உள்ளடக்கத்துக்குச் செல்

ஞான ஒளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஞானஒளி
ஞான ஒளி
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புசங்கரன் ஆறுமுகம்
ஜெயார் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
விஜய நிர்மலா
சாரதா
ஸ்ரீகாந்த்
வெளியீடுமார்ச்சு 11, 1972
ஓட்டம்.
நீளம்4356 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஞானஒளி (Gnana Oli) என்பது 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வியட்நாம் வீடு சுந்தரம் திரைக்கதை எழுதிய இப்படத்தை பி. மாதவன் இயக்கினார்.[1] இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன்[2][3], விஜய நிர்மலா, சாரதா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்தனர். எம். ஆர். ஆர். வாசு உட்பட மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது விக்டர் ஹியூகோவின் 1862 ஆம் ஆண்டு புதினமான லெஸ் மிசரபிள்ஸின் தழுவல் ஆகும்.[4][5] இந்த படம் இந்தியில் தேவதா (1978) [6], தெலுங்கில் சக்ரவர்த்தி (1987)[6] என மறுஉருவாக்கம் செய்யப்பட்டது.

கதைக்களம்

[தொகு]

முன்னாள் குற்றவாளியான ஆண்டனி தன் மகளின் காதலனைக் கொன்றுவிட்டு நாட்டைவிட்டுத் தப்பிச் செல்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கௌரவமிக்க மனிதராக அருண் என்ற பெயரில் நாட்டுக்குத் திரும்பி வருகிறார். ஆனால் ஆண்டனியின் நண்பரான லாரன்ஸ் முன்னாள் குற்றாவாளியான அவரை அடையாளம் கொள்கிறார். ஆண்டனி மீது பல குற்றச் செயல்கள் உள்ளதால் அவரை அம்பலப்படுத்தி கைது செய்ய முயல்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே கதையாகும்.

நடிப்பு

[தொகு]

இசை

[தொகு]

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, பாடல் வரிகளைக் கண்ணதாசன் எழுதினார்.[8][9]

பாடல் பாடகர் நீளம் குறிப்பு
"அம்மாக்கண்ணு சும்மா சொல்லு ஆசையில்லையோ" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 03:19
"தேவனே என்னைப் பாருங்கள்" டி. எம். சௌந்தரராஜன் 05:01
"மணமேடை மலர்களுடன் தீபம்" பி. சுசீலா 03:50
"உள்ளம் போ என்றது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈசுவரி இசைத்தட்டில் உள்ளது, படத்தில் இடம்பெறவில்லை

வரவேற்பு

[தொகு]

ஞான ஒளி 1972 மார்ச் 11 அன்று வெளியானது.[10] திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்றது.[11] சிவாஜி கணேசனுக்கு தமிழில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது.[12]

பரவலர் பண்பாட்டில்

[தொகு]

இப்படத்தில் இடம்பெற்ற "தேவனே என்னைப் பாருங்கள்" பாடலின் இடையில் இடம்பெற்ற ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்றுவிட்டன மீண்டும் சந்திக்கும்போது பேச முடியவில்லையே என்ற சொற்றொடர் நகைச்சுவைக்கும், மீம்ஸ் எனப்படும் சுட்டனுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A veteran reminisces ...". தி இந்து. 11 March 2005 இம் மூலத்தில் இருந்து 17 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120917180926/http://www.hindu.com/fr/2005/03/11/stories/2005031102080500.htm. 
  2. "'Major' Sundararajan dead". தி இந்து. 1 March 2003. Archived from the original on 10 July 2012. Retrieved 6 June 2011.
  3. "He played 300 different roles". தி இந்து. 4 November 2002. Archived from the original on 26 January 2013. Retrieved 6 June 2011.
  4. "Ezhai Padum Paadu 1950". தி இந்து. 2 November 2007. Archived from the original on 3 January 2013. Retrieved 6 June 2011.
  5. Vamanan (9 August 2016). "Turns, twists and drama ruled Sundaram's life and films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 29 January 2020. Retrieved 1 January 2021.
  6. "Sanjeev Kumar's Southern Connection". அனுபமா சோப்ரா (in ஆங்கிலம்). 9 July 2022. Archived from the original on 5 April 2024. Retrieved 5 April 2024.
  7. "Classic Pick: Gnana Oli". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 December 2008 இம் மூலத்தில் இருந்து 4 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180704110026/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrintGifMSIE_PASTISSUES2&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2008/12/05&ChunkNum=0&ID=Ar04500. 
  8. "Gnana Oli (1972)". Raaga.com. Archived from the original on 25 June 2014. Retrieved 25 June 2014.
  9. "Gnana Oli ( EP 45 RPM )". AVDigital. Archived from the original on 1 July 2021. Retrieved 1 July 2021.
  10. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. Retrieved 21 April 2023.
  11. Ganesan, Sivaji; Narayana Swamy, T. S. (2007) [2002]. Autobiography of an Actor: Sivaji Ganesan, October 1928 – July 2001. Sivaji Prabhu Charities Trust. p. 242. கணினி நூலகம் 297212002.
  12. The Times of India Directory and Year Book Including Who's who. Bennett Coleman & Co. Ltd. 1984. p. 234. Retrieved 1 July 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞான_ஒளி&oldid=4340944" இலிருந்து மீள்விக்கப்பட்டது