சிவப்பு மல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு மல்லி
இயக்கம்இராம நாராயணன்
தயாரிப்புஎம். பாலசுப்பிரம்ணியன்
பால சுப்பிரமணியன் கம்பனி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயகாந்த்
அருணா
வெளியீடுஆகத்து 15, 1981
நீளம்3603 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிவப்பு மல்லி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், அருணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது 1981 ஆம் ஆண்டு வெளியான எர்ரா மல்லேலு என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். ஒரு கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவர்களுக்கு எதிராகவும், பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கும் ஆலை உரிமையாளருக்கும் எதிராக குரல் கொடுக்கும் இரு இளைஞர்களை சுற்றியதாக இதன் கதை உள்ளது. இப்படம் 15, ஆகத்து, 1981 அன்று வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_மல்லி&oldid=3746509" இலிருந்து மீள்விக்கப்பட்டது