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பாலாஜியின் பூர்வீகம் கேரளா. தொடக்க காலத்தில் இவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் சுடூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஔவையார் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத் தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். மனமுள்ள மறுதாரம் (1958) படத்தில் கதைத் தலைவனாக நடித்தார்.

படத் தயாரிப்பு

[தொகு]

பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்சு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்தார். ஜெமினி கணேசன் கதைத் தலைவனாக நடித்த அண்ணாவின் ஆசை என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அதன்பிறகு சிவாஜி கணேசனை வைத்து தங்கை, என் தம்பி, திருடன், எங்கிருந்தோ வந்தாள், ராஜா, நீதி, என் மகன், உனக்காக நான், தீபம், தியாகம், நல்லதொரு குடும்பம் உள்பட 17 திரைப்படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டவர். கமல், ரஜினிகாந்த் ஆகியோரை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை அளித்துள்ளார் பாலாஜி. மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார்

பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி (கிரீடம் திரைப்படத்தைத் தயாரித்தவர்) என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். சுசித்ராவை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மணந்து இருக்கிறார்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்மொழி/குறிப்புகள்
1956மாதர்குல மாணிக்கம்தமிழ்
1958அன்பு எங்கேஇராமுதமிழ்
1959உத்தமி பெற்ற இரத்தினம்தமிழ்
1959சகோதரிதமிழ்
1960எங்கள் செல்விதமிழ்
1960மகாலட்சுமிதமிழ்
1960விடிவெள்ளிதமிழ்
1960புதிய பாதைதமிழ்
1960பார்த்திபன் கனவுதமிழ்
1960பாவை விளக்குதமிழ்
1961நாகநந்தினி தமிழ்
1961கப்பலோட்டிய தமிழன் தமிழ்
1961மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே தமிழ்
1961தூய உள்ளம் தமிழ்
1962போலீஸ்காரன் மகள்தமிழ்
1962பலே பாண்டியாஇரவிதமிழ்
1962படித்தால் மட்டும் போதுமாஇராஜூதமிழ்
1962எல்லோரும் வாழவேண்டும்தமிழ்
1962சுமைதாங்கிதமிழ்
1963ஆசை அலைகள்தமிழ்
1963ஏழை பங்காளன்தமிழ்
1963இருவர் உள்ளம்தமிழ்
1964என் கடமைதமிழ்
1964கறுப்புப் பணம்தமிழ்
1964 ஆண்டவன் கட்டளைதமிழ்
1964ரிஷ்யசிங்கர்தமிழ்
1964ஸ்கூல் மாஸ்டர் முரளிமலையாளம்
1964ஆட்டம் பாம் கோச்சுராகவன் பிள்ளைமலையாளம்
1965 அன்புக்கரங்கள்தமிழ்
1965 வீர அபிமன்யுதமிழ்
1965வாழ்க்கைப் படகுKannabiramதமிழ்
1965காட்டு ராணிதமிழ்
1966அண்ணாவின் ஆசைதமிழ்
1967பட்டணத்தில் பூதம்தமிழ்
1967மாடிவீட்டு மாப்பிள்ளைதமிழ்
1967தங்கைதமிழ்
1967இருட்டின்டி ஆத்மாவுசந்தரன்மலையாளம்
1967அதே கண்கள்மருத்துவர்தமிழ்
1968லட்சுமி கல்யாணம்இலட்சுமியின் கணவர்தமிழ்
1968ராகிணிமலையாளம்
1968என் தம்பிவிஸ்வம்தமிழ்
1968தில்லானா மோகனாம்பாள்தமிழ்
1969சாந்தி நிலையம்தமிழ்
1969திருடன்ஜெகன்நாத்தமிழ்
1969குருதட்சணைதமிழ்
1970எங்க மாமாதமிழ்
1970எங்கிருந்தோ வந்தாள்தமிழ்
1970எதிர்காலம்தமிழ்
1970சொர்க்கம்தமிழ்
1971வெகுளிப் பெண்தமிழ்
1972வசந்த மாளிகைதமிழ்
1972கண்ணம்மாதமிழ்
1972தாய்க்கு ஒரு பிள்ளைதமிழ்
1972ராஜாதமிழ்
1972நீதிதமிழ்
1974என் மகன்ஜெகதீஷ்தமிழ்
1975ஆயிரத்தில் ஒருத்திகோபிதமிழ்
1975சுவாமி ஐயப்பன்மலையாளம்
1976வாழ்வு என் பக்கம்மூர்த்திதமிழ்
1978தியாகம்தமிழ்
1979சுரக்சா' மருத்துவர் சிவாஇந்தி
1979அமர் தீப்விருந்தினர் தோற்றம்இந்தி
1980பில்லாதமிழ்
1980ஜானிகாவல் அதிகாரிதமிழ்
1981தீஜெகதீஷ்தமிழ்
1981சவால்பாபா சேக்தமிழ்
1983ஜஸ்டிஸ் ராஜாமலையாளம்
1983சட்டம்தமிழ்
1986விடுதலைதமிழ்

இறப்பு

[தொகு]

2009, மே 2 மாலை 5 மணிக்கு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் பாலாஜி இறந்தார். இறக்கும் போது இவருக்கு வயது 74.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Actor-producer K Balaji passes away". சிஃபி. 3 May 2011. Archived from the original on 9 January 2014. Retrieved 22 October 2011.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பாலாஜி&oldid=4514717" இலிருந்து மீள்விக்கப்பட்டது